க்ரீன் சட்னி

தேதி: November 8, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

உளுந்து - 2 தேக்கரண்டி
புதினா - கால் கப்
கொத்தமல்லித் தழை - அரை கப்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
புளி - நெல்லிக்காய் அளவு
இஞ்சி - சிறு துண்டு
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 4
உப்பு - தேவைக்கேற்ப
சீரகம், மிளகு - தலா அரை தேக்கரண்டி
பெருங்காயம், எண்ணெய் - தாளிக்க


 

கொத்தமல்லித் தழையை அலசி ஆய்ந்து வைக்கவும். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவிவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு உளுந்து, மிளகு, சீரகம், மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அத்துடன் கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, புளி, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து ஆறவிடவும். ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுக்கவும்.
சுவையான க்ரீன் சட்னி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்பு கவிதா,

புதினாவை, பசுமை மாறாமல் செய்திருக்கீங்க‌. சுவையான‌ சட்னி. அவசியம் செய்து பார்க்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

சட்னி சட்னியா செய்து அசத்துரீங்க‌ போங்க்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி

சீதாம்மா,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி..

ஜைனதுல்,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி..

என்றும் அன்புடன்,
கவிதா