pls advise

Hi sisters pls clarify my doubt ippo 5mth started indian toilet use pannalama ,illa western toilet use pannanuma,indian toilet use pannunum pothu stomachla pressure agarathala yethavathu problem varum,do not take mistake pls reply payama irukku pls.

:-) என்ன விதமான சந்தேகம் இது! இப்படியெல்லாம் கூடவா சந்தேகம் வரும்!

வீடுகளில் 'டாய்லெட்' இல்லாமல் வடலிக்கும் நொச்சிப்பற்றைக்கும் பின்னால் மக்கள் ஒதுங்கிய காலத்திலும் கூட சுகப் பிரசவங்கள் ஆகி இருக்கின்றன இல்லையா!

'ஏவாள்' என்ன பண்ணி இருப்பாங்க என்று யோசிக்கிறேன்! அவங்க காலத்துல கம்பேர் பண்ண இந்தியாவும் இல்லை; வெஸ்டர்ன் டாய்லட்டும் இல்லை. கேள்வி கேட்க அறுசுவையும் இல்லை; ஆங்கிலமும் இல்லை. ப்ரஷர் பற்றியும் தெரிந்திராது.

முடிவாக... //indian toilet use pannalama// தாராளமாக.
//stomachla pressure agarathala yethavathu problem varum,// இல்லை. மணிக்கணக்காக உட்கார்ந்து இருக்கப் போவது இல்லை. நிச்சயம் எதுவும் ஆகாது.
உட்கார எழச் சிரமமாக இருந்தால் அருகே பிடித்துக் கொள்ள ஏதாவது வைத்துக் கொள்ளுங்கள். அல்லாவிட்டால் மேலிருந்து ஒரு கயிற்றைக் கட்டி விடலாம்.

//payama irukku pls.// ம். புரியுது. சும்மா தொட்டது பட்டதுக்கெல்லாம் பயப்படக் கூடாது. சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் இப்படி யோசிக்கப் படாது. ஆனால் பயம் வந்தால்... யாரும் ஏதாவது நினைப்பார்கள் என்கிற பயம் இல்லாமல் இங்கே வந்து கொட்டிருங்க. மனசுல வைச்சு குழம்பிட்டு இருக்க வேண்டாம். சரிதானே! இன்னுமொன்று... இப்படி 'ப்ளீஸ் அட்வைஸ்' என்று தலைப்பு இல்லாத தலைப்பில் ஒரு புதிய இழை தொடங்க அவசியம் இல்லை. ஏற்கனவே உள்ள பொருத்தமான இழை ஒன்றில் கேள்வியைப் பதிவு செய்யுங்கள். உங்கள் பதிவிற்கான தலைப்பை சரியாகப் போடுங்கள்.

சந்தோஷமா இருங்க சத்யா.

‍- இமா க்றிஸ்

Thappa ninaigathinga akka thanks for your reply akka.

மேலும் சில பதிவுகள்