சிக்கன் முசல்லாம்

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழி - ஒன்று
முட்டை - 4
உலர்ந்த திராட்சை - 10
பாதாம் பருப்பு - 10
கசகசா - ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் - 2
கிராம்பு - 4
வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 5 கிராம்
தேங்காய்கொப்பரை - கால் மூடி
மல்லி விதை - இரண்டு மேசைக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
நெய் - ஒரு கப்
தயிர் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு


 

முழுக்கோழியை மேல் சிறகுகள் நீக்கி நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
கோழியின் வயிற்று பாகத்தில் கீறி உள்ளே உள்ள தேவையற்ற பாகங்களை நீக்கி, சுடுதண்ணீர் கொண்டு நன்கு உட்புறமும் சுத்தம் செய்யவும்.
இரண்டு முட்டைகளை வேகவைத்து எடுத்து, துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மீதமுள்ள இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயத்தில் பாதியும், திராட்சை, பாதாம் பருப்பு சீவல்கள், ஒரு சிட்டிகை மிளகுத் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.
அத்துடன் நறுக்கி வைத்துள்ள முட்டைத் துண்டங்களையும் சேர்த்து கோழியின் உட்புறத்தில் வைத்து நிரப்பி, வயிற்றுப் பகுதியைத் நன்கு தைத்து விடவும்.
மீதமுள்ள மசாலாப் பொருட்களை தேங்காயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்தவற்றை கால் கப் தயிருடன் கலந்து கொள்ளவும்.
ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடானதும் நறுக்கின வெங்காயம், அரைத்து வைத்துள்ள மசாலா ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கவும்.
மீதமுள்ள தயிரினையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக விடவும்.
இப்போது தைத்து வைத்துள்ள சிக்கனை பாத்திரத்தில் வைத்து. நன்கு மூடி வேகவிடவும். கோழியினை அவ்வபோது திருப்பிப் போட்டு முழுதும் வேகும் வரை வைத்திருக்கவும்.
நன்கு வெந்தவுடன் இறக்கி, தையலை நீக்கவும். மசாலாவினை மேலே ஊற்றி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்