பால் பொங்கல்

தேதி: January 14, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - ஒரு கப்
பாசிப்பருப்பு - கால் கப்
பால் - 4 கப்
தண்ணீர் - சிறிதளவு
வெல்லம் - 2 கப்
நெய் - தேவையான அளவு
முந்திரி - 10
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு


 

வாணலியில் பருப்பை போட்டு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
பின் அரிசியை போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். பிறகு தண்ணீரில் களைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
பின் காய்ச்சிய பால், சிறிதளவு தண்ணீர், 2 தேக்கரண்டி நெய் விட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லம், சிறிது தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும்.
வெல்லம் நன்கு கரைந்தவுடன் வடிகட்டிக் கொள்ளவும்.
கனமான கடாயில் வடிகட்டிய பாகு, நெய், ஏலக்காய்த்தூள், வேக வைத்தவை சேர்த்து கிளறி கொண்டு இறக்கவும்.
ஒட்டாத பதம் வந்த பின் வறுத்த முந்திரி, சிறிது நெய் சேர்த்து இறக்கவும்


மேலும் சில குறிப்புகள்