பாசிப்பருப்பு காரப் புட்டு

தேதி: October 30, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

பாசிப்பருப்பு - 2 கப்
தேங்காய் துருவல் - கால் கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
உப்பு - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - அரை அங்குலத் துண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய்


 

பாசிப்பருப்பில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பாசிப்பருப்பு ஊறியதும் தண்ணீரை வடித்து விட்டு க்ரைண்டரில் போட்டு அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து வடை மாவு பதத்தில் அரைத்தெடுத்துக் கொள்ளவும்.
அரைத்தெடுத்த மாவை இட்லி தட்டில் ஊற்றி, இட்லி பானையில் வைத்து மூடி 3 நிமிடங்கள் வேகவிடவும்.
வெந்ததும் எடுத்து கட்டிகள் இல்லாமல் உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு வெங்காயத்தை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.
அதனுடன் உதிர்த்து வைத்திருக்கும் பாசிப்பருப்பைப் போட்டு அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கிளறவும். ஒரு நிமிடம் கழித்து தேங்காய் துருவலைத் தூவி கிளறிவிட்டு 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
சுவையான பாசிப்பருப்பு காரப் புட்டு தயார்:


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பாசிப்பருப்பபில் வித்தியாசமான & ஈசியான குறிப்பு