சிக்கன் ஸ்டாக்

தேதி: November 21, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

கோழி எலும்புகள் - ஒரு கிலோ
வெங்காயம் - ஒன்று (பெரியது)
கேரட் - 2
செலரி - 2
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
பிரிஞ்ஜி இலை (Bay leaves) - 5


 

கோழி எலும்பைக் கழுவி ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு, அத்துடன் நறுக்கிய காய்கள் மற்றும் மிளகு சேர்த்து, 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். கொதித்ததும் 4 மணி நேரங்கள் அடுப்பை சிம்மில் வைத்து தண்ணீர் பாதியாக வற்றும் வரை வைத்திருக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வடிகட்டியை வைத்து, வற்ற வைத்த கோழிச் சாற்றை அதில் ஊற்றி வடிகட்டவும்.
சிக்கன் ஸ்டாக் தயார். சூப் வகைகளுக்குப் பயன்படுத்தலாம்.
நன்றாக வடிந்த பிறகு வேறு பாத்திரத்தில் மாற்றி, ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைக்கலாம்.

இதற்கு கோழியின் கழுத்து, விலா எலும்பு, இறக்கைகள் மற்றும் கால்களை உபயோகிக்கலாம்.

இதே போல் காய்கறிகளையும் வேக வைத்து ஸ்டாக் தயாரிக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சிக்கன் ஸ்டாக்.. வெரி வெரி யூஸ்ஃஃபுல் ரெசிபி.. ஈஸியான‌ ரெசிப்பினலௌம் நிறைய‌ பேருக்கு தெரியாத‌ ஒன்னு.. நல்ல‌ ஹெல்தி குறிப்பு.. அப்படியே சூப்பாகவும் குடிக்கலாம் ல‌..? ..:)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ரொம்ப சுலபம் தான். இது சூப்களில், குழம்புகளில் கூட பயன் படுத்தலாம். அதிக ருசியைக் கொடுக்கும். ஆனால் சூப் போன்று தனியே குடிக்க கூடாது.(முடியாது). கடைகளில் வாங்கும் ஸ்டாக்குகளில் பிரசர்வேட்டிவ் மற்றும் அதிக உப்பு கலந்திருக்கும். வீட்டிலே சுலபமாக தயாரித்து விடலாம்.
நன்றி

ந‌ல்ல உபயோகமான‌ குறிப்பு.சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி முஸி

Healthy and Helpful..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா