மழையுடன் ஒரு நாள்.

சென்னையில் மழை. இனி தீபாவளி தீபாவளியா போச்சு. நாலு நாளா வெளுத்து கட்டுது. 3நாள் முன்னாடி துவைச்சு வச்ச துணி இன்னும் மொட்டை மாடிலயே உலருது? ;)

இந்த நேரத்துல வாஷிங்மிஷின் ரிப்பேர்ராகி என்னய பழி வாங்குது. அவர் எனக்கும் இதுக்கு சம்பந்தம் இல்லன்ற மாதிரியே போய்ன்னு இருக்காரு. ( என்ன கொடுமை சரவணன் இது) .

சரி நம்ம புலம்பல் எதுக்கு. சென்னை எப்படி இருக்கு மழைல. அச்சோ 4நாள் மழைக்கு வெள்ளக்காடா இருக்கு. தீபாவளிக்கு நிறைய பட்டாசு கடை திறந்துருக்காங்க. நிச்சயம் பட்டாசு வாங்கற கூட்டம் கம்மிதான். திநகர்ல நடைப்பாதை  வியாபாரம் ரொம்ப ஜருரா நடக்கும். இப்ப கொஞ்சம் அவங்களுக்குலாம் கஷ்டம்தான். ஆனா திநகர், புரசைவாக்கம் கூட்டம் கொஞ்சம் கூட குறையல. என்னவர் கூட கடைக்கு போய்ட்டு கடைசில கூட்டத்தை பார்த்துட்டு எதுவும் எடுக்காமயே திரும்பிட்டோம் வீட்டுக்கு. அப்பறம் அவரை விட்டுட்டு நேத்து நானும், என் தோழியும் போய் எடுத்து வந்துட்டோம்.

மழையில் ஒரு நாள் என்னோட பயணம். சனிக்கிழமை அன்னைக்கு ரிலேஷன் வீட்டுக்கு கிளம்பி போய் நல்லமழைல மாட்டிக்கினோம். வண்டிய மழைலயே ஒரு பக்கமா நிறுத்திட்டு பஸ்நிறுத்தம்ல ஒரு பக்கம் நின்னுட்டோம். நான் ரசனையோடு, அவர் எரிச்சலோடு. :) அப்ப கிளிக்கிய போட்டோ இது.

கிட்டதட்ட மழை குறைய 2மணிநேரம் ஆனது. நாங்க நின்ன இடத்துக்கு பக்கத்துல இருந்த மரத்துல ஒரு கிளை முறிந்து விழுந்தது. நல்ல வேளை ஒரு கார் கொஞ்சம் வேகமாய் வந்துருந்தா அதுமேல விழுந்துருக்கும். நல்ல நடுரோடு கொஞ்சம் கொஞ்சமா வண்டிங்க ஓரமா ஒதுங்கி போக ஆரம்பிச்சுது. போலீஸ் வண்டி உள்பட யாருக்கும் ஓரமா எடுத்துபோட மனசு வரல. டிராபிக் ஆக ஆரம்பிச்சுது. எல்லாருக்கும் மழையில் வீடு போக அவசரம். சரி நின்று பார்த்துட்டு இருந்து என்னவர் எடுத்து ஓரமாக போட்டார். அடுத்து எல்லா வண்டிகளும் வேகம் எடுக்க ஆரம்பித்தது.

சரி சிறு தூறலுடன் மழை பயணத்தை தொடர்ந்தோம். போகும் வழியில் முன்னாள் முதல்வர் வருகைக்காக மழையில் நனைந்தபடி ஆட்டம்,பாட்டத்துடன் மக்கள் வெள்ளம் காத்திருந்தது. அங்கங்க போலிஸ்சும் நின்றபடி வண்டிகளை நிறுத்தி அவர்களால் முடிந்த அளவுக்கு டிராபிக் ஆக்கினார்கள்.
அன்று நம்ம ரேவ் வீட்டுக்கு சர்ப்ரைஸ்சா போலாம்ன்னு பிளான் பண்ணிருந்தேன். ஆனா முடியல மழை& டிராபிக். அப்பறம் எங்க போறது. :(

அப்பறம் மழையில் நனைந்து குளிர் எடுக்க ஆரம்பிச்சுடுச்சு. இதுக்கெல்லாம் பயப்படலாமா. இன்னொரு நாள் எனக்கு மழைல நனையற சான்ஸ் கிடைக்காதே.

மழையில் நனைந்து போற விதவிதமான மக்கள். தனக்கு பிடித்தவர் வருகைக்காக மழையை பொருட்படுத்தாத மக்கள். வீட்டுக்கு போக தாமதமானாலும் வழியில் மழையில் நனைந்து தடையை எடுத்துபோட தயங்கும் மக்கள். மழையால் வியாபாரம் கெட்டு வாடிவருந்தும் மக்கள். மழை என்று பாராமல் என்னைப்போலவே கிளம்பி வழியில் மழை நிற்க காத்திருக்கும் மக்கள். ஒதுங்க இடம் இல்லாமல் இடம் தேடி ஓடும் மக்கள். ஒரு மழை விதவிதமான பிரதிபலிப்பு ரசித்துக்கொண்டே வீடு போய் சேர்ந்தேன். ;)

மழையோடு சேர்ந்து இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

5
Average: 5 (3 votes)

Comments

ஊரை பற்றி அப்டேட் பண்ணதுக்கு தேன்க்ஸ் :) 3 நாளைக்கு பின் இன்று காலை தான் வீட்டுக்கு பேசினேன், நல்ல மழை பள்ளிகள் விடுமுறை என்றார்கள். ஆச்சர்யமா இருந்தது, அவ்வளவு மழையான்னு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மழையுடன் ஒரு நாள் ப்பா சென்னை ய‌ பத்தி முழு வானிலை அறிக்கை...

சூப்பர் ரேவ்ஸ் அக்கா...
இந்த‌ கஷ்டம் ல‌ தினம் தி.நகர் ல‌ தான் வேலயே ...

ரொம்ப‌ நாஸ்த்தியா இருக்கு அக்கா ரங்கநாதன் தெருநடக்க‌ முடியல‌..

இன்னைக்கு காலைலயும் அதே வழி தான் ஆனா இன்னைக்கு மட்டும் ஆட்டோ ல‌ வந்தததால‌ தப்பிச்சுட்டேன்...
நீங்க‌ ஃபிரீயா இருந்தா முகபுத்தகத்துல‌ ஒரு மெசேஜ் போடுங்க‌ அக்கா நான் பாக்குறேன் ...

அது சரி அந்த‌ படத்துல‌ இருக்குற‌ இடம் அண்ணா யூனிவர்சிட்டி ரோடு ஆ..?

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அன்பு ரேவா
எனக்கு மிதமான‌ சாரலில் நனைந்து கொண்டே செல்லப் பிடிக்கும்.:) வானம் பன்னீர் தெளிப்பது போல‌ நினைப்பு.
நல்லா ரசிச்சு எழுதியிருப்பது தெரியுது.
சாலையின் குறுக்கே விழுந்த‌ மரக்கிளையை நகர்த்தியது பாராட்டத்தக்கது,
நானும் தெருவில் செல்லும் போது தண்ணீர்க் குழாய் திறந்து தண்ணீர் வீணாகக் கொட்டினால் பார்க்கப் பொறுக்காமல் நிறுத்தி விட்டு செல்லுவேன்:)
தீபாவளி வாழ்த்துக்கள் ரேவா

ஹா ஹா வனி. ஒரே நாள்ள 16செமீ மழை பெய்து ரெக்கார்ட் பிரேக்.

Be simple be sample

எப்ப கனி ரங்கநாதன் தெரு நல்லாருந்துருக்கு. ஆமா கனி அந்தபக்கம்தான் கிளிக்கியது.

Be simple be sample

தான்க்ஸ் நிகி. எனக்கும் இதுபோல தண்ணிர் வீணானால் பிடிக்காது.நல்ல ரசனை நிகி உங்களுக்கு.

Be simple be sample

ரேவ் இங்க இன்னிக்கு மழை இல்லை :) உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

தான்க்யூ அருள்

Be simple be sample

ரேவ்ஸ் மழையை நல்லா ரசிச்சிறுக்கீங்க‌! எனக்கு மழைன்னா கொஞ்ஞம் அலர்ஜி.....:))))

இங்கேயும் மழைதான்.....மழையும், குளிரும் தாங்கமுடியலை....

தீபாவளி சீசன்னாலே எப்பவுமே மழைதான் இல்லையா? மழையுடன் தீபாவளியை நன்றாக‌ ரசித்து கொண்டாடுங்கள், வாழ்த்துக்கள்.....

///நான் ரசனையோடு, அவர் எரிச்சலோடு.//// அடுத்த‌ கவிதை ரெடியாகுதா?....:)))

தான்க்ஸ். அனு. இன்னைக்கும் மழை பசங்களுக்கு அப்பவும் பட்டாசு ஆசை தீராம வெடிச்சு என் ஜாய் பண்ணாறாங்க.

Be simple be sample

மழை கிட்ட தப்பிக்காத மாவட்டம் ஏதுமில்லைங்க இந்த வருஷம்.
இங்கேயும் நல்ல மழைதான்ங்க. ரொம்ப ரசிச்சு எழுதியிருக்கீங்க :-)

நட்புடன்
குணா

தீபாவளிக்குன்னு ஊருக்கு போயிட்டு பழையுடந்தான் 5 நாட்களும் சென்றன‌. பண்டிகையன்று கொஞ்சநேரமேனும் மழை நின்று வெயில் வந்ததால் பிள்ளைகள் கொண்டாடினர். இல்லைன்னா நம்ம‌ தலை பிச்சுக்கிட்டிருந்திருக்கனும். திரும்பி வரும்போதும் நல்ல‌ மழை ரோட்டில் பாலம் கடந்து வெள்லம். மலைப்பாதையில் மரங்களின் விழுகை, மண் சரிவுன்னு தாண்டி இதோ இன்றுதான் அறுசுவை பார்த்து தட்டுறேன்.
தப்பா நினைக்காம‌ தீபாவளி வாழ்த்துக்களை எடுத்துக்கோங்க‌.

மழையுடன் ஒரு நாள் அனுபவிச்சு எழுதியிருக்கீங்க ரேவ்ஸ் சூப்பர் :)

/நான் ரசனையோடு, அவர் எரிச்சலோடு. :)/ சத்தியமா உங்களால மட்டும் தான் முடியும் ரேவ்ஸ் ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.