பொட்டேட்டோ கோஃப்தா பிரியாணி

தேதி: October 28, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

பிரியாணிக்கு :
அரிசி - 2 கப்
தண்ணீர் - 4 கப்
பட்டை - 2
கிராம்பு - 4
சோம்பு - அரை தேக்கரண்டி
முந்திரி - 3 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று
இஞ்சி,பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
கோஃப்தாவிற்கு :
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2 (நடுத்தரமான அளவில்)
இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காய விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி (காரம் தேவையெனில்)
மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
தயிர் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மல்லி, புதினா இலைகள் - சிறிது


 

பிரியாணிக்கு வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும். முந்திரியை இரண்டாக உடைத்துக் கொள்ளவும். அரிசியைக் களைந்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, சோம்பு, கிராம்பு போட்டு தாளிக்கவும். பிறகு முந்திரியைப் போட்டு லேசாக சிவக்கவிட்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் லேசாக சிவந்ததும் இஞ்சி, பூண்டு விழுது மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசனை போனதும் உப்பு சேர்த்து, தண்ணீர் (ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் என்ற அளவில்) ஊற்றிக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்ததும் உப்பு சரிபார்த்து, அரிசியைச் சேர்த்து 2 விசில் வர விட்டு இறக்கவும்.
கோஃப்தா தயாரிக்க மசித்த உருளைக்கிழங்குடன் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாக உருட்டவும்.
மீதிமுள்ள பூண்டைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மல்லி மற்றும் புதினா இலைகளையும் நறுக்கி வைக்கவும். தயிருடன் மல்லித் தூள் மற்றும் சீரகத் தூளைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு பொரித்தெடுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு போட்டு வதங்கியதும், மல்லி மற்றும் புதினா இலைகளைப் போட்டு, பொரித்த உருண்டைகளைப் போடவும்.
பிறகு தயிர் கலவையைச் சேர்த்து, கரண்டியால் பிரட்டாமல் லேசாகக் குலுக்கிவிடவும். அத்துடன் சாதத்தைச் சேர்த்து, சிம்மில் 2 நிமிடங்கள் வைத்திருந்து அடுப்பை அணைக்கவும்.
சுவையான பொட்டேட்டோ கோஃப்தா பிரியாணி தயார். மேலே பொரித்த வெங்காயத்தை வைத்து அலங்கரித்து, தயிருடன் பரிமாறவும்.

உருண்டைகளை பொரிக்கும் முன்பு கரைத்த மைதாவில் பிரட்டி எடுத்தால் உருண்டைகள் உடையாமல் இருக்கும். சாதம் சேர்த்த பிறகு கரண்டியால் கிளறினால் கோஃப்தா உருண்டைகள் உடைந்துவிடும். அதனால் இரண்டு முறை பாத்திரத்தில் சாதத்தை மாற்றிக் கொட்டினால் அனைத்தும் ஒன்று போல கலந்துவிடும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அருமையா இருக்குப்பா பிரியாணி.. ட்ரை பண்றேன்

பொட்டேட்டோ கோஃப்தா பிரியாணி... ரொம்ப வித்தியாசமா டெம்ப்டிங் ஆ இருக்கு.. சூப்பர் ரெசிபி..:)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

பொட்டேடோல கோஃப்தா?? கலக்கறீங்க போங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வித்தியாசமான குறிப்பாக உள்ளது ரேணுகா.செய்து பார்த்திட வேண்டியதுதான்.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

குறிப்பை வெளியிட்டமைக்கு நன்றிகள் டீம்.

கண்டிப்பா ட்ரை பண்ணுங்க‌, நல்லா இருக்கும். நன்றி

வருகைக்கும் பதிவிற்கும் நன்றிப்பா. சுவை நன்றாக‌ இருக்கும். செய்து பாருங்கள்.

//பொட்டேடோல கோஃப்தா??//
வனி உங்களுக்கு தெரியாததா? சும்மாதான‌ கலாய்க்கறீங்க‌. உங்களை பார்த்துதான் நான் சமையலில் புதிது புதியதாக‌ செய்ய‌ துவங்கினேன். சோ ஆல் க்ரெடிட் கோஸ் டூ வனி :‍) நன்றி வனி,

ஹாய், நீங்க‌ மூத்த‌ உருப்பினர் போல‌, ஆனால் இதுவே முதல்முறைன்னு நினைக்கிறேன் உங்களிடம் பேசுவது. மிக்க‌ மகிழ்ச்சி, வருகைக்கும் பதிவிற்கும். செய்துபார்த்து, சுவைத்து பின் சொல்லுங்க‌.

tastaka irunthathu. but koftha porikkum pothey udainthu satiyil otikkondathu. my son 1 1/2 yrs virumbi sappitan.thank u.

potato kofta biriyani is very nice .i tried yesterday.thanks