plz clear my doubt friends

Enaku 2years la baby irrukan...enaku normal delivery dhan achu...apova doctor nee second baby vachikatha nu sollitanga becoz un health condition ku second baby thangathu nu apadiya miri second baby karu tharicha ungala kapatha mudiyathu nu sollitanga..atha mathir nadainthuduchu conceive agi check up poitu vantha 2days la abort ayiduchu.enaku first baby ah neriya treatment pani dhan heart beat vanthuchu..
En family la ellorum kekkaranga yean innoru baby vachikala nu enala yaar kitayum unmaiya solla mudiyala.en mamiyar ovoru month um kekkaranga en husband yaar kitayum solla vendam nu sollararu..abort ana aparam doctor kita ponan avingalum atha dhan sollaranga ithuku mela neenga baby ku try panathinga nu...athu unga uyir ka danger nu...ena panarathu friends plz sollunga...

Yean enaku mattum reply pana mattakringa friends

பதிவு தமிழில் இருந்திருந்தா பலரும் படிச்சு பதில் சொல்ல வாய்ப்பு இருந்திருக்கும். தலைப்பும் மொட்டையா ஹெல்ப்புன்னு இருந்ததால யாரும் பார்த்திருக்க மாட்டாங்க.

உங்க உடல் நிலைக்கு அடுத்த பிள்ளை வேணாம்னு மருத்துவர் சொன்ன பிறகும், மற்றவர் வாய் வார்த்தைக்காக முயற்சி பண்ணதே தப்பு. ஏங்க... உங்களுக்கு எதாச்சும் ஆனா அவங்களா நீங்க முதல்ல பெத்து வெச்சிருக்க பிள்ளையை பார்க்க போறாங்க??? நல்லா திட்டிபுடுவேன். நாளை அந்த பிள்ளையில் எதிர் காலம் என்ன ஆகும்? சொன்ன டாக்டரெல்லாம் கிருக்கனா? தயவு செய்து யார் என்ன சொன்னாலும் “முதல் குழந்தை பிறக்கவே நிறைய சிரமப்பட்டதால் டாக்டர் அடுத்தது முடியாதுனு சொல்லிட்டாங்க”னு தைரியமா சொல்லுங்க. இதை சொல்லாம எதுக்கு மறைக்கணும்? அதனால் ஆகப்போறது என்ன? ஒன்னுமில்ல. இப்படி அவங்க சொல்றங்க, இவங்க கேக்கறாங்கன்னு அடுத்ததுக்கு முயற்சி பண்ணாதீங்க... தயவு செய்து உங்க பிள்ளையின் எதிர் காலத்தை மனதில் வைத்து உடம்பை கவனிச்சுக்கங்க. :) நல்லபடியா இருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Thanks for ur advice akka...innima yaar ketalum thareiyama pathil sollidaran...inni yaar paechaiyum kekka povathu illai...en paiyana nala pathukaran and en health yum nala kavanchikaran...

இது நல்ல பிள்ளைக்கு அழகு... இன்னைக்கு உங்களை கேள்வி கேட்கும் யாரும் உங்க கஷ்டத்தில் பங்கெடுக்க போவதில்லை, உங்களூக்கு உதவப்போவதும் இல்லை. அதனால் ஜஸ்ட் இக்னோர். :) பிள்ளையோட ஆரோக்கியமா மகிழ்ச்சியா இருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Thank u akka :)

நீங்க பேசுவது கவலையாகவும் கோவம் வரமாதிரி தான் இருக்கு. ஏங்க அங்க அங்க ஒரு பிள்ளை பிறப்பதற்கு என்னை பிடி உன்னை பிடின்னு இருக்காங்க. நீங்க இவ்வளவு கஷ்டத்திலும் ஒரு குழந்தை உங்களுக்கு உண்டானது கடவுள் செயல். அதை நினைத்து மனநிறைவோடு சந்தோஷமாக வாழ்வதை விட்டுட்டு ஊர் கேட்குதேன்னு திரும்பவும் ட்ரை பண்ணி அது அபாட் ஆகி திரும்பவும் உடம்முடியாம ஏம்மா இந்த வேதனை ஒழுங்க உடம்பை பார்த்துக்கோங்க. உங்களுக்கு ஒன்றுன்னா ஊர் வராது. நீங்களும் உங்கள் கணவரும் தான் கஷ்டபடனும். இருக்கும் பிள்ளையை வைத்துக் கொண்டு சந்தோஷமா வாழ்க்கையை வாழுங்க. மூன்றாவது நபர் பேச்சை காதில் போட்டுக்கொண்டு வாழ்ந்தோம் நம் வாழ்க்கை நரகம் தான். தயவு செய்து புரிந்துக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். உங்கள் உடல்நலனை பார்த்துக்கொள்ளுங்க. திரும்பவும் அந்த தவறை செய்யாதீங்க.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

Neenga sollarathu correct dhan thozhil...ipothu migavum kavalaiyaga ullathu...

Nan en husband kita sonan nama vena oru kulainthaiya thaithu aduthupom nu...avar nama ku problem illa...ana urula irrukavinga en paesuvanga nu yosichu paru nu sollaru...en anne ellorum athaiya sollaranga...enaku kulainthai na romba pidikum..en anna pasangala nan dhan en marriage ku munadi varaikum pathu kitan....

தத்து எடுக்க வேண்டிய அவசியம் இப்ப என்ன வந்தது? அதான் ஒரு குழந்தை இருக்கே.. நாம் இருவர் நமக்கு ஒருவர் தான் இப்ப சரியான பாலிசின்னு பலரும் ஃபாலோ பண்றாங்க. உங்க உடல் நலத்துக்கு அது தான் சரின்னு விட்டுடுங்க. எதுக்கு மனசை குழப்பிக்கறீங்க?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஒரு குழந்தை இருக்கும் போது தத்தெடுப்பதெல்லாம் தவறான செயல்.
குழந்தையில்லாதவர் தத்தெடுக்க முடியாமல் தவிக்கும்போது குழந்தையிருக்கும் நீங்கள் தத்தெடுத்தால் தத்தெடுக்க காத்திருக்கும் குழந்தையில்லாத யாரோ ஒருவரின் உரிமையை பறிக்கிறீகள் என்று பொருள்.
சட்டமும் அதற்கு எந்த அளவுக்கு துணை நிற்கும் என்பதும் கேள்விக்குறியே .
தத்தெடுப்பது எவ்வளவு சிரமம் என்பதை அறுசுவையின் வேறொரு இழையில் கண்டால் தெரியும்.
உங்கள் குழந்தைக்கும் பின்னாளில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கலாம்.
ஒரு குழந்தையை எடுத்து வளர்ப்பதற்கு பதிலாக அத்தகு இல்லங்களுக்கு உதவலாமே.

என் கருத்துக்கள் தவறாக இருப்பின் மன்னிக்கவும்

Information is wealth

மேலும் சில பதிவுகள்