ஃபுல்கா

தேதி: November 20, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

மல்டிக்ரெய்ன் / கோதுமை மாவு - ஒரு கப்
நீர் - அரை கப்
எண்ணெய் - அரை தேக்கரண்டி (விரும்பினால்)
உப்பு - சுவைக்கேற்ப


 

மாவுடன் உப்பு சேர்த்து கலந்து, சிறிது சிறிதாக நீரை விட்டு மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும். (மாவு முழுவதும் நீர் விட்டு பிசையும் வரை விரல்களை மட்டுமே பயன்படுத்தவும். அப்போது தான் அழுத்தம் கொடுக்காமல் மாவுக்கு தேவையான நீர் சேர்ப்போம்).
மாவின் நடுப்பகுதியில் அழுத்தி வெளிப்பகுதியை விரல்களால் மடித்து உள்ளே மீண்டும் அழுத்திப் பிசையவும். இப்படி பிசைவதால் மாவு ஒரே சீராகப் பிசைய வரும்.
உள்ளங்கையின் அடிப்பாகத்தால் மாவை நன்றாக அழுத்தி பிசையவும். (இப்படி மாவை பிசைவதால் மாவு கெட்டியில்லாமல் மிகவும் மிருதுவாக வரும்).
விரும்பினால் கடைசியாக கையில் மட்டும் சிறிது எண்ணெய் விட்டு ஒட்டாமல் வரும்படி பிசையலாம். பிசைந்த மாவை அரை மணி நேரம் மூடி வைத்திருக்கவும். (குறைந்தது 15 நிமிடங்களாவது வைத்திருந்தால் நல்லது). பிறகு எடுத்து மீண்டும் ஒரு முறை பிசைந்து கொள்ளவும்.
இப்போது மாவை எடுத்து உருட்டினால் நன்றாக பந்து போல் உருட்ட வரும். கோடுகளோ, வெடிப்போ இருக்காது. இது தான் சரியான பதம்.
உருட்டிய மாவை தேவையான மாவில் பிரட்டி தேய்த்துக் கொள்ளவும். மிகவும் மெல்லியதாகத் தேய்க்க வேண்டாம். சில நேரம் அப்பளம் போல ஆகிவிடும்.
பிறகு மிதமான சூட்டில் தோசைக் கல்லில் போடவும். (தீ குறைவாக இருந்தால் ரொட்டி ஹார்டாக வரும். தீ அதிகமாக இருந்தால் தீய்ந்து ரொட்டி உப்பலாகி வராமல் ஓட்டை விழுந்துவிடும்). கல்லில் போட்ட சில நொடிகளில் மேலே சிறு சிறு முட்டை போல எழும்பும். அப்போது திருப்பிவிடவும்.
திருப்பிய பிறகு சில நொடிகள் கூடுதலாக வேகவிடவும்.
தோசைக் கல்லில் இருக்கும் பகுதி, மேலே இருக்கும் பகுதியை விட சற்று நன்றாகவே வெந்து இருக்கும்.
இப்போது இடுக்கி கொண்டு ரொட்டியை எடுத்து திருப்பி அடுப்பில் நேராக போடவும் (முதலில் கல்லில் பட்ட பகுதி இப்போது அடுப்பில் படும். அதாவது குறைவாக சிவந்த பக்கம்).
தேவைப்பட்டால் தீயைக் குறைக்கவோ, கூட்டவோ செய்யலாம். சில நொடிகளில் நன்றாக உப்பி வரும். ஏதேனும் ஓரத்தில் ஓட்டை விழுந்தால் உப்பாமல் போகும், ஆவி வரும் பகுதியை இடுக்கியால் மூடிப்பிடித்தால் மீண்டும் உப்பி வந்துவிடும்.
இதன் உள் பகுதி பரோட்டா போல லேயர் லேயராக இருக்கும். சாப்பிட மிகவும் மிருதுவாகவும் இருக்கும்.
சுவையான ஃபுல்கா தயார். விருப்பமான பக்க உணவோடு பரிமாறவும். இரண்டு நாட்களானாலும் கெட்டுப்போகாது, ஹார்டாகாது.

நீரின் அளவு மாவுக்கு மாவு மாறுபடும். நான் பயன்படுத்தியிருப்பது ஆசிர்வாத் மல்டிக்ரெய்ன். இடுக்கியின் முனை கூர்மையாக இருக்க கூடாது. இல்லையெனில் ஓட்டை விழுந்துவிடும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனி,ரொம்ப பயனுள்ள குறிப்பு.படங்கள் ரொம்ப தெளிவாகவும்,அழகாகவும் இருக்கு.முதல் பதிவு நான் பண்ணதுல கூடுதல் மகிழ்ச்சி.வாழ்த்துக்கள் வனி.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

நன்றி வனி சிஸ். ரொம்ப விரிவான விளக்கம் மற்றும் படங்கள்.

இனியும் சப்பாத்தி செய்ய வரல, ஃபுல்கா செய்ய வரலன்னு சொன்னா. அவ்வளவு தான். அப்புறம் வனி சிஸ் பெஞ்ச் மேல ஏத்திருவாங்க

உன்னை போல் பிறரை நேசி.

ஃபுல்கா நல்லா இ௫க்கு. நான் ஃபுல்கா நேற்று செய்தேன் , உங்கள் குறிப்பு உபயோகமா இ௫ந்தது. நன்றி
பூரி செய்தேன் கொஞ்சம் சொதப்பல், உங்களுக்கு பதிவிட கஷ்டமாக இ௫ந்தது, வனி அக்கா முதல் இரண்டு பூரி புஸ்னு நல்லா இ௫ந்தது, ஆனா அடுத்து புஸ்னு வரல ஆனா சாஃப்டா இ௫ந்தது, நான் எப்பவும் பூரி செய்தா அப்பளம் மாதிரி வ௫ம் ,இந்த முறை புஸ் புஸ்னு இல்ல ஆனா சாஃப்டா இ௫ந்தது, அவுங்க பரவாயில்லை நல்ல improvement போக போக நல்லா வந்து௫ம் னு சொன்னாங்க.
//உங்க பதிவு எப்பவும் தமிங்கிலத்தில் தான் படிக்கிறதா நியாபகம்... சரியா? இல்ல நான் தான் சரியா நினைவில்லாம சொல்றேனா?? :( எனி வே... தமிழில் பதிவு பார்த்தது சந்தோஷம் :) // ஆமா வனிக்கா பாப்பா வ கைல வச்சுகிட்டு பதிவிட முடியல இப்ப 9 மாசம் ஆகிவிட்டது வாக்கர் உட்கார ல வச்சுட்டு லேப்டாப் ல உட்கார்ந்து பதிவிட ஈசி அ இ௫க்கு. இனி நிறைய பதிவு தமிழ் ல இ௫க்கும், கொஞ்சம் தமிங்கிலத்தில் இ௫க்கும்.

ரம்யா ஜெயராமன்

அட ஃபுல்கா சீக்கிரம் செய்துபார்க்கிறேன்.சூப்பர்

Be simple be sample

வாவ்... சூப்பர்! விளக்கமும், படங்களும் மிகவும் அருமை.
ஏற்கனவே எங்கள் வீட்டில் இரண்டு நாட்களாக‌ ட்ரையல் நடந்துகிட்டுதான் இருக்கு...?(சின்ன‌ சின்ன‌ டிப்ஸ் 1)
கலக்கலான‌ சாஃப்ட் ஃபுல்காவோடு மீண்டும் பதிவிடுகிறேன்...
மிக்க‌ நன்றி.

அருமையா செஞ்சு காமிச்சிருக்கீங்க. செய்து பார்த்துட வேண்டியது தான்.

பை த வே, அந்த சிகப்பு கிண்ணத்தில இருக்கற கிரேவியோட ஃபுல்காவ எனக்கு பார்சல் பண்ணிடுங்க :-)

எப்படி இருக்கிங்க ? நல்ல குறிப்பு , விளக்க படங்கள் ரொம்ப நல்லா இருக்கு . வாழ்த்துக்கள் .ஒரு பெரிய சந்தேகம் எனக்கு!!!! ஃபுல்கா , சப்பாத்தி என்ன வித்தியாசம் ஒரெ மாதிரி தானே இருக்கு. கொஞ்ஜம் க்லியர் பன்னிடுங்க அக்கா By Elaya.G

புல்கா செம ஹிட்... தேன்க்யூ

வனி, ஃபுல்காவை நான் ஃபுல் கட்டு கட்டிட்டேன். மக்களே ஃபுல்கா காலி ஆயிடுச்சு :). நான் ஒருபக்கம் மட்டும் தவாவில் போட்டுட்டு உடனே நெருப்பில் காட்டுவேன். உப்பி வரும் ஆனால் ஆறியதும் ஹார்ட் ஆகிடும். இனிமேல் உங்க முறை ஃபாலோ பண்றேன். நன்றி வனி.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

செய்முறை நல்லா தெளிவா காட்டியிருக்கீங்க‌;)
எனக்கு சில‌ இடங்களீல் புஸ்ஸுனு வராம‌ அப்படியே இருக்கும். பிசைந்தது போதாதோ என்னவோ..
செய்து பார்த்துட்டு சொல்றேன். வனி

பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு. கண்டிப்பா செய்து பார்கிறேன்.

அன்புடன்
பாரதி வெங்கட்

ஃபுல்கா.. ஒன் ஆஃப் மை ஃபேவரிட் ரெசிபி..
இதுக்கு மேல‌ ஃபுல்கா தயாரிப்பது எப்படின்னு யாரும் விளக்க‌ முடியாது ..

எப்போதும் போல‌ அசத்தல் குறிப்பு.. :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வனி சூப்பர். ஃபுல்கா நன்றாக வந்திருக்கு. நான் இதுவரை செய்தது இல்லை. செய்துபார்க்கிறேன். செய்த விதம் அருமை. பார்க்க அழகாக இருக்கு. வாழ்த்துகள் வனி.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

Eppdi irukkega. today night tiffen intha receipe than super ah irukku .neega hot water use pannegala illa normal water ah sonnegana unga formula la seiven

God is great

வனி ரொம்ப அழகா தெளிவா சொல்லியிருக்கீங்க சூப்பர் படங்கள் அழகு :) கண்டிப்பா செய்துட்டு சொல்றேன் சப்பாத்தி என்னோட ஃபேவரைட் ஐட்டம் ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

என்னை நல்லா கிண்டல் பண்ணாம குறிப்பை வெளியிட்டுபுட்டீங்க... அதுவரை பெரிய நிம்மதி எனக்கு ;) தேன்க்யூ தேன்க்யூ. இந்த மாதிரி ரெசிபிலாம் அனுப்புறதா? இதுல போய் என்ன இருக்கு, தெரியாதவங்க ஒரு சிலர் தானேன்னு ரொம்ப யோசனை. போதாததுக்கு இதுக்கு இம்புட்டு விளக்கமான்னு வேற யோசனை. ஆனா நான் ஆரம்பத்தில் செய்த போது என்ன என்ன தப்பு பண்ணேன், நான் கத்துகிட்டதுன்னு எல்லாம் சொன்னா செய்யும் போது புதுசா செய்யுறவங்களூக்கு குழப்பாம இருக்கும் என்ற எண்ணத்தில் தான் பெருசா விளக்கம் சொல்லி அனுப்பினேன். இப்போ கீழே இருக்க பின்னூட்டங்களை பார்க்கும் போது மனசுக்கு ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு, பயனுள்ள ஒரு விஷயத்தை தான் அனுப்பி இருக்கேன்னு. எனக்கு இதை டெல்லியை சேர்ந்த ஒரு தோழி சிரியாவில் இருக்கும் போது கற்று கொடுத்தார். எடுத்ததும் சரியா வரல. அவங்க வீட்டுக்கு போகும் போதெல்லாம் அடுப்படியில் உதவ போவேன். அவங்க 10ஆவது படிச்ச பொண்ணு கூட எனக்கு ட்ரெய்னிங் கொடுத்தா இதை செய்ய. ;) மலரும் நினைவுகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கள் பதிவுகள் கண்டு ரொம்ப நாள் ஆன நினைவு. நலமா இருக்கீங்களா? அடிக்கடி வாங்க. :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹஹா... பென்ச் மேல இதுக்குலாம் ஏத்த மாட்டேன்... இப்பவும் சரியா வரலன்னா தாராளமா சொல்லுங்க, எங்க தப்பு பண்றோம்னு கண்டு பிடிச்சு சரி பண்ணிடலாம். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆகா... பிள்ளைகள் உங்களை இப்ப ஃப்ரீயா விட்டுட்டாங்களா? கலக்குங்க :)

பூரி என்ன தப்பு பண்ணிருப்பீங்கன்னு புரியுது. தீ குறைவா இருந்திருக்குன்னு நினைக்கிறேன். அதிகம் சிவந்திருக்காது?? சரியா? தீயை நடுவில் நீங்க சரி பண்ணாததால் வரலன்னு நான் நினைக்கிறேன். ப்ளாக் போஸ்ட்டுக்கு வாங்க, டிஸ்கஸ் பண்ணி சரி பண்ணிடலாம் :) இதை சொல்ல எதுக்கு கஷ்டம்? நாங்களும் இந்த ஸ்டேஜ் எல்லாம் தாண்டி தானே வந்திருக்கோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செய்து பார்த்து சீக்கிரம் படங்காட்டுங்க‌ ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நலமா? இரண்டு நாள் ட்ரயல் என்ன‌ சொல்லுது? இப்போ குறிப்பு வந்த‌ பிறகு முயற்சி வெற்றி பெற்றதா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

க்ரேவியோட‌ ஃபுல்காவை அனுப்புறது சரி, நீங்க‌ செய்தீங்களா? வந்ததா ஒழுங்கா? :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நலமா? :) ஃபுல்கா என்பது தவாவில் பாதியும், தீயில் நேராகயிட்டு பாதியுமா சமைப்போம். சப்பாத்தி முழுக்க‌ கல்லிலேயே சுட்டு எடுப்போம். எனக்கு தெரிஞ்சு இது தான் வித்தியாசம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தேன்க்யூ தேன்க்யூ... படம் காட்டி அசத்திட்டீங்க‌ :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஒரு பக்கம் மட்டும் போடும் போது ஹார்ட் ஆகும் தான் :) இப்படி இரண்டு பக்கமும் போடும் போது கூட‌ ரொம்ப‌ வெள்ளையா எடுத்து போட்டுட்டா ஹார்ட் ஆகும் சில‌ நேரம். அதனால் சரியா அந்த‌ பதத்துக்கு விட்டு எடுக்கணும். செய்து பார்த்து பதிவிட்டது மிகுந்த‌ மகிழ்ச்சி கவிசிவா :) நன்றி நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) எப்படியும் ஒரு 10 நிமிஷம் நல்லா பிசையணும். அப்ப‌ தான் ஒரு சீரா பிசைந்து வரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க‌ நன்றி :) ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க‌.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//இதுக்கு மேல‌ ஃபுல்கா தயாரிப்பது எப்படின்னு யாரும் விளக்க‌ முடியாது ..// ‍ ஹிஹிஹீ... நான் கூட‌ ரெம்ப‌ விளக்கிட்டோமேன்னு தான் நினைச்சேன் ;) இட்ஸ் ஓக்கேன்னு விட்டாச்சு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க‌ ரேவதி :) பீசாவே செய்யறீங்க‌... இதெல்லாம் ஜுஜுபி மேட்டர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் நலம் :) நீங்க‌ நலமா? ஹாட் வாட்டர் தேவை இல்லைங்க‌, வெறும் தண்ணி தான் பயன்படுத்திருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அவசியம் செய்துட்டு சொல்லுங்க‌ :) தேன்க்யூ சுவா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நேற்றிரவு ஃபுல்கா செய்தேன்...
முதல் இரண்டு ஃபுல்கா மட்டும் பாதி உப்பிய‌ நிலையில் பிரச்சனை செய்த‌து (பெரிய‌ உருண்டையாக‌,சற்று தடிமனாக‌ தேய்த்ததால்...)
தவறைப் புரிந்து கொண்டு மீண்டும் முயற்சித்ததில் சாஃப்ட் ஃபுல்கா கிடைத்தது.
தேங்க்யூ.

ரொம்ப ரொம்ப அருமையாக வந்தது. சாப்ட்டோ சாப்ட். எங்க தலைவருக்கு ரொம்ப புடிச்சிருந்தது. இன்னும் தொடருங்கள்.
நன்றி
பாரதி வெங்கட்

அன்புடன்
பாரதி வெங்கட்

வனி அக்கா,
ரொம்ப‌ அருமையா சொல்லி இருக்கீங்க‌, பூரி தான் உப்பினா நல்லா இருக்கும்னு நினைச்சேன் புல்காவும் உப்பினா டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு இப்போ தெரியுது..

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சூப்பர் நல்லா வந்துடுச்சா?? :) //பாதி உப்பிய‌ நிலையில் பிரச்சனை செய்த‌து (பெரிய‌ உருண்டையாக‌,சற்று தடிமனாக‌ தேய்த்ததால்// - தடிமனா தேச்சதால இருக்காது (நீங்க கொஞ்சம் தானே தடிமனா தேச்சதா சொல்லிருக்கீங்க), அன் ஈவனா தேச்சிருப்பீங்க. அப்ப தான் அங்க அங்க உப்பி அங்க அங்க உப்பாம வரும். எனி வே உங்களுக்கு சரியா வந்தது எனக்கு பயங்கர சந்தோஷம் :) தேன்க்யூ சோ மச்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செய்து பார்த்து பதிவிட்டதுக்கு ரொம்ப நன்றி பாரதி... :) உங்க எல்லாருக்கும் பிடிச்சதில் இந்த குறிப்பு அனுப்பிய பலன் கிடைச்சது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) ட்ரை பண்ணிப்பார்த்து சொல்லுங்க சுபி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்போ தான் புல்கா செய்து சாப்பிட்டு முடித்தோம்.
சூப்பரா வந்துச்சு வனி.
பத்து நிமிஷம் பிசைந்தேன்.
அப்புறமா நான் பெரிய‌ ரவுண்டா செய்வதுவும் சரியாக‌ வராமல் போக‌ வாய்ப்பு இருப்பதை புரிந்து சின்னதாக‌ இட்டேன். அருமையா புஸ்ஸுனு வந்துச்சு
தான்க்ஸ் வனி:)

இப்பொழுதெல்லாம் நீங்கள் கற்றுக்கொடுத்த ஃபுல்கா தான் அடிக்கடி செய்கிறேன்.
அந்த‌ அளவுக்கு ஹிட்...!
மிக்க‌ நன்றி.

ஆமாம் நான் சொல்ல மறந்திருக்கேன்... அடுப்பு சைசுக்கு ஏற்றபடி இருக்கணும் ரொட்டி சைஸும். பெரிய் ரொட்டியை சின்ன அடுப்பின் போட்டா உப்பாம போகும். எனக்கு ஃபுல்கா எல்லாம் ரொம்ப நேரம் நின்னு சுட சோம்பேரி... பெருசு பெருசா சீக்கிரம் போட்டு முடிச்சுடுவேன். உங்களுக்கு நல்லா வந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி நிகி. :) நன்றி நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆஹா... படிக்கவே ஆனந்தமா இருக்கே :) நன்றி நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Pulka nan saythu parthan sariya varala. Pus nu varala. Unga tips parthu panninan. Mavu correct a than pisaithan. Nan kambi vaitha net vangi athil saythu parthan. Pusunu varama karuki vidukirathu. Chappati soft a varavum tips sollunga