மிளகாய் பழ சட்னி

தேதி: November 5, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

உளுந்து - 2 தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
மிளகாய் பழம் - 10 (காரத்திற்கேற்ப சேர்க்கலாம்)
புளி - நெல்லிக்காய் அளவு
பூண்டு - 4
உப்பு - தேவைக்கேற்ப
சீரகம், பெருங்காயம், எண்ணெய் - தாளிக்க


 

வெங்காயம், தக்காளி மற்றும் மிளகாய் பழத்தை அலசி அரிந்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு உளுந்து, சீரகம், பெருங்காயம், மிளகாய் பழம், பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வதக்கியவற்றுடன் புளி மற்றும் உப்பு சேர்த்து ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
சுவையான மிளகாய் பழ சட்னி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்லா இருக்கு தோசைக்கு ஏட்ர‌ சட்னி

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

வாங்க வாங்க... அப்பப்ப காணாம போய் வரீங்க ;) வித்தியாசமான சட்னி. ட்ரை பண்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சட்னி வித்தியாசமா நல்லா இருக்கு. :)

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவினர்க்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஜனதுல்,

வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

வனி,
நேரம் கிடைக்கும் போது வந்துடுவேன் ...
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

உமா,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பு கவிதா,

பளிச் புகைப்படங்களுடன் சுவையான‌ குறிப்பு கொடுத்திருக்கீங்க‌. நல்லா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

சட்னி இட்லியுடன் சூப்பர்.... நல்லா இருந்தது....