ப்ரெட் புட்டிங்

தேதி: January 22, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பிரெட் - 1 பக்கட்
முட்டை - 1
பால் - அரை லிட்டர்
சீனி- தேவையான அளவு
பாதம் - 10
பிஸ்தா - 10
பால் மாவு - கால் கிலோ
நெய் - 100 கிராம்


 

முதலில் பிரெட் ஓரங்களை நீக்கிக்கொள்ளவும்

முட்டையை நன்கு அடித்து கொள்ளவும்

பால்மாவை பாலுடன் சேர்த்து கட்டியின்றி கரைத்துக்கொள்ளவும் (தேவையானால் 1 மேசைக்கரண்டி கஸ்டர்டு பவுடர் சேர்க்கலாம்)பின் சீனி போட்டு பாலை சிறிது காய்ச்சி பிரெட்டை சேர்த்து பிசையவும்.

முட்டையை, நெய்யையும் சேர்த்து நன்கு பிசைந்து.பாதம்,பிஸ்தா தோல்நீக்கி சிறிதாக நறுக்கி நன்கு பிசைந்துக்கொள்ளவும்.

ஒரு நெய் தடவிய சட்டியில் இந்த கலவையை ஊற்றி மூடி போட்டு மூடவும்

வேறு ஒரு அகலமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி இந்த கலவையை அதில் வைத்து மேலேயும் ஒரு மூடி போட்டு மிதமான தீயில் வேகவிடவும்

வெந்துவிட்டதா என்று பார்க்க ஒரு கத்தியை வைத்து குத்தி பார்க்கவும் ஒட்டாமல் இருந்தால் வெந்து விட்டது.

சுவையான பிரெட் புட்டிங் தயார்


மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று பிரெட் புடிங் செய்தேன் வித்தியாசமான சுவை நன்றாக இருந்தது. மகன் விரும்பி சாப்பிட்டார்.உங்களுக்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

பிரெட் புட்டிங் செய்து கருத்து சொன்னதுக்கு நன்றி.மகன் விரும்பி சாபிட்டது மிகவும் சந்தோஷம்.

அன்புடன் கதீஜா.