அக்கரா

தேதி: January 16, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா மாவு - 500 கிராம்
கருவாடு - 150 கிராம்
இறால் - கால் கிலோ
பேக்கிங்பவுடர் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 10
அஜினோமோட்டோ - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 3/4 லிட்டர்


 

முதலில் கருவாட்டை கழுவி தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். இறாலை சுத்தம் செய்து சின்னதாக நறுக்கவும்.
பச்சை மிளாகாயை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின்பு, கருவாட்டை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு மாவில் அனைத்துப் பொருட்களையும் போட்டு பிசறி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
அதன் பின்பு ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி அதில் மாவு கலவையை சின்ன போண்டாக்களாக உருட்டி போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். (இதற்கு தாய்லாந்து மிளகாய் பொருத்தமாக இருக்கும்)


இது சைனீஸ் போண்டா வகையை சார்ந்தது. இந்த சிற்றுண்டியை வியட்நாமியன், ஆப்பிரிக்க மக்கள், வெள்ளைக்காரர்கள், நம்மவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

( கொஞ்சம் வடிவேலு ஸ்டைல்ல இதை படிச்சுக்கோங்கோ.. :)

என்னாது.. விடையை தேடி வந்திருக்கீங்களா.. இன்னாது சின்னப்புள்ளத்தனமா இருக்கு...

நாங்கள்லாம் விடையை சொல்லிட்டுதான் விடுகதையையே சொல்வோம்.. அந்த பதிவை சரியா பார்க்கலையா நீங்க.. ஹும்.. அதான் தலைப்பிலேயே விடையை சொல்லிட்டோம்ல...

ஹய்யோ.. ஹய்யோ... வந்துட்டாங்கய்யா விடை தேடிக்கிட்டு..

(தற்காலிகமாக என்னுடைய வீட்டு முகவரியை மாற்றி இருப்பதால், ஆட்டோ அனுப்ப விரும்புகின்றவர்கள் 21/3, மோத்திலால் தெரு, தி.நகருக்கு அனுப்பவும். நேரில் கும்ம வருபவர்கள் தயவுசெய்து சில மணி நேரங்கள் முன்பே வந்து வாசலில் டோக்கன் வாங்கிக் கொள்ளவும்.)

:-0 :-D :-) ;-) `:-) >O :-X :-& :-@ :'-( </3 T.T (O).(O)

புஹஹஹஹா.அல்லாரும் இங்கவாங்கோ.அடிமின் எனக்கு 1 நிமிடத்திற்கும் குறைந்த சமயத்தில் இந்த குறிப்பில் தான் விடையென்பதை கண்டுபிடித்துவிட்டேன்..எப்படி என்று உங்களுக்கு தெரியுமே;-)

ஆ ஆ ஆ ஆ அண்ணா உங்களை...அப்படியே குனிய வைத்து உருட்டு கட்டையால நாங்களாம் சேர்ந்து அடிக்கலாம் போல வருது..எனக்கே இப்படினா அதிரா,அஸ்ம க்குலாம் ஹய்யோ ஹய்யோ சிரிப்பு தாங்க முடியலப்பா

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

சரி அஸ்மா ,அதிரா வந்து ரெண்டு அக்காரா சாப்பிட்டுட்டுபோங்க..ஆமா மர்ழியா எனக்கு இப்பவும் சிரிப்பு

எல்லா பதிவுக்கும் பதில் சொல்லும் அட்மின் அந்த என்னுடைய ( விடுகதை அல்ல ...சும்மானாச்சும் ......) என்ற பதிவுக்கு மட்டும் பதில் எதுவும் சொல்லாமல் கம் - மென்று இருந்தபோதே நாம் சந்தேகப்பட்டிருக்கனும். அப்ப விட்டுட்டு இப்ப போய் அடிக்க உருட்டுக்கட்டைய தூக்கிகிட்டு வந்து..... என்னமோ போங்க.....இனிமேல் சர்வ ஜாக்கிரதையா இருப்போம்.

பாபு அண்ணா இது நியாயமா ..னல்ல இருங்க (வேறு என்னத சொல்ல) இப்படி இரண்டு நாள் துங்கவிடாமல் பண்ணிடீங்களே இரவில் இடையில் விழிப்பு வந்த பொழுதுக்கூட அந்த விடுகதைதான் நினைவு வந்தது .ரொம்ப பாவம் நாங்கள் எல்லாம் இருங்க உஙகளுக்கு என் சகோதரிகள் வருவார்கள் அஸ்மாவும் அதிராவும் ...இருந்தாலும் அந்த 2.விடுகதையை என் சின்ன வயசில் கேட்டு இருக்கிறேனே நினைவுவந்தால் கண்டிப்பாக பதிவி போடிகிறேன் ...

ஹஹஹ்ஹ்ஹ்ஹ்ஹா...

சத்தியமா உங்களை சின்ன வயசுல நான் பார்த்தது கிடையாதுங்கோ.. அப்ப நான் இந்த விடுகதையை சொன்னதும் கிடையாதுங்கோ.. :-)

அந்த பதிவை போடுறப்ப என் கைக்கு என்ன டைப் பண்ண தோணுனுச்சோ அது எல்லாத்தையும் டைப் பண்ணினேன்... அவ்வளவுதான்..

"எங்கே இருந்தும் சுடாத விடுகதைகள்னு" சொன்னப்பவே நீங்க எல்லாம் கொஞ்சம் உஷாரா இருந்திருக்கலாம்...

அதிராஆஆஆஆஆ... வந்துட்டாங்க.. நான் ஜூட் விட்டுக்கிறேன்.. வர்ட்டா....

அண்ணா, இதுக்கு முதல்ல கண்டுபிடியுங்க, இன்னும் பத்து இருக்கு என்று சொன்னீங்களே... அதையும் கொஞ்சம் அவிட்டு விடுறீங்களா? ..... நீங்கள் சிரிக்கிற சத்தம் கேட்குது..... வேற வழி இல்லை நங்களும் சிரிக்கிறம்.... டொம் அன்ட் ஜெறி யில் ஜெறி சிரிக்கிறமாதிரி....ஹா......ஹா...... ஹீ.....ஹி.... ஹூஉ...ஹு.........ஹா.....ஹக்க்ஹாக்க்க்க்க்ஹ்ஹாஆ...
என்ன செய்வது மறக்கமுடியாமலிருக்கே... பட்ட பாடுகளை........

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஐயோ அதிரா இப்பதான் பதிவு போட்டேன் நான் நினைத்த அள்வுக்கு இல்லையேன்னு இப்ப ஓகே(திட்டாதீங்க...நானும் அஸ்கேப்)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா, கவலைப் பட வேண்டாம், கல்யாணப்படத்தில ஆளைப் பார்த்தது நல்லதாப்போச்சு, போதாக்குறைக்கு என் ஹஸ்ஸுக்கும் காட்டி வச்சிருக்கிறன்... இனி றோட்டில அவரை மாதிரி யாரைக் கண்டாலும் அவளவுதான்...... இதுக்கு மேல கிளிப்பிள்ளைக்கு சொல்றமாதிரி சொல்லத்தேவையில்லைத்தானே... எல்லாம் புரியுமென்று நினைக்கிறன்.... நானும் எஸ்கேப்.....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இப்பதான் அப்பாயிண்ட்மென்ட்லாம் முடிஞ்சி ஓடி வந்தேன் இன்னும் இரண்டு விடை போடலாமென்று... பார்த்தா பெரிய ஏப்ரல் ஃபூலே நடந்திருக்கு :( ச்சே... !இப்படியும் ஒரு அண்ணனா..? எங்களையெல்லாம் பித்து பிடிச்ச மாதிரி அலைய விடுறதில அப்படி என்னதான் சந்தோஷமோ தெரியல போங்க...! இனிமே உண்மையாவே நீங்க விடுகதை போட்டாக்கூட, யாரும் திரும்பிக்கூட பார்க்கமாட்டோம். கைக்கு என்ன டைப் பண்ண தோணுச்சோ அதையெல்லாம் போட்ட மாதிரி தெரியல.. வேணும்னே திட்டமிட்டு பழிவாங்கியிருக்கீங்க. X(

அதிரா..! நீங்க உங்கவர்கிட்ட இந்த போலி விடுகதையப்போட்டு தொல்லைக்கொடுத்தீங்க...நான் எப்படி தெரியுமா? எனக்கு விடை தெரிஞ்சிட்ட மாதிரியும், அதை கண்டுபிடிங்க பார்க்கலாம் என்று சொல்லி அவங்களிடம் போய் ஒவ்வொரு விடுகதையா சொல்லி யோசிக்க வெச்சி....பாவம், அவங்களும் முடிந்தவரை சொல்லி பார்த்துட்டு, எனக்கு தெரியலமா நீயே விடையை சொல்லிடுன்னு சொல்ல...அதற்கு நான், இல்ல..நீங்கதான் சொல்லனும்னு சொல்லி தொல்லைப்படுத்த....ச்சே..! மர்ழியா சொன்னதுபோல் நல்லா சாத்தணும் இந்த போலி ஆட்களை :-)நம்ம தோழி (ஐஸ்;)) பாப்பி கிட்ட சொல்லிதான்!

ருபீனா...! நீங்க கொடுத்த அக்கரா தொண்டையிலயே நிக்குதுபா...ஆத்திரம் தொண்டைய அடைக்கிறப்ப எங்கே விழுங்குறது....? :-) மூளையே தேஞ்சு போயிடுச்சு ருபீனா.. :( இவர இன்னொரு சந்தர்ப்பத்தில எப்படியாவது சேர்ந்து கவுத்தணும்.ஓ.கே.?

மாலதிக்கா! அப்பவே நாம முதலில் ஒரு விடுகதைக்காவது பதில் கேட்டிருக்கணும். நீங்க இது டூப்னு சொன்னப்ப எனக்கு சந்தேகமே வரல..! அதுவும் என்னமா வசனம் பாருங்க அந்த விடுகதையில :-/ நம்மை ஏமாற்ற போட்ட அவருடைய திட்டம் நிறைவேறிடுச்சுல்ல...ரொம்ப சந்தோஷம்தான்..!நல்லா இருக்கட்டும் :-)