அவன் சிக்கன் வித் வெஜிடபுள்ஸ்

தேதி: November 18, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (2 votes)

 

சிக்கன் லெக் பீஸ் - 2
பெரிய வெங்காயம் - 2
கேரட் - ஒன்று
தக்காளி - 2
குடைமிளகாய் - 2
உருளைக்கிழங்கு - 2 (பெரியது) அல்லது 7 (சிறியது)
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு


 

கோழிக் காலை தோல் நீக்கி சுத்தம் செய்து ஒரு காலை மூன்று துண்டுகளாக்கி அதன் மேலே 3 கீறல்கள் போடவும்.
அவனில் வைக்கக் கூடிய பாத்திரத்தில் கோழித் துண்டுகளைப் போட்டு, மிளகாய் தூள், உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
கேரட் ,வெங்காயம், குடைமிளகாய், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஊறிய கோழியுடன் நறுக்கிய காய்களைச் சேர்த்துப் பிரட்டவும்.
பிறகு பாத்திரத்தை அலுமினியம் பாயில் போட்டு மூடி, முற்சூடு செய்த அவனில் 175 F - ல் வைத்திருக்கவும்.
30 நிமிடங்கள் கழித்து வெளியெ எடுத்து கோழியைப் பிரட்டிவிட்டு, மேலும் 15 நிமிடங்கள் அவனில் வைத்திருந்து நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
சுவையான அவன் சிக்கன் வித் வெஜிடபுள்ஸ் ரெடி. கெச்சப், சில்லி சாஸுடன் சாப்பிடலாம். இது 2 பேருக்கான குறிப்பு.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Super recipe.. I like it. Thanks for sharing.

மீண்டும் எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்
குழுவிற்கு நன்றிகள்...

பதிவுக்கு நன்றிகள்...