சிரியா - நிறைவுப் பகுதி - அறுசுவை பயணக்கட்டுரை பகுதி - 29664

Syria

சிரியா - நிறைவுப் பகுதி

ஒரு வார இறுதியில் சிரியாவில் இருக்கும் ஒரு சின்ன மலைக்கு போயிருந்தோம். பெயர் ப்லூதான்(Bludan). ஆஹா.... காணக் கண் கோடி வேண்டும்... என்னவென்று சொல்ல இயற்கையின் அழகையும் அற்புதத்தையும்?! பாலைவனத்தின் நடுவே இத்தனை பசுமையான நீர் வளம் மிக்க இடமா??!! இந்த நாடே தோன்றியது அந்த இடத்தின் வளத்தை நம்பி தான் போலும்!!! அத்தனை பசுமை, இயற்கையின் செழிப்பு. பார்க்க அங்கு வேறு என்ன இருக்கு? ஒண்ணுமில்லை. நாங்க இருக்கும் இடத்தில் இருந்து 1 மணி நேர பயணம். காலை சமைத்தோம், எடுத்துக் கொண்டு கிளம்பி ப்லூதான் போனோம். அழகான மலை உச்சிக்கு சென்று தனியே ஒரு இடத்தில், அமைதியான சூழலில் உட்கார்ந்தோம். சுற்றிலும் அழகான மலைகள். அதில் சிலவற்றில் இந்த வெய்யிலிலும் ஸ்நோ. காண வரிகுதிரை போல் அழகாக இருந்தது. ப்லூதானும் அப்படி தான்... குளிர் காலத்தில் இங்கும் ஸ்நோ நிறைய இருக்கும். அதை காணவும், விளையாடவுமே இங்கு நிறைய பேர் வருவார்கள். வெயில் காலத்திலும் அந்த மலை உச்சி சில்லென்று இருந்தது. சில மணி நேரம் அமைதியாய் உட்கார்ந்து இயற்கையை ரசித்துவிட்டு நம்ம ஊர் சாப்பாட்டை ஒரு பிடி பிடிச்சிட்டு கிளம்பினோம். வழி முழுக்க நிறைய உணவு விடுதிகள். அதுவும் ப்லூதானின் ஒரு முக்கிய அம்சம். இங்கு பல சுற்றுலா பயணிகள் வருவதே பல நல்ல அரபு நாட்டு உணவை சுவைக்க தான். வழி முழுக்க பழத்தோட்டம்.... ஆகா ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, செர்ரி, ப்லம்ஸ்.... ம்ம்... அடுக்கிட்டே போலாம்.... அதுவும் செர்ரி பார்க்கவே அழகு. திமாஸ்க்கு உயிராக இருக்கும் பராதா நதி தோன்றுவது இந்த மலையில் இருந்து தான். பார்க்கவே அழகான அந்த மலையை விட்டு வரவே மனமில்லாமல் வந்தோம். :)

நாட்டை விட்டு கிளம்பும் முன் நாங்கள் சுற்றி பார்த்த இடம் "போஸ்ரா"(Bosra). மிகவும் அழகான ரோமன் காலத்து நகரம். நிறைய பழுதாகி இருந்தாலும் இப்போது இருப்பதே மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். சிரியாவில் இருக்கும் ரோமன் காலத்து நகரிலேயே இது தான் மிகவும் பெரியது. இதன் முக்கியத்துவம்... மெக்கா செல்லும் மக்களுக்கு முக்கிய பாதையாக இருந்திருக்கிறது. இங்கே காணப்படும் ஆம்பிதேட்டர் தான் இருப்பதிலேயே பெரியது என்றும் சொல்கிறார்கள் (15000 மக்கள் அமரக் கூடியது). மிகவும் அழகான அரங்கம். க்ரூசேட் நடந்த நேரத்தில் இதை பிடிக்க முயற்சி செய்ய கூடாது என்பதற்காக ஆம்பிதேட்டரை சுற்றிலும் கோட்டை அமைக்க பட்டிருக்கிறது. ரோம் காலத்து நகரம் இடிபட்டு இருந்தாலும், இந்த கோட்டையும் ஆம்பிதேட்டரும் இன்றும் அட்டகாசமாக நிற்கிறது. போஸ்ரா சுற்றி இருக்கும் பல சின்ன ஊர்களில் இன்றும் இடை இடையே பழைய ரோம் காலத்து நகரின் வேலைப்பாடுகளை காண முடியும். இந்த நகருக்குள் ரோமன் பாத்கள், மசூதிகள் எல்லாம் இன்றும் அழகாக இருக்கும்.

அடுத்ததாக சிரியா வரும் அனைவரும் விரும்பி போக கூடிய இடம் "லதாகியா"(Latakia). இது ஒரு கடலோர பகுதி. அழகான பீச் தான் இதன் சிறப்பு. இது அலெப்போ நகருக்கு அருகே உள்ளது. இதன் அருகே இருக்கும் முக்கியமான இடம் "சலாஹுதின் கோட்டை". நம்ம சலாஹுதின் போகாத இடமே இல்லை, பிடிக்காத ஊரே இல்லை. ஒரு மலை உச்சியில் மிக பிரம்மாண்டமான கோட்டை இது. லதாக்கிய போகும் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய அழகான வரலாற்று சிறப்பு மிக்க இடம்.

இதைவிடவும் அழகான (சினிமா'ல பார்க்கிற மாதிரி லொகேஷன்) வேணும் என்றால் போக வேண்டிய இடம் லதாகியா அருகே இருக்கும் "கசப்" (Kassab) தான். அழகான மலை பகுதி... ஆனால் சில இடங்களில் கடல் மட்டத்தை தொடும்.... அங்கு காண அழகான பீச்.... பார்க்கவே பிரமிப்பாக இருக்கும். வெயில் காலத்தில் ப்லூதான் போல் இங்கு இருக்கும் மக்களுக்கு ஊட்டி இது தான்.

-முற்றும்-

அன்று நான் ரசித்த சிரியாவின் அழகு இன்று இல்லை. சில படங்களுக்காக தேடும் போது இன்றைய நிலையை காணவும் மனம் பதறுகின்றது. நாடு, மதம், பவர் என எந்த காரணத்துக்காக நடந்தாலும் நடக்கும் அழிவுகள் மகிழ்ச்சி அளிப்பதில்லை. இவற்றை உருவாக்க பல காலம் ஆயிற்று, வரலாற்று சிறப்பு மிக்க அந்த இடங்களை இயற்கை அழித்தது போக மீந்தவற்றை காப்பற்றி பாதுகாக்க இத்தனை காலம் பாடுபட்டவர்கள் ஏகம். ஆனால் இன்று ஆயுதங்களின் சக்தியால் ஒரு நொடியில் அவற்றை அழிக்கும் மனிதர்களை நினைக்கும் போது...!!! சொல்ல வார்த்தை இல்லை. அழிப்பது எளிது... மீண்டும் உருவாக்குவது இயலாத ஒன்று.

அன்பான தோழமைகளின் பின்னூட்டமே என்னை ஊக்குவித்து சிரியா பற்றி எழுத வைத்தது. அன்று மன்றத்தில் வெளியாகி தோழமைகளின் ஆதரவை பெற்றதே தனி பகுதியாக வெளிவரவும் காரணமானது. எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை தந்த அறுசுவைக்கும், அட்மினுக்கும், தோழமைகளுக்கும் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து இந்த பகுதியை படித்து கருத்திட்டு உற்சாகமூட்டிய அனைவருக்கும் நன்றி நன்றி. உங்களால் என் நினைவுகளில் மீண்டும் அழகிய சிரியாவை காண்கிறேன், மகிழ்கிறேன். மீண்டும் வேறு நாடு பற்றிய பதிவுகளோடு சந்திப்பேன்.
vani

அழகான படங்களுடன் அழகான ரசனையொட எழுதி முடிச்சிட்டிங்க. முடிந்தது வருத்தம். இன்னும் பல பயணங்கள் எழுதி தொடர வாழ்த்துக்கள்.

Be simple be sample

வனி சிரியா பத்தி நீங்க

வனி சிரியா பத்தி நீங்க சொல்லியிருக்கிரத பார்த்தா அதன் அழகை எவ்வளவு ஆழமா ரசிச்சி அதனை ரசனையோடு அழகாக சொல்லியிருகீங்க வாழ்த்துக்கள்

Vani akka

உங்கள் சிரியா அனுபவம் முழுவதையும் நான் காபி செய்து வைத்து இருக்கிறேன். ஒரு அழகான‌ புத்தகம் போல ப‌டிக்கும் போதெல்லாம் இனிய‌ உணர்வு ஏற்படுகிறது. உங்கள் அழகான‌ எழுத்து நடை தொடர்ந்து படிக்க‌ தூண்டுகிறது. உங்கள் அனுபவங்களை புத்தகமாக‌ எழுத‌லாமே! அடுத்தடுத்த‌ நாடுகள் பற்றி நீங்கள் எழுதுவதைப் படிக்க‌ ஆவலோடு காத்திருக்கிறேன். : )
அன்புடன்
தயூ

நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!

வனி

படங்கள் எல்லாமே கொள்ளை அழகா பார்க்கத் தூண்டும் விதமா இருக்கு.
அழகா கோர்வையா சொல்லி நல்லா சுற்றிக் காட்டினீங்க‌.
//அழிப்பது எளிது... மீண்டும் உருவாக்குவது இயலாத ஒன்று.// உண்மை தான் வனி. உருவாக்க‌ இயலாதவர்க்கு அழக்க உரிமையும் இல்லை. இருப்பதைப் பாதுகாத்து பொக்கிஷமாக‌ வைக்கணும்.
அருமையான‌ தொடர். நிறைவு.
இன்னும் அடுத்த‌ தொடருக்கு காத்திருக்கிறோம்:)

வனி

இந்த‌ ப்லூதான்(Bludan) பற்றி படிக்கும்போது, எகிப்தின் நைல் நதி ஞாபகத்துக்கு வருது.....ஃபோட்டோவைப் பார்க்கும்போதே தெரிகிறது எவ்வளவு பசுமையாக‌ இருந்திருக்கும் என்று!

அடுத்த‌ ஃபோட்டோவில் இருக்கும் ஆம்பிதியேட்டரும் அருமையாக‌ இருக்கு.....எத்தனை விதமான‌ Technical வசதிகளுடன் எவ்வளவு பெரிய‌ பெரிய‌ தியேட்டர்கள் வந்தாலும், இந்த‌ வரலாற்று சிறப்பு மிக்க‌ ஆம்பிதியேட்டர்கள் தான் சிறப்பு இல்லையா?

///அன்று நான் ரசித்த சிரியாவின் அழகு இன்று இல்லை. சில படங்களுக்காக தேடும் போது இன்றைய நிலையை காணவும் மனம் பதறுகின்றது. நாடு, மதம், பவர் என எந்த காரணத்துக்காக நடந்தாலும் நடக்கும் அழிவுகள் மகிழ்ச்சி அளிப்பதில்லை.// மனிதர்களை கொன்று, இயற்கையை அழித்து,வரலாற்று சின்னங்களை நாசம் செய்து இவர்கள் எந்த‌ சுவர்க்கத்தை அடைய‌ பாடுபடுகிறார்களோ! தெரியவில்லை?

மேலும் வரவிருக்கும் உங்கள் பயணக் கட்டுரைகளைப் படிக்க‌ ஆர்வமாக‌ காத்திருக்கிறேன்....

vani akka siriya

Siriya payanam mudinchathu remba varuthama eruku . adutha payanam eppa?. Fast a adutha country ku kootitu ponga.
Pics ellam remba arumaiya eruku ."parkka kan kodi vendum" unmai than. Ungalala nangalum sernthu parthu rasikirom, thank u.
Adutha payanam thodara waiting........

.

ரம்யா ஜெயராமன்

வனிதா'ங்க

சிரியா நாட்டைப்பற்றி நன்கு தெரிந்து கொள்ளும் வகையில் உங்கள் பதிவுகள் அத்தனையும் மிக அருமையாக இருந்தது. இந்தப்பதிவும், படிக்கும்போது சுவாரஸ்யமாக இருந்தது. பதிவில் படங்களை காணும்போது பெரும் பிரம்மிப்பாக இருந்தது. ரொம்ப நன்றிங்க :-)

நட்புடன்
குணா

வனி

வனி பனிபடர்ந்த இடங்களை பார்க்க பார்க்க அழகா இருக்கு :) அந்தந்த இடத்தின் வரலாற்று சிறப்புகளையும் அழகுற எடுத்துக்கூறி இருக்கீங்க. நல்லதொரு இனிமையான, மனதுக்கு நிறைவான பயணக்கட்டுரை. அடுத்த பயணத்திற்கு ஆயத்தமாகிட்டேன். விரைவில் எழுதுங்க, வாழ்த்துக்கள் வனி :)

//அழிப்பது எளிது... மீண்டும் உருவாக்குவது இயலாத ஒன்று. // முற்றிலும் உண்மை :(

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சிரியா - நன்றி டீம்

எங்கையோ காணாம போக வேண்டிய மன்ற இழையை ஒரு பகுதியா கொண்டு வந்து அதுக்கு நல்ல ரீடர்ஸையும் மீண்டும் கிடைக்க வெச்சது நீங்க தான். அழகான படங்களோடு ஒவ்வொரு முறையும் பகுதிகளா வந்த போது நான் மீண்டும் சிரியாவை நேரில் பார்த்த உணர்வு, மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. நன்றி நன்றி... மனமார்ந்த நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேவ்ஸ்

முடிஞ்சுருச்சேன்னு எனக்குமே வருத்தம் தான் :) என்ன பண்ண... ஒரு பகுதியை எவ்வளவு நாள் நாமே எழுத முடியும்? மற்றவர்கள் எழுதி அந்த புது இடங்கள் பற்றியும் தெரிஞ்சுக்கணும் தானே ரேவ்ஸ் :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா