பெண்களின் கவனக்குறைவு

கவனக்குறைவு என்றால் அதன் மறு பெயர் கடமையை மறப்பது என்று தான் நான் கூறுவேன். அதுவும் ஏன் பெண்களை மட்டும் குறிப்பிட்டிருக்கின்றேன் என்றால் நாம் சாதாரணமாக கருதும் கவனக்குறைவால் கூட நாம் மற்றவரின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். முக்கியமாக கணவரின் வெறுப்புக்கு நம்மை அறியாமலே ஆளாக நேரிடும்.அதனால் குடும்பங்கள் பிரிவதற்க்கு நம்மை அறியாமலே நாம் அடிகல்லை நட்டு விடுவோம். சில பெண்கள் கூறுவார்கள் நான் என் கணவர் மீது எவ்வளவோ பாசம் வைத்திருக்கின்றேன், ஆனால் அது அவருக்கு புரியமாட்டேன்கின்றது, என்று புலம்புவார்கள். இவற்றிர்க்கெல்லாம் காரணமே அவர்கள் தான் என்று அவர்களுக்கும் தெரிவதில்லை. உதாரணத்திற்க்கு ஒன்று நேரில் கண்ட அனுபவத்தை கூறுகின்றேன். துணி வாங்கும் கடையில் இந்திய தம்பதிகள் ஆண்களுக்கான உடையை தேர்வு செய்துக் கொண்டிருந்தார்கள்.நாங்களும் அங்கு துணிகளை தேர்வு செய்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் அந்த ஆண்மகன் தேர்வு செய்த உடையை எடுத்துக் கொண்டு அதை பரிசோதித்து பார்க்கும் அறைக்குள் சென்று விட்டார். என்கணவரும் சென்றிருந்தபடியால் நான் அங்கு அவருக்காக வெளியில் காத்துக் கொண்டிருந்தேன். முதலில் சென்ற அந்த ஆண் உடைகளை போட்டுக் கொண்டு வெளியில் வந்து மனைவியிடம் காட்டலாம் என்று ஆசையோடு வந்து பார்த்தால் மனைவியோ அங்கு இல்லை . அவர்கள் வேறு பகுதிக்கு சென்று விட்டிருந்தார்கள். அவரோ சுற்றும் முற்றும் பார்த்து விட்டு பரிதாபமாக சென்று விட்டார்.கணவருக்காக ஒரு நிமிடம் கூட அந்த பெண்மணியால் காத்திருக்க முடியவில்லை, விலையை தேர்வு செய்வதோடு அவரின் கடமை முடிந்து விட்டது என்று நினைத்து விட்டார் போலும். இதைப் பார்த்த எனக்கோ பரிதாபமாகி விட்டது.அந்த பெண்மணியை தொலைவில் பார்த்து விட்டேன், அங்கு விரைந்து சென்று உங்களை உங்கள் கூட வந்தவர் தேடுகின்றார் என்று கூறினேன், அதற்க்கு அவர் ஒரு சலனமும் இல்லாமல் ஆடி அசைந்து சென்ற காட்சியை நினைக்கும் பொழுது இது போன்ற பெண்களை நினைத்து வேதனை படுவதா அல்லது கோபப்படுவதா என்று தெரியவில்லை.
திருமணம் ஆகிவிட்டால் எல்லாம் தானாக சரியாக நடக்க வேண்டும் என்று சில பெண்கள் நினைப்பதால் தான் பிரச்சனைகளுக்கு காரணம்.பிரச்சனைகளை ஆண்கள் வளர்த்து விடுவார்கள், ஆனால் அந்த பிரச்சனைகள் எழுவதற்க்கு குடும்பங்களில் ஆண்களை விட பெண்களுக்கு தான் பெரும் பங்கு இருக்கின்றது. பெண்கள் முடிவெடுத்து விட்டால் குடும்பங்களில் ஒரு பிரச்சனைகள் கூட வராமல் பார்த்துக் கொள்ள முடியும் என்பது என் ஆழமான கருத்து.ஆக பெண்களே வாழ்க்கையை நல்ல விதத்தில் கழிக்க இது போன்ற சிறு சிறு விஷயத்தில் கூட நாம் அதிக கவனம் செலுத்தினாலே போதும் பிறகு கோட்டைவிட வேண்டிய வாய்ப்பிருக்காது. வாழ்க்கையில் சுலபமாக எதுவும் கிடைத்து விடாது.அப்படி கிடைத்தால் அதை சுலபமாக தக்க வைத்துக் கொள்ள முடியாது. மிகவும் சுலபமாக கைநழுவிப் போய்விடும்.அதுவும் கணவரின் அன்பைப் பெறுவது என்பது ஒரு நாளில் இரண்டு நாளில் முடியக் கூடிய விஷயம் அல்ல. முடிவில்லாத தொடர்கதை அது என்பதை கருத்தில் கொண்டு வாழ்க்கயை நடத்தினால் கடைசியில் கிடைப்பது ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் தான் என்று கூறி எனது கருத்தை சொல்ல இது ஒரு நல்ல வாய்ப்பாக கூறி முடிக்கின்றேன். நன்றி.

மனோகரி

ஒரு நல்ல தகவலை கொடுத்துள்ளீர்கள்.
பெண்களின் கவனக்குறைவால் ஏற்படுவது பல பிரச்சனை..

திருமணம் ஆகிவிட்டால் கூட சிலப் பெண்கள் தங்களை பற்றி அதிகம் கவலை படுவதில்லை.
தன் மனைவி இப்படிப்பட்டவள் எனக் கூறுவதில் கணவனுக்கு நிச்சயம் பெருமை இருக்கும் அதை வெளிக்காட்டி கொள்ளவில்லை என்றாலும்...

..அதில் எனக்கு தெரிந்த சில டிப்ஸ்

1. கணவன் எதாவது ஊருக்கு செல்ல நேர்ந்தால் அவருக்கு தேவையானவற்றை எடுத்து தருவதுடன்.. நேர நேரத்திற்கு என்ன செய்ய வேண்டும் என எழுதி கொடுப்பது.

2. தொலைவில் இருந்தாலும் தொலைப்பேசியில் அழைத்து அது செய்தீர்களா? இது செய்தீர்களா எனக் கேட்பது.

3.வித்தியாசமான உணவு செய்து கொடுத்திருந்தல் அதை பற்றி விசாரிப்பது

4. மற்றவரின் முன் நம்மை கேலி செய்து விளையாடுவது அவர்களின் குணமாக இருந்தாலும் நாம் அவரை மட்டம் தட்டாமல் இருக்க வேண்டும்.

5.அவர்களுக்கு பொருத்தமான் நிறத்தில் அன்று அணிய ஆடை எடுத்து வைப்பது.

என எத்தனையோ உள்ளது. இங்கு உள்ல அனுபவம் நிறைந்த தோழிகள் அதை பகிர்ந்து கொள்லலாமே. ஆனாலும் அதையே சும்மா நொயி நொயின்னும் செய்யக் கோடாது ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பொதுவா வேலைக்குப் போறவங்களா இருந்தாலும், இல்லத்தரசியாய் இருந்தாலும் விடுமுறை நாளில் தான் வீட்டை சுத்தப்படுத்துவாங்க. அப்படி இல்லாம தினமும் கால் மணிநேரம், அரை மணிநேரம் அதற்காக செலவிட்டால் விடுமுறை நாளில் நம் கணவருடன் அதிக நேரத்தை கழிக்கலாம
நம் கூடப் பிறந்தவர்களின் பிறந்த தேதி, திருமணத்தேதி மட்டும் நியாபகத்தில் வைத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள், பரிசுகள் அளிப்பதுபோல் நம் கணவரின் உடன்பிறந்தவர்களுக்கும் செய்யவேண்டும். இதனால் அவரிடம் மட்டுமின்றி அவரைச் சார்ந்தவர்களிடமும் நாம் நன்மதிப்பை பெறுவோம்.

Don't Worry Be Happy.

கணவர்களுக்கு பிடிக்காத விசயம் என்பது அவர்கள் வீடை பற்றி குறை சொல்வது. அதை நிறுத்திக்கொண்டாலே பல பிரச்சனைகள் ஒழியும்.

ஏன் அதை அவரிடம் சொல்ல வேண்டும் என ஒரு கணம் நினைத்து மனதிலேயே பூட்டி விட்டால் அவரின் நன் மதிப்பை பெறலாம்.

என் அம்மாவிற்கு,அப்பாவிற்கு,அண்ணாவிற்கு,தங்கைக்கு என நாம் பார்த்து பார்த்து பொருட்களை வாங்குவது போல அவர்களின் குடும்ப நபர்களுக்கு ஆர்வத்துடன் தேர்ந்தெடுத்தால் அதைவிட வேறேதும் சந்தோஷம் அவர்களுக்கு அளித்திட முடியாது.

மாமியார் வீட்டில் உள்ள நபர்கள் ஏதாவது சொன்னால் நானும் அப்படி தான் என் பங்குக்கு பேசுவேன் என்ற மனநிலையை தூக்கி எறியுங்கள். உங்கள் கணவரின் பாசத்திற்கு உரியவளாய் நீங்கள் ஆவது உறுதி. அந்த வார்த்தைகளை நாம் கேட்பதினால் எதுவும் நமக்கு ஆகப்போவதில்லை என நினைத்துக்கொள்ளுங்கள்.

கணவருக்கு பிடிக்காத எந்த விஷயத்தையும் செய்யாதீர்கள். அவருக்கு பிடிக்காத ஒன்றை மீண்டும் மீண்டும் பேசி அவரின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்.

“என்னை அடித்துவிட்டான்,என்னை கோபமாக பேசிவிட்டான்” என சின்ன சின்ன காரணங்களுக்கு கோபப்பட்டு அம்மா வீட்டிற்கு போகும் எண்ணம் கைவிடுங்கள். தன் பிள்ளையை யாராவது அப்படி செய்தால் எந்த பெற்றோருக்கும் பிடிக்காது. சின்ன பிரச்சனையையும் கூட பெரிதாக்கி விடுவார்கள். நம் வாழ்க்கை நம் கையில் தான் என்பதை உணர்ந்து முடிந்த அளவுக்கு உங்கள் குடும்ப விசயங்களை அவர்களுக்கு தெரியபடுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.
இது பெரியவர்களின் உடல்நிலைக்கும் நல்லது. வயதான காலத்தில் நாம் ஏன் அவர்களை வருத்தப்ப்பட வைக்க வேண்டும்?

ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்ததும் பெற்றோர்களே உங்கள் வேலை முடிந்துவிட்டது. வேடிக்கை மட்டும் பாருங்கள். அடி பலமாய் விழுந்தால் மட்டுமே துக்கி விடுங்கள். சிறிது கால் தடுக்கள்களுக்கு மருந்திட நினைக்காதீர்கள். பின் அவர்களுக்கு எப்படி அனுபவம் கிடைக்கும்?

நிறைய பேசலாம்....
மீண்டும் அடுத்த பதிவில் பேசுகிறேன்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

//ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்ததும் பெற்றோர்களே உங்கள் வேலை முடிந்துவிட்டது. வேடிக்கை மட்டும் பாருங்கள். அடி பலமாய் விழுந்தால் மட்டுமே துக்கி விடுங்கள். சிறிது கால் தடுக்கள்களுக்கு மருந்திட நினைக்காதீர்கள். பின் அவர்களுக்கு எப்படி அனுபவம் கிடைக்கும்?//

ரொம்ப சரி ஆமினா! எல்லாவற்றையும் கிளிப்பிள்ளை போல் பிறந்தவீட்டில் சொல்வது நிச்சயம் பிரச்சினை உண்டாக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்று அன்றைக்கு நடந்த பிரச்சனைகளை அன்று அன்றே மறந்து விடுதல் நல்லது. அப்படி இல்லாமல் 6 மாதத்திற்கு முன்பு நடந்த பிரச்சனையை இப்போது விவாதித்தால் மிஞ்சுவது கணவன் மனைவிக்குள் விரிசல் தான்.

நல்ல மனைவி என்ற பெயர் ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ, ஒரு வருடத்திலோ கிடைத்துவிடாது. அந்த பெயர் எடுக்க நாள் ஆகும். நாம் செய்யும் ஓரிரு நல்ல செயல்கள் எல்லாம் அந்த பேரை சம்பாதித்து தந்துவிடாது.

நாம் செய்யும் நல்ல செயல்கள் அனைத்தும் நிகழ் காலத்திலும், எதிர் காலங்களிலும் தொடர்ந்து இருக்கும் படி பார்த்துக் கொள்ளவேண்டும். நாம் எப்போதோ செய்த நல்லவைகளை சுட்டி காட்டி நான் இவ்ளோ பண்ணியிருக்கேன், நான் அவ்ளோ பண்ணியிருக்கேன் இருந்தாலும் எனக்கு நல்ல பேர் இல்லை என்று சொல்லக்கூடாது. ஒரு செடி வளர்க்கும்போது, அதற்கு நேற்றுதான் தண்ணீர் ஊற்றினேனே, இன்று எதற்கு ஊற்றவேண்டும் என்று கேட்பது முட்டாள்தனம்.

ஒரு செடி என்னும் வாழ்க்கைக்கு அன்பு, நன்னடத்தை, நற்செயல்கள் என்னும் தண்ணீரை ஊற்றினால்தான் அது பின்னாளில் நன்மதிப்பு மற்றும் நற்பெயர் என்னும் இனிய கனியை நமக்கு தரும்.

நம் கணவர், நம்முடைய உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவர். நீங்கள் சிரித்தால் அவரும் சிரிப்பார். நீங்கள் அழுதால் அவரும் அழுவார். நீங்கள் கோபப்பட்டால் அவரும் கோபப்படுவார். நீங்கள் உங்கள் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தார்க்கு தரும் அதே மதிப்பு தான், உங்களுக்கும் உங்கள் வீட்டை சார்ந்தவர்களுக்கும் கிடைக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.

தற்போது திருமணம் செய்துகொள்ளும் இளம்தலைமுறையினர் திருமணமான மறுநாளே தனிக்குடித்தனம் போகவேண்டும் என்ற கண்டீஷனில் தான் வருவார்கள். அவர்கள் கணவருக்கென்றே ஒரு தனி லிஸ்ட் வைத்திருப்பார்கள். அம்மாவுக்கு இவ்வளவு பணம் தான் தரவேண்டும். அம்மாவை இத்தனை முறை தான் பார்க்க வேண்டும், இத்தனை முறை தான் பேச வேண்டும். உடன் பிறந்தவர்களுக்கு உதவ கூடாது இது போன்று நிறைய சொல்லலாம்.

திருமணமான ஒவ்வொரு பெண்ணும் நினைவில் கொள்ளவேண்டிய ஒரு முக்கியமான விஷயம். நம்முடைய தாயும் நம்மை 10 மாதங்கள் கருவறையில் சுமந்து பெற்றிருப்பார். அதை போல் தான் நம் கணவரும் என்பதை மறக்ககூடாது.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்று அன்றைக்கு நடந்த பிரச்சனைகளை அன்று அன்றே மறந்து விடுதல் நல்லது. அப்படி இல்லாமல் 6 மாதத்திற்கு முன்பு நடந்த பிரச்சனையை இப்போது விவாதித்தால் மிஞ்சுவது கணவன் மனைவிக்குள் விரிசல் தான்.

நல்ல மனைவி என்ற பெயர் ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ, ஒரு வருடத்திலோ கிடைத்துவிடாது. அந்த பெயர் எடுக்க நாள் ஆகும். நாம் செய்யும் ஓரிரு நல்ல செயல்கள் எல்லாம் அந்த பேரை சம்பாதித்து தந்துவிடாது.

நாம் செய்யும் நல்ல செயல்கள் அனைத்தும் நிகழ் காலத்திலும், எதிர் காலங்களிலும் தொடர்ந்து இருக்கும் படி பார்த்துக் கொள்ளவேண்டும். நாம் எப்போதோ செய்த நல்லவைகளை சுட்டி காட்டி நான் இவ்ளோ பண்ணியிருக்கேன், நான் அவ்ளோ பண்ணியிருக்கேன் இருந்தாலும் எனக்கு நல்ல பேர் இல்லை என்று சொல்லக்கூடாது. ஒரு செடி வளர்க்கும்போது, அதற்கு நேற்றுதான் தண்ணீர் ஊற்றினேனே, இன்று எதற்கு ஊற்றவேண்டும் என்று கேட்பது முட்டாள்தனம்.

ஒரு செடி என்னும் வாழ்க்கைக்கு அன்பு, நன்னடத்தை, நற்செயல்கள் என்னும் தண்ணீரை ஊற்றினால்தான் அது பின்னாளில் நன்மதிப்பு மற்றும் நற்பெயர் என்னும் இனிய கனியை நமக்கு தரும்.

நம் கணவர், நம்முடைய உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவர். நீங்கள் சிரித்தால் அவரும் சிரிப்பார். நீங்கள் அழுதால் அவரும் அழுவார். நீங்கள் கோபப்பட்டால் அவரும் கோபப்படுவார். நீங்கள் உங்கள் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தார்க்கு தரும் அதே மதிப்பு தான், உங்களுக்கும் உங்கள் வீட்டை சார்ந்தவர்களுக்கும் கிடைக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.

தற்போது திருமணம் செய்துகொள்ளும் இளம்தலைமுறையினர் திருமணமான மறுநாளே தனிக்குடித்தனம் போகவேண்டும் என்ற கண்டீஷனில் தான் வருவார்கள். அவர்கள் கணவருக்கென்றே ஒரு தனி லிஸ்ட் வைத்திருப்பார்கள். அம்மாவுக்கு இவ்வளவு பணம் தான் தரவேண்டும். அம்மாவை இத்தனை முறை தான் பார்க்க வேண்டும், இத்தனை முறை தான் பேச வேண்டும். உடன் பிறந்தவர்களுக்கு உதவ கூடாது இது போன்று நிறைய சொல்லலாம்.

திருமணமான ஒவ்வொரு பெண்ணும் நினைவில் கொள்ளவேண்டிய ஒரு முக்கியமான விஷயம். நம்முடைய தாயும் நம்மை 10 மாதங்கள் கருவறையில் சுமந்து பெற்றிருப்பார். அதை போல் தான் நம் கணவரும் என்பதை மறக்ககூடாது.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தலைப்பை விடுத்து விவாதம் போல சென்றாலும் பதில் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. தவறு என்றால் மன்னிக்கவும்.

தனி குடித்தனம் கூடாதா?

இது ஆணும் பெண்ணும் சமம் எனும் காலம். கணவனும் வேலைக்கு செல்கிறான். மனைவியும் வேலைக்கு செல்கிறாள். சம்பாதிக்கிறாள். திருமணம் செய்து கொண்ட பெண் தன் பெற்றோரை விட்டு இனி கணவன் தான் எல்லாம் என்று வருகிறாள். ஆனால் கணவன் மட்டும் அம்மா கோண்டு போல அம்மா வீட்டிலேயே இருப்பது என்ன நியாயம்? இருவரும் வயது வந்தவர்கள். இருவரும் திருமணமானவர்கள்.இருவர் அல்லது ஒருவர் சம்பாதிப்பவர்கள். அப்படியிருக்க, இருவரும் தனியே வீடு எடுத்து அவர்களின் வாழ்க்கையை வாழலாமே.
பெண் மட்டும் தன் வீடு, பெற்றோரை விட்டு கணவனின் அம்மா வீட்டுக்கு வந்து குடும்பம் நடத்த வேண்டுமா? இதில் என்ன நியாயம்? அதற்காக கணவரின் பெற்றோரையோ அவர்களின் வீட்டினரையோ புறக்கணிக்க சொல்லவில்லை. அதே போல பெண்ணுரிமை வீட்டிலிருந்து தான் ஆரம்பிக்க பட வேண்டும். கண்ணாடி கணவன் மட்டுமல்ல, அவனது மனைவியும் தான்.

ஹர்ஷா நம் பெரியவர்கள் சில விஷயங்களை சொல்லி வைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கான காரணத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
மகன் மகள் இருவரும் இப்படி பெற்றோரைத் தனித்து விட்டு தனிக்குடித்தனம் சென்று விட்டால் முதுமையில் அப்பெற்றோரைக் கவனிப்பது யார்?

கணவர் பெற்றொரோடு இருக்கும் போது மனைவியின் பெற்றோர் மனைவியின் சகோதரனோடு இருப்பார்கள். மகள் வீட்டில் இருப்பதை விட மகன் வீட்டில் இருப்பதையே பெற்றோரும் விரும்புவர். நம்மை வளர்த்தவர்களின் அந்த ஆசையை நிறைவேற்றுவது தவறா? சம்பாதிக்கிறோம் என்ற பெயரில் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட முடியுமா? இதுவல்ல தோழி பெண்ணுரிமை. என் பெற்றோரையும் நான் என்னோடு வைத்துப் பார்த்துக் கொள்வேன் என்றால் அது பெண்ணுரிமை. நான் என்வீட்டை விட்டு வருகிறேன் அதனால் நீயும் வா என்பது சிறுபிள்ளைத் தனம்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!


என்னை கேட்டா கொறஞ்சது 3 வருஷமாவது கூட்டு குடும்பம்மாருக்கனும்னு சொல்வேன்.

அப்போதான் குடும்பத்துல இருக்கறவா எல்லாரயும் புரிஞ்சுக்க முடியும்.

என் மாமனார்,மாமியார் கிட்டதட்ட 15 வருடம் படுத்த படுக்கையா இருந்தா.

என் மச்சினர்,ஓர்ப்படி,நாத்தனார்,என் அம்மா,அப்பா,தம்பி, தம்பி ஆம்படையாள் இவாள்ளாம் இல்லேனா என்னால அவாள நன்னா கவனிச்சுண்டுருக்கவே முடியாது.

எல்லாரும் வேற வேற வீட்டில் இருந்தாலும் ஒத்துமையா ஒன்னா இருந்தோம்.

நாங்க இப்பொ நன்னாருக்கோம்னா அதுக்கு என் மாமியார்,மாமனார் ஆசிர்வாதம்தான் காரணம்.

இங்க மட்டுமில்லை .அமெரிக்காவிலும் அப்படிபட்டவா இருக்கதான் இருக்கா.

என் கசின் ஜிம்னு ஒரு அமேரிக்கரை கல்யாணம் பண்ணிண்டுருக்கா.
அமேரிகால அவ நாத்தனார்,மாமியார்,மாமனார் கூடதான் இருக்கா.
அது ஆச்சு 20 வருஷம்.

இன்னொரு கசின் 10 வருடமா மாமியார்,மச்சினர் ஓர்ப்படியோடதான் இருக்கா.

அதனால தனியா இருந்தாலும் நாள் கெழமைனா ஒண்ணா சேந்துண்டு சந்தோஷமா செளக்கியமா இருக்கனும்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

கவிசிவா,
உங்கள் வாத திறமையை நான் பல பட்டி மன்றங்களில் பார்த்து இருக்கிறேன். உங்களுடையவை நல்ல கருத்துக்கள். இப்போது சொன்னதையும் சேர்த்து தான்.

இந்த பதில் வரும் என்பதை நான் எதிர்ப்பார்த்தேன். ஆனால், ஒரு விஷயம். கணவரின் பெற்றோரை பராமரிப்பதும், தன் பெற்றோரை பராமரிப்பதும் கண்டிப்பாக வேண்டும் தான், நான் மறுக்கவில்லை. கணவரின் பெற்றோரோ, அல்லது மனைவியின் பெற்றோரோ அவர்களின் தள்ளாமையிலும், நோயிலும் பிள்ளைகளின் அன்பும், சேவையும் அவர்களுக்கு தேவை. உதவ வேண்டியது பிள்ளைகளின் கடமை. இந்த நிலையில் பெண்ணின் உடன் பிறந்தோர் இல்லாத, அல்லது உதவ முடியாத சூழலில் அவர்களின் பெண் தான் அவளின் பெற்றோரை பார்த்துக்கொள்ள வேண்டும். பெண்ணின் புகுந்த வீட்டுக்கு எந்த பெற்றொரும் சென்று தங்க தயங்குவார்கள் தானே...

இன்றைய சூழலில், வேலை நிமித்தமாக பலர் வெளி ஊர்களிலும், வெளி நாடுகளிலும் தனிக்குடிதனமாக தானே வசிக்கிறார்கள். அப்படியிருக்க தனி குடித்தனம் இருப்பதில் தவறு என்ன? தனிக்குடிதனம் இருப்பவர்கள் பெற்றோரை கவனிக்காதவர்கள் என்று அர்த்தம் இல்லை.

மேலும் சில பதிவுகள்