கேரட் பனானா கேக்

தேதி: November 7, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

மைதா மாவு - 200 கிராம்
முட்டை - 4
ப்ரவுன் சுகர் - 200 கிராம்
வெண்ணெய் - 200 கிராம்
வாழைப்பழம் - 2
துருவிய கேரட் - 200 கிராம்
பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
சமையல் சோடா - ஒரு தேக்கரண்டி
துருவிய ஜாதிக்காய் பொடி - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை


 

சர்க்கரையைப் பொடித்துக் கொள்ளவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் மற்றும் சமையல் சோடா சேர்த்து 3 முறை சலித்து வைக்கவும். கேரட்டை துருவிக் கொள்ளவும். வாழைப்பழத்தை மிக்ஸியில் போட்டு அடித்து கூழாக்கி எடுத்து வைக்கவும். ஒரு கோப்பையில் வெண்ணெய் மற்றும் பொடித்த சர்க்கரையைச் சேர்த்து கைவிடாமல் ஒரே திசையில் கலக்கவும்.
கலவை நன்கு சாஃப்ட்டானதும் முட்டையை உடைத்து ஊற்றி, மீண்டும் ஒரே திசையில் கலக்கவும்.
பிறகு மைதா மாவுக் கலவையை சிறிது சிறிதாகத் தூவி ஒரு மரக்கரண்டி அல்லது ஸ்பேட்சுலா (Spatula) கொண்டு மெதுவாக ஒரே திசையில் கலக்கவும்.
மாவு முழுவதையும் சிறிது சிறிதாகத் தூவி பொறுமையாகக் கலந்துவிடவும். அத்துடன் ஜாதிக்காய் பொடியையும் சேர்த்து கலக்கவும்.
பிறகு துருவிய கேரட் மற்றும் வாழைப்பழக் கூழ் சேர்த்து கலக்கவும்.
இக்கலவையை வெண்ணெய் தடவி, மாவு தூவிய கேக் ட்ரேயில் ஊற்றவும்.
முற்சூடு செய்த அவனில் 180 C - ல் 30 - 40 நிமிடங்கள் வைத்து பேக் செய்து, வெளியில் எடுத்து ஆற விட்டு துண்டுகள் போடவும்.
சுவையும், மணமும் நிறைந்த கேரட் பனானா கேக் தயார்.

இதில் ஜாதிக்காய் சேர்ப்பதால் எசன்ஸ் எதுவும் சேர்க்கத் தேவையில்லை.

ப்ளையின் ஸ்பாஞ்ச் கேக் மற்றும் சாக்லேட் கேக்குகள் செய்யும் போது கேக் எளிதில் உப்பலாகிவிடும். அவற்றிற்கு சமையல் சோடா சேர்க்கத் தேவையில்லை. அதுவே பழங்கள், காய்கள் அல்லது நட்ஸ் சேர்த்து செய்யும் கேக்குகளில், அதில் சேர்க்கப்படும் பொருட்களின் எடையின் காரணத்தினால் எளிதில் உப்பலாகி வருவதில்லை. எனவே அவற்றில் சிறிது சமையல் சோடா சேர்க்க வேண்டியது அவசியமாகிறது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கேக் சூப்பர் வாணி. எனக்கும், வனிக்கும் ஆளுக்கொரு பீஸ் மறந்துராம குடுத்துருங்க. ;-)

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

Can you please suggest me type of oven required to do these type of recipes?
Thanks
Rajee

வாணி,
எளிமையான சுவையான கேக்..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பு வாணி,

கேக் அருமையாக‌ இருக்கு. சோடா உப்பு சேர்ப்பதற்கான‌ காரணத்தையும் சொல்லியிருப்பது நல்லதொரு குறிப்பு.

அன்புடன்

சீதாலஷ்மி

வாணி சிஸ்டர் கேக் சூப்பர். வாழைப்பழம், கேரட் போட்டு கேக். ட்ரை பண்ணிடுவோம்.

உன்னை போல் பிறரை நேசி.

சூப்பர் ட்ரை பன்னிட்டு சொல்ரன்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

\\வனிக்கும் ஆளுக்கொரு பீஸ் மறந்துராம குடுத்துருங்க//
ஆளுக்கொரு பீஸ் எல்லாம் கிடையாது உமா :)) இரண்டு பேரும் தட்டோட கேக்கை எடுத்து சண்டை போடாம சாப்பிடுங்க:)))
நன்றி

Conventional அவன் தான் கேக் செய்ய பயனுள்ளதாக இருக்கும்.

வருகைக்கும் , பதிவிற்க்கும் நன்றி கவிதா

வருகைக்கும் , பதிவிற்க்கும் நன்றி

டிரை பண்ணிட்டு அவசியம் எனக்கு சொல்லுங்க க்றிஸ், நன்றி

நன்றி ஜனதுல்