சுபிதா கவிதைகள் - 11 - அறுசுவை கவிதை பகுதி - 29833

Kavithai Poonga

சுபிதா கவிதைகள் - 11

வானப் பெண்ணே...

வெண் மேகங்களை
அழகான பூக்களாய் இட்ட
நீல நிற புடவையை அணிந்தவளே...

காலையில்
சிகப்புச் சூரியனையும்
மாலையில்
வெள்ளை நிலாவையும்
திலகமாய் இடும் ரகசியம் தான் என்ன?

நட்சத்திரத்தை தலையில் பூக்களாய்
சூடி இருந்தாயோ?
ஆங்காங்கே உதிர்ந்துள்ளதே...

வெட்கம் வந்தால்
முகம் சிகப்பாகத் தானே மாறும்?
உனக்கு மட்டும் எப்படி?
ஏழு நிறங்களில்
வானவில்லாய் மாறுகிறது...

- M. சுபி

நீ வருவாய் என...

நீ இல்லாமல் என் நேரம் ஓடவில்லை...
நாட்களும் செல்லவில்லை...
எங்கே சென்றாய் நீ?

ஒவ்வொரு பொழுதும் உன்
வரவை எண்ணியே விடிகிறதே...
என் வாழ்விற்கு
வெளிச்சம் தந்தவளே நீ தான்...
மறுபடியும் என்னை
இருளில் தள்ளிவிடாதே...

எப்பொழுது வருவாய்?
என் வாழ்வின் ஒளியாய்...
என் வீட்டில் விளக்கேற்ற மருமகளாய்...

நீ வந்து குடியிருக்க என் மனமும்...
கோலமிட என் வாசலும்...
ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது
நீ வருவாய் என...

- M. சுபி

 
அழகு இயற்கையே...

காற்றாய் வருடுகிறாய்...
மழையாய் நனையச் செய்கிறாய்...
வெயிலாய் இதம் தருகிறாய்...
பனியாய் குளிரச் செய்கிறாய்...
நதியாய் தழுவுகிறாய்...
பூக்களாய் மரங்களாய்
பூத்து குலுங்குகிறாய்..

ஏனோ சில சமயம்
புயலாய் தாக்குகிறாய்...
வெள்ளமாய், பூகம்பமாய்
கோபிக்கிறாய் நீ...

அழகு என்ற வார்த்தை
உனக்காகத் தான்
தோன்றி இருக்குமோ?
எத்தனை விந்தைகள்
உன்னிடம்!
லயித்துத் தான் போனேன் நான்...

எப்படி இப்படி???
எல்லோருக்கும் பாராபட்சமில்லாமல்
மகிழ்ச்சியை அள்ளித்தர முடிகிறது
உன்னால்??

உன் கொடைக்கு தான் வரையறை ஏது?
உனைக் காண கண் கோடி போதாது
என்ன செய்ய என்னிடம் இருப்பதோ
இரண்டே இரண்டுதான்...

ஒளியையும் இருளையும்
திகட்டாமல் இருப்பதற்காகத் தான்
மாறி மாறி தருகிறாயோ?

உன் ஆரம்பம் என்ன?
முடிவும் தான் என்ன?
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
தெரியப் போவதில்லை எனக்கு...
என்ன என்னவோ தோன்றுகிறது
என் மனதில்... சொல்ல
வார்த்தைகள் தான் பஞ்சம் என்னில்.....

- M. சுபி

அழித்துவிடு...

நீ இருக்கும் நெஞ்சில்
சுகமான வலியை
உணர்கிறேன் நான்...

பழகிய நாளில்
பேசிய வார்த்தைகள்
இன்னும் ஓயாமல்
ரீங்காரமாய் ஒலிக்கிறது என்னுள்...

நினைத்து நினைத்து
சலித்து போய் மறக்க முயல்கிறேன்...
இயலவில்லை என்னால்...

நினைவுகளை
கடக்க மட்டுமே முடிகிறது
அழிக்க முடியவில்லையே...

நீ ஏதும் அழிப்பான்
வைத்திருந்தால் அழித்துவிடு!
என்னுள் இருக்கும்
உன் நினைவுகளை...

- M. சுபி

 அட்மின் பாபு & டீம்,

மறுபடியும் எனது கவிதையை இவ்ளோ சீக்கிரம் அழகா வெளியிட்டமைக்கு ரொம்ப‌ நன்றி.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

subi

கவிதை நல்லா இருக்கு.ஒவ்வொரு வரியும் அழகு.

//வெண் மேகங்களை
அழகான பூக்களாய் இட்ட
நீல நிற புடவையை அணிந்தவளே...//

//நீ வந்து குடியிருக்க என் மனமும்...
கோலமிட என் வாசலும்...
ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது
நீ வருவாய் என...//

//ஒளியையும் இருளையும்
திகட்டாமல் இருப்பதற்காகத் தான்
மாறி மாறி தருகிறாயோ//

//நினைவுகளை
கடக்க மட்டுமே முடிகிறது
அழிக்க முடியவில்லையே...//

தர்ஷா அக்கா,

உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் ரொம்ப‌ நன்றி,
இவ்ளோ ரசிச்சு படிச்சீ இருக்கீங்க‌ ... தான்க் யூ.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சுபி

எனக்கு ரசிச்சு படிக்க தான் முடியும் உங்க போல எழுத வராதே...

சுபி கவிதை

சுபி சிஸ்டர்.
சூப்பர்.. சூப்பர் கவிதை.

எல்லோருக்கும் பாராபட்சமில்லாமல்
மகிழ்ச்சியை அள்ளித்தர முடிகிறதே

எப்படி இப்படி? உங்களால்

கவிதை மழை!!
நனைந்த எனக்கு ஜலதோஷம்

வான மங்கையை வர்ணித்து,
(இயற்கையை) நேசிக்க வைத்து,
அவள் வருவாள் என
காத்திருக்க வைத்து - கடைசியில்
பிரிவு துயரை தந்து விட்டீர்களே.

எப்படி அழிப்பது அவள் நினைவை
ஏதும் அழிப்பான் வைத்திருந்தால்
தாங்களேன், அவள் நினைவை அழித்து விட....

உன்னை போல் பிறரை நேசி.

தர்ஷா அக்கா,

/// எனக்கு ரசிச்சு படிக்க தான் முடியும் உங்க போல எழுத வராதே/// இதானே வேணாங்குறது, இப்ப‌டி பொய் சொல்ல‌ கூடாது,

நீங்களும் நல்லா எழுதுவீங்க‌ ட்ரை பண்ணுங்க‌ அக்கா, உங்க‌ கவிதையை எதிர்பார்க்கும் வாசகி......

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

கிறிஸ் அக்கா,

/// சூப்பர்.. சூப்பர் கவிதை./// உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் ரொம்ப‌ நன்றி.

கவிதை மழை!!
/// நனைந்த எனக்கு ஜலதோஷம்/// சீத்தாம்மா மருந்து சொல்லி இருக்காங்க‌, எடுத்துக்கோங்க‌....... சரி ஆகிடும்.

கடைசியில்
பிரிவு துயரை தந்து விட்டீர்களே./// அடடா சாரி...

அக்கா எனக்கு உங்கள் போல‌ காமெடி வரமாட்டேங்குதே , என்ன‌ பண்ண‌ ட்ரையினிங் தர்றீங்களா...... ப்ளீஸ் ....

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சுபி சகோ

எல்லா கவிதைகளும் ரொம்ப நல்லா இருக்குங்க.
வானத்தையும்,இயற்கையையும் வர்ணித்து எழுதியது ரொம்ப ரசிக்கும்படியாக இருக்குங்.
வாழ்த்துக்கள்.

நட்புடன்
குணா

சுபி

வானப் பெண்ணே
ஒவ்வொரு வரியும் அற்புதம்.
எதைப் பாராட்ட‌ நு தெரியலை
உங்க‌ கவிதையைப் பாராட்ட‌ என்னுள்
வார்த்தைப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதே
வாழ்த்துக்கள் சுபி

குணா அண்ணா,

உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் தான்க்ஸ் அண்ணா.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *