பிரியாணி மசாலாப்பொடி

தேதி: January 16, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சீரகம் - 50 கிராம்
சோம்பு - 25 கிராம்
வெள்ளை மிளகு - 25 கிராம்
பட்டை - 4 துண்டு
கிராம்பு - 8
அன்னாசிப்பூ - ஒன்று
சாஜிரா - 10 கிராம்
ஏலக்காய் - 8


 

அனைத்துப் பொருட்களையும் தனித்தனியே மிதமான தீயில் எண்ணெய் விடாமல் பொன்னிறமாக வறுக்கவும்.
பின்பு அனைத்தையும் மிக்ஸியில் ஒன்றாக இட்டு நைசாக அரைத்து எடுக்கவும்.
பிரியாணி செய்யும் போது ஒரு கிலோ இறைச்சிக்கு ஒரு மேசைக்கரண்டி வீதம் சேர்க்கலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Hello
Kindly send your receipe to my Id thenavns@gmail.com daily

Thanking you

சாஜிரா என்றால் என்ன என்பது நேயர்களுக்குத் தெரியவில்லை. தயவுசெய்து விளக்கவும்.

சாஜிரா கிடைக்காதவர்கள் சோம்பை (பெருஞ்ஜீரகம்) சேர்க்கலாம்.

சாஜிரா என்பது ஜீரகம் போல் இருக்கும்,ஜீரகம் போல் மணமில்லாமல் வேறு மணம் கொண்டது,பிரியாணியின் சுவையை அதிகரிக்க சாஜிராவிர்க்கு முக்கிய பங்கு இருக்கிறது,இதனால் தான் இஸ்லாமியர் வீட்டு பிரியாணி தனி சுவையுடன் காணப்படுகிறது!

சாஜிரா என்று மளிகைக்கடைகளில் கேட்டால் குடுப்பார்கள்.

சகோதரி அவர்களுக்கு,

விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. சாஜிரா என்றால் என்னவென்று கேட்டு இரண்டு மின்னஞ்சல்கள் வந்திருந்தன. கேள்வி கேட்டிருந்த நேயர்கள் தற்போது பதிலை அறிந்து இருப்பார்கள் என்று நம்புகின்றேன்.

நேயர்களுக்கு மீண்டும் இந்த வேண்டுகோளை வைக்கின்றேன். தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், கேள்விகளை அந்தக் குறிப்பின் கீழோ அல்லது மன்றத்திலோ பதிவு செய்யவும். அப்போதுதான் சம்பந்தப்பட்டவர்கள் அல்லது விடை அறிந்தவர்கள் பதில் கொடுக்க வசதியாக இருக்கும். அறுசுவை தளம் குறித்த ஆலோசனைகள் தெரிவிக்க, தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ள, கருத்துக்களைத் தெரிவிக்க பின்னூட்ட பக்கத்தைப் பயன்படுத்தவும்.

மிக்க நன்றி சகோதரர் admin அவர்களே! இவை நாட்டு மருந்து கடைகளிழும் கிடைக்கும்.

திருமதி ரஸியா அவர்களே, நீங்கள் கூறியது போல் பிரியாணி மசாலாப்பொடி தயார் செய்துவிட்டேன்.
தங்களின் இஸ்லாமிய பிரியாணி செய்முறையை பற்றி விளக்குங்களேன். எனக்கு மிகவும் பிடித்த உணவு பிரியாணி.

தங்களின் வேண்டுகோளுக்கினங்க இஸ்லாமிய முறை பிரியாணி குறிப்பை மட்டன் பிரியாணி3 என்று அனுப்பியுள்ளேன் சமைத்து பாருங்கள்!நன்றி!

சாஜிரா இல்லாமல் நீங்கள் குடுத்த அள்வில் குறைத்து கொஞ்சமா செய்து பிரியாணிக்கு யூஸ் பண்ணேன் ரொம்ப நல்லாயிருந்தது.நன்றி ரசியாக்கா!!

இது சாஜிரா இல்லாமலும் செய்யலாம்,அது மட்டுமல்ல இந்த மசாலாவை இறைச்சி சமக்கும் சிறிது சேர்த்து சமைக்கலாமநல்ல சுவைய்யுடன் இருக்கும்!