தந்தூரி

தேதி: January 18, 2007

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சதைபற்றான கோழி - ஒரு கிலோ
வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - 5
இஞ்சி - 2 அங்குல துண்டு
பூண்டு - 10 பல்
கரம் மசலாப்பொடி - ஒரு தேக்கரண்டி
சீரகப்பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
தயிர் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையானது
எண்ணெய் - கால் லிட்டர்
ஆரஞ்சு கலர்பொடி - ஒரு சிட்டிகை


 

முதலில் கோழியை கழுவி சுத்தம் செய்து சின்ன துண்டங்கள் செய்யவும், நீரைபிழிந்து அதில் எல்லா மசாலா பொருட்களையும் சேர்க்கவும்.
இஞ்சி பூண்டை தோல் நீக்கி அரைத்து அதில் சேர்க்கவும். வெங்காயம், பச்சைமிளகாய் நீளமாக நறுக்கி போடவும்.
தயிரையும் உப்பையும் கலர்பொடியையும் சேர்த்து பிசறி வைக்கவும். இது குறைந்தது 2 மணி நேரம் ஊற வேண்டும்.
பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கோழி துண்டங்களை வெங்காயம் மிளகாயுடன் சேர்த்து எண்ணெயில் போடவும்.
மிதமான தீயில் சிவக்க வறுத்து எடுக்கவும். சுவையான தந்தூரி தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

தந்தூரி நல்ல சுவையாக இருந்தது. நான் அதிகம் எண்ணேய் சேர்க்கவில்லை. கொஞ்சமாக சேர்த்து பொறித்து விட்டு பின் அவனில் வைத்தேன் நல்ல டேஸ்ட்டாக இருந்தது

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

இந்த முறைய்யில் கோழியை பொறித்தால் எனது மகள் அதில் இருக்கும் முறுகலான வெங்காயம் பச்சைமிளகாயய் எடுத்து சாப்பிடுவாள் எங்கள் வீட்டில் பிடித்த டிஷ்.ரொம்ப நன்றிமா பின்னூட்டத்திர்க்கு!

உங்கள் செய்முறை ரொம்ப நல்லாயிருந்தது.வெங்காயம்,மிளகாய் சேர்த்து செய்வது இதான் முதல் தடவை.2 பீஸ் மட்டும் பொரித்தேன்,மீதி அவனில் செய்துவிட்டேன்.மிக்க நன்றி!!

இது அவனிலும் செய்யலாம்,அவனில் செய்யும் போது சிறிது தண்ணீர்விடும்,ஆனால் உடம்புக்கு நல்லது!செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதர்க்கு ரொம்ப நன்றி மேனகா!!

உங்கள் செய்முறைப்படி கோழி செய்தேன் நன்றாக இருந்தது இதே மசாலாவுடந்தான் நான் எப்பொழுதும் கோழி பொரிப்பேன் ஆனால் வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்தது கிடையாது இதில் பொரித்த வெங்காயத்தை என் மகள்களும் விரும்பி எடுத்து சாப்பிட்டார்கள் நன்றி ரஸியா

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

எப்படி இருக்கீங்க?அட உங்க பதிவை பார்க்க சந்தோஷமா இருக்கு!உங்களுக்கு போன் செய்தேன்,ஆனால் மெச்சேஜுக்கு தான் போகிறது இன்று கூட போன் செய்தேன் இன்றும் அப்படி தான் இருக்கு.அப்புறம் கோழி பொறியல் பிள்ளைகளுக்கு பிடித்துள்ளதா?வெங்காயம்ம்பச்சை மிளகாய் சேர்த்து பொறிப்பதால் கூடுதல் மனம்,டேஸ்ட் எல்லாமே நல்லா இருக்கும்!செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதர்க்கு மிக்க நன்றி!