சீடி டிஷ்யூ ஹோல்டர் - பொதுவான கைவினை - அறுசுவை கைவினை


சீடி டிஷ்யூ ஹோல்டர்

வியாழன், 30/10/2014 - 10:07
Difficulty level : Easy
5
3 votes
Your rating: None

 

  • சீடி - 3
  • க்லிட்டர் பேப்பர்
  • கத்தரிக்கோல்
  • ஃபோம் ஷீட்
  • க்ராஃப்ட் பன்ச்
  • க்ராஃப்ட் க்ளூ

 

டிஷ்யூ ஹோல்டர் செய்வதற்கு வேண்டிய பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். க்ராஃப்ட் பன்ச் கொண்டு தேவையான எண்ணிக்கையில் ஃபோம் ஷீட்டில் பன்ச் செய்து எடுத்து வைக்கவும்.

க்லிட்டர் பேப்பரில் சீடியை வைத்து 3 வட்டங்கள் வரைந்து, தனித்தனியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

படத்தில் உள்ளது போல் ஒரு சீடியில் கால் பாகத்தை வெட்டி எடுக்கவும்.

இப்போது முக்கால் பாகமாக இருக்கும் சீடியின் பின்புறத்தில் வெட்டி எடுத்த கால் பாகத்தை க்ளூ வைத்து ஒட்டிவிடவும். இதே போல் 2 சீடிகளை தயார் செய்து கொள்ளவும்.

மீதமிருக்கும் ஒரு சீடியில் க்ளூ தடவி, வட்டமாக நறுக்கி வைத்துள்ள க்லிட்டர் பேப்பரை ஒட்டிவிடவும்.

பிறகு முக்கால் பாகமாக உள்ள சீடியில் க்ளூ தடவி க்லிட்டர் பேப்பரை ஒட்டிவிட்டு, சீடியின் அளவிற்கு க்லிட்டர் பேப்பரை நறுக்கிவிடவும்.

இதே போல் மற்றொரு சீடியிலும் க்லிட்டர் பேப்பரை ஒட்டி, சீடியின் அளவிற்கு க்லிட்டர் பேப்பரை நறுக்கிக் கொள்ளவும்.

பிறகு முக்கால பாகமாக உள்ள 2 சீடிகளின் அடிப்பகுதியிலும் க்ளூ தடவி, படத்தில் உள்ளது போல் முழு சீடியின் மேல் வைத்து ஒட்டிக் கொள்ளவும். (சீடியை ஒட்டும் போது இடைவெளிகள் சமமாக இருக்குமாறு பார்த்து ஒட்டவும்).

நன்றாக காய்ந்ததும் சீடியின் மேல் க்ளூ வைத்து ஃபோம் ஷீட்டில் பன்ச் செய்து வைத்துள்ள டிசைனை ஒட்டிவிடவும்.

எளிதாகச் செய்யக் கூடிய சீடி டிஷ்யூ ஹோல்டர் தயார். சீடிகளின் இடையில் டிஷ்யூ பேப்பரை வைத்து உங்கள் வீட்டு டைனிங் டேபிளை அலங்கரிக்கலாம்.
இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..டிஷ்யூ ஹோல்டர்

சூப்பரா இருக்கே இந்த ஐடியா. சின்னவங்க கூட சுலபமா செய்துரலாம். குறிச்சு வைக்கிறேன். ஸ்கூல்ல சொல்லிக் கொடுக்கப் போறேன்.

‍- இமா க்றிஸ்

டீம்

சீடி டிஷ்யூ ஹோல்டர்.. ரொம்ப‌ ஈஸியா சிம்பிளா செய்யுற‌ மாதிரி அழகா இருக்கு... :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மக்களே

அருமையா இருக்கு ஐடியா... சிடியை எல்லாம் எப்படி இவ்வளவு பெர்ஃபக்ட்டா வெட்டுறீங்க??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சீடி

சீடியை சாதாரன‌ கத்தரி கொன்டு வெட்டலாமா

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

சீடீ

ஆமாம், சில சீடீகள் கத்தரிக்கோலால் வெட்ட முடிகிறது ஜனதுல்.

‍- இமா க்றிஸ்

team

Team,ethukkaga quarter a cut pannina cd pinnala,paste pannanum.appasiyae seiyyalamae.oru doubt pls

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

சீடீ

//ethukkaga quarter a cut pannina cd pinnala,paste pannanum.// ஒற்றை சீடியில் க்ளூ வைத்து நிற்கவைக்க அகலம் போதாது. இரண்டும் சேர அடியில் மொத்தமாக வரும் இல்லையா! //appasiyae seiyyalamae.// உறுதியாக இராது. ஆரம்பத்திலேயே ஆட்டம் காணும்.

‍- இமா க்றிஸ்

Oh.thanks imma ma

Oh.thanks imma ma

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!