நெல்லை அவியல்

தேதி: November 24, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

முருங்கைக்காய் - 2
கத்தரிக்காய் - 2
வாழைக்காய் - ஒன்று
புடலங்காய் - கால் பகுதி
வெள்ளரிக்காய் - சிறிய துண்டு
உருளைக்கிழங்கு - ஒன்று
சேனைக்கிழங்கு - கால் பகுதி
பூசணிக்காய் - ஒரு துண்டு
கேரட் - 2
பீன்ஸ் - 10
மாங்காய் - ஒன்று
தக்காளி - ஒன்று
வெங்காயம் - 2
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க:
தேங்காய் - ஒரு மூடி
பச்சை மிளகாய் - 8
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 இணுக்கு


 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும். தக்காளியைப் பொடியாகவும், மற்ற காய்கறிகள் அனைத்தையும் ஒரே அளவான, விரல் நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றைக் கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் தக்காளி மற்றும் மாங்காய் தவிர மற்ற காய்கறிகள் அனைத்தையும் போட்டு உப்பு சேர்த்து மூடி வைத்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.
பிறகு மூடியைத் திறந்து தக்காளி மற்றும் மாங்காயைச் சேர்த்து மூடி வைத்து வேகவிடவும்.
5 நிமிடங்கள் கழித்து பாத்திரத்தை இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு நன்றாகக் குலுக்கிவிடவும். (இதனால் மேலுள்ள காய்கறிகளும் வேகுவதுடன் உடைந்துவிடாமலும் இருக்கும்).
காய்கள் முக்கால் பதமாக வெந்ததும் தேங்காய் விழுதைச் சேர்த்து, மீண்டும் ஒரு முறை பாத்திரத்தைக் குலுக்கவும். அல்லது ஒரு மரக் கரண்டியால் மெதுவாகக் கலந்துவிடவும்.
மேலும் 5 முதல் 10 நிமிடங்கள் வரை மூடி வைத்து காய்கள் வெந்ததை சரி பார்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான நெல்லை அவியல் தயார்.

எங்கள் ஊர் திருமணங்களிலும், வீட்டில் நடக்கும் அனைத்து விசேஷங்களிலும் இந்த அவியல் தவறாமல் இடம் பெறும்.

அவியலை உண்ணும் போது காய்கறிகள் தனித்தனியாகத் தெரிய வேண்டும். தேங்காய் அதிகம் விரும்புபவர்கள் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

அவியலில் தண்ணீர் சத்துள்ள காய்கறிகள் அதிகம் சேர்த்திருப்பதால் துளி கூட தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. காய்களிலிருந்து வெளியேறும் நீரே போதுமானது. சிம்மில் மட்டுமே வைத்து வேகவிடுவதால் காய்கள் அடிபிடிக்காமலும், குழைந்துவிடாமலும் இருக்கும். தண்ணீர் சேர்க்காமல் வேக வைப்பதினால் அதிகச் சுவையாகவும் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

செம சூப்பர் அவியல்,காய்கள் அழகா கட் பன்னிருக்கிங்க ட்ரை பண்ணிட் சொல்லுரேன் வாழ்துக்கள் By Elaya.G

எனக்கும் அவியல் ரெம்ப பிடிக்கும் ஆனால் எங்க ஊர் சைடு வேர மாரி இருக்கும் அம்மா தயிர் சேர்ப்பாங்க இதுவும் நல்லா இருக்கு அப்புறம் காய் அருமையா கட் பன்னி இருக்கிங்க‌.இந்த‌ அவியல் நான்கூட‌ தனியா பன்னிருவேன் போல அம்மாவோட‌ சப்போர்ட் இல்லாமல் அந்த‌ அளவுக்கு சிம்பிள் அன்ட் சூப்ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

நெல்லை அவியல் சூப்பர் கலரும் அள்ளுது :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

Vani Selwyn நெல்லை அவியல் சூப்பர்.. ஒவ்வொரு படங்களும் சூப்பரா எடுத்திருக்கீங்க. காய்கள் கட் செய்திருப்பது நல்லா இருக்குங்க. வாழ்த்துகள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

hai vani. i'm deepa from nellai.we r cooking pakka nellai samayal regularly. your avail is super.give some tips about nellai samayal.we regularly used freshly grinded masalas.that means araithu vitta kulambu. friend give some tips.

அவியல் அருமை,
ரொம்ப‌ அழகா கட் பண்ணீருக்கீங்க‌, போட்டோஸ் பளீச்..
இது எங்க‌ வீட்ல‌ செய்வோம், அடைக்கு குட் காமினேசன் இது.
பொங்கல் அன்னைக்கு செய்வோம்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

பதிவிற்க்கும், பாராட்டிற்க்கும் நன்றி. செய்துப் பார்த்து பதிவிடுங்கள்.

நீங்க சொல்ற விதத்திலும் அவியல் பண்ணலாம். அதன் குறிப்பு சீதா மேடம் விளக்கமா, படங்களுடன் கொடுத்திருக்காங்க.
நன்றி கனகா முத்து

பதிவிற்க்கும், பாராட்டிற்க்கும் நன்றி

உங்கள் வருகைக்கும், பாராட்டிற்க்கும் மிக்க நன்றி

இப் பக்கத்தின் வலப்புரத்தில் வட்டார சமையல்கள் என்ற தலைப்பிற்க்கு கீழே நெல்லை சமையல் உள்ளது. உங்களுக்கு என்ன மாதிரி டிப்ஸ் வேணும் என்று குறிப்பிட்டால் எனக்கு சொல்வதற்க்கு சுலபமாக இருக்கும். நன்றி

ஆமாங்க நானும் மதியம் அவியல் வைத்தால் டின்னருக்கு அடை பண்ணுவேன். பதிவிற்க்கும், பாராட்டிற்க்கும் நன்றி

நெல்லை அவியல் சூப்பருங்க‌...
படங்கள் கண்களுக்கு விருந்து.
வாழ்த்துகள்!

we dont use podi items .pacha vathal sambar, idi sambar, vendakkai pacchadi,theeyal, vatha kulambu, kootansoru, ulinthamparuppu soru,arachu vitta paruppu,rasam, sothi,adai,these are our recipes. please give inchi paccadi recipe.i used to grind masala at the time of cooking.no stored masalas. we use coconut. give details about these recipes.basicaly my native is theni.before marriage i dont know even these recipes names. learn cooking from my mother in law.now i want to improve my cooking .if u know please give details related to ingrediants ratio, amount of coconut use,and whenever i prepare adai it gives dosai texture or tas+
te9 (my husband remarks)what is the mistake , i use idli arisi 1 cup,pattani paruppu 1/2 cup, vathal, asafotida, salt.if u understand my message please give details thanks.

ரொம்ப நல்லா இருக்குங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்கள் கேட்ட ரெசிப்பிகளின் லிங்க் கீழே கொடுத்துள்ளேன் , பார்த்து பயனடையுங்கள் தோழி

மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - http://www.arusuvai.com/tamil/node/4919
இட்லி சாம்பார் - http://www.arusuvai.com/tamil/node/22949

வெண்டைக்காய் பச்சடி - http://www.arusuvai.com/tamil/node/26834
வெண்டைக்காய் புளி பச்சடி - http://www.arusuvai.com/tamil/node/28636
அரைச்சு விட்ட ரசம் - http://www.arusuvai.com/tamil/node/16907
தேங்காய் சொதி - http://www.arusuvai.com/tamil/node/29225
பருப்பு குழம்பு- http://www.arusuvai.com/tamil/node/20171
வத்தல் குழம்பு - http://www.arusuvai.com/tamil/node/2336

தீயல் - http://www.arusuvai.com/tamil/node/5280
கூட்டாஞ்சோறு - http://www.arusuvai.com/tamil/node/15192
வெள்ளை உளுந்து சாதம் - http://www.arusuvai.com/tamil/node/28001
மெது அடை - http://www.arusuvai.com/tamil/node/29270
இஞ்சி பச்சடி - http://www.arusuvai.com/tamil/node/14092

நன்றி வனி :)

thanks vani. doubt irunthal katepan.

வாணி,
மணமான குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா