கணவாய் கிரேவி

தேதி: October 29, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

கணவாய் - கால் கிலொ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 8 பற்கள்
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தாளிக்க :
எண்ணெய்
சோம்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை


 

கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து பொடியாக நறுக்கிய பூண்டு சேர்க்கவும்.
அத்துடன் பொடியாக அரிந்த வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு குழைந்ததும் தூள் வகைகளைச் சேர்த்து, கால் கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதித்தவுடன் சுத்தம் செய்த கணவாய் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும்.
எளிதில் தயாரிக்கக் கூடிய கணவாய் கிரேவி தயார். ப்ளையின் சாதம், கலந்த சாதம் மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற டிஷ்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கணவாய் கிரேவி ரெசிபி நல்லா இருக்கு ..:)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ரெஷிபி நன்றாக‌ உள்ளது. ஆனால் கணவாய்னா என்ன‌? இப்பதான் கேள்விபடுறேன். பிளீஸ் சொல்லுங்க‌.

யமீ... படம் பார்க்கவே ஆசையா இருக்கு வாணி. கணவாய்க்கு தக்காளி சேர்த்துச் சமைத்ததே இல்லை நான். நல்ல கணவாய் கிடைத்தால் நத்தார் விடுமுறையில் இப்படி சமைத்துப் பார்க்கிறேன். நிச்சயம் நன்றாகத் தான் இருக்கப் போகிறது.
~~~~~~~~~
ஹிஹி... இந்தக் குறிப்பைப் பார்க்க எனக்கு 'கணவா மீன்' கதையும் நினைவுக்கு வருதே! ;)))))

‍- இமா க்றிஸ்

கணவாய் அப்படினா என்ன

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

மீன் வகையைச் சேராத கடல்வாழ் உயிரினம் ஒன்று. ஆக்டோபஸுக்கு பக்கம். தற்காப்புக்காக கறுப்பு நிற மையைத் துப்பிவிடும். சிறிய கணவாய்கள்... ஊசிக் கணவாய் தான் சுவை அதிகம். முட்டைக் கணவாய் - சினைப்பட்ட கணவாய் இன்னும் விசேஷம். கணவாய் மையையும் சமைப்பார்கள்.

பெரிய வகை கணவாயின் நடுவில் உள்ள பகுதியை லவ்பேட்ஸுக்கு (கால்சியம்) கொடுப்பதற்காக விற்பார்கள்.

ஃபேஸ்புக்கில் லிங்க் போட்டிருக்கிறேன். விரும்பினால் பாருங்கள்.

அதிராவின் இந்தக் குறிப்பிலும் படம் போட்டிருக்கிறா. பாருங்க. http://www.arusuvai.com/tamil/node/8648

‍- இமா க்றிஸ்

தோழிகளின் வருகைக்கும், பதிவிற்க்கும் மிக்க நன்றி.
விரிவாக விளக்கமளித்ததற்க்கு நன்றி இமா.
ஊரிலிருந்த வரை எனக்கும் கணவாய் என்றால் என்னவென்றே தெரியாது. இங்கு வந்துதான் தெரிந்து கொண்டேன். ஆகையால் அது மீன் வெரைட்டி இல்லை என்பதும் தெரிந்து கொண்டேன். அறுசுவையில் எல்லோரும் கணவாய் மீன் என்று குறிப்பிடுவதைப் பார்த்து ஒரு வேளை நாம் தான் தவறாக நினைக்கிறோமோ எனவும் எண்ணியதுண்டு. உங்கள் விளக்கம் தோழிகளுக்கு பயனளித்திருக்கும் என்று நம்புகிறேன்.

அன்று சொல்லாமல் விடுபட்ட விடயம் - ஐரோப்பியர் cuttle fish, squids என்னும் பெயர்களால் அழைத்தாலும் கலமாறி (calamari) என்னும் பெயர்தான் பரவலாக பல நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

‍- இமா க்றிஸ்