கோவக்காய் குழம்பு

தேதி: November 12, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (7 votes)

 

கோவக்காய் - 200 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 4
பூண்டு - 10 பற்கள்
மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு, கொத்தமல்லித் தழை - தேவைக்கு
எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் - தாளிக்க


 

கோவக்காய், வெங்காயம் மற்றும் தக்காளியை அலசி அரிந்து வைக்கவும். பூண்டை நசுக்கி எடுத்துக் கொள்ளவும். தேங்காயை அரைத்து வைக்கவும்.
எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, வெங்காயம், பூண்டு, கோவக்காய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்
குழம்பு கொதிது நன்கு கெட்டியாகி வந்ததும், தேங்காய் விழுது சேர்த்து ஒரு கொதிவிடவும்.
பிறகு கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Nalla iruku.senji pathutu solren.keep rocking .....

அன்பு கவிதா,

குழம்பு குறிப்பு ரொம்ப நல்லா இருக்கு. கோவைக்காய் சென்னை ஸ்பெஷல் ஆச்சே.

அன்புடன்

சீதாலஷ்மி

குறிப்பு சூப்பர் ட்ரை செய்து பார்க்கிறேன்.

தேங்காய் எவ்வளவு சேர்க்கனும்னு குறீப்பில் போடவில்லையே?

சூப்பர் சமையல்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

கோவக்காயில் குழம்பு வைத்ததில்லை, புளி சேர்க்காததால் எளிதில் செய்து விடுவேன். குழம்பு பார்க்க நன்றாக உள்ளது

நான் கோவக்காய் கூட்டு செய்வேன். குழம்பு ட்ரை பண்ணுறேன். ரொம்ப ஈசியான ரேசிபியா இருக்கு. நன்றி தோழி

உன்னை போல் பிறரை நேசி.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி.

என்றும் அன்புடன்,
கவிதா

வந்தனா,
செய்து பார்த்து சொல்லுங்க
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி..

சீதாம்மா,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி..

சஹிதா,
தேங்காய் இரண்டு ஸ்பூன் அளவு சேர்த்து இருந்தேன்.
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி..

ஜனதுல்,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி..

வாணி,
அவசியம் செய்துவிட்டு சொல்லுங்க
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி..

க்றிஸ்,
செய்துவிட்டு சொல்லுங்க
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி..

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா சூப்பர் நான் கோவக்காய்க்கு பதில் கத்திரிக்காய் போட்டு செஞ்சேன் அருமையாயிருக்கு நல்லா சுள்ளுன்னு நன்றி

kovarkai sampar

unnai pol piraraium nesi