பிசின் அரிசி கஞ்சி

தேதி: January 16, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கறுப்பு பிசின் அரிசி - 2 கப்
பால் - ஒரு கப்
தண்ணீர் - 6 கப்
துருவிய உருண்டை வெல்லம் - 3 ஸ்பூன்
சீனி - 2 ஸ்பூன்
உப்பு - அரை ஸ்பூன்


 

பிசின் அரிசியை சுத்தம் செய்துவிட்டு கழுவி 6 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து குக்கரில் சுமார் 4 விசில்கள் வரை வைத்து வேகவைக்கவும்.
பிறகு அதனுடன் பால், வெல்லம், சீனி சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.


இந்த அரிசி வெந்தவுடன் சற்று ஜவ்வு தன்மையாக இருக்கும். இன்னும் மிருதுவாக விரும்பினால் 2 கப் தண்ணீரை கூடுதலாக சேர்த்து, 5 அல்லது 6 விசில்கள்வரை வேகவைத்து செய்யலாம். இனிப்பு சுவை இன்னும் தேவைப்பட்டாலும் வெல்லம் அல்லது சீனியை கூட்டிக் கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்