help me plz thozhikala

என் பையன்க்கு 2 வயது ஆகிறது மிகவும் துரு துரு நு இருக்கான் என்னால் சமலிக்கா முடியல....உக்காற வைத்தல் உக்காற மட்டஙறான்...எதவாது செய்து கொண்ட இருப்பான்...ஒரு சில சமயம் அவன் செய்யும் வேலை பர்த்தல் மயக்கம் தான் வருகிறது தோழிகளா..அவனை எப்படி அமைதியாக இருக்க வைப்பது....

நாம் இப்போது இரண்டு குழந்தைகளின் சுட்டிதனத்தைப் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கிறோம். அவர்கள் அதீத மாக சுட்டித்தனம் செய்கிறார்கள் என்பதாலேயே அவர்கள் Hyper active Kids என்று சொல்லிவிட முடியாது.
நாம் சொல்வதில் கவனம் செலுத்தாமல் இருத்தல், வீட்டில் தடைகள் இருப்பின் அவற்றை விட்டு ஒதுஙகாமல் அதன் மீதே எறி இறங்குதல்.
தண்ணீர் பாத்திரங்களை தள்ளிவிட்டு ஒடுவது போன்ற செயல்கள் இருந்தால் குழந்தைகள் Hyperactive Kids . இருப்பதற்கு வாய்புள்ளது.
காரணம் அவர்களுடைய மூளை அதிகமாகவும் விரைந்து செயல்படுவதுமாகும், இதற்கு காரணம் Protein deficiency. இதனை சமநிலைப்படுத்த புரோட்டீன் சத்துள்ள உணவு குழந்தைக்கு தினமும் தரவேண்டும். பருப்பு சாதம் பாதாம் பால் இப்படி.. ஓரே உணவை குழந்தை சாப்பிட மறுக்க வாய்ப்புள்ளதால். உங்கள் அறுசுவை தோழிகள் சொல்லும் விதவித புரோட்டீன் அதிகமுள்ள உணவை குழந்தைக்கு கொடுக்கலாம். Acupuncture treatment is widely used for treating attention deficit hyperactivity disorder (ADHD) kids but no satisfactory evidence so far,என்றுதான் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.உணவு பழக்கத்தினால் சுட்டிதனத்தை குழந்தைகள் விரைவில் குறைத்துக் கொள்வதிலையெறாலும் கொஞ்ச நாளில் குறைத்துக் கொண்டதை என் வாழ்நாளில் பார்த்திருக்கிறேன். உங்கள் குழந்தைகள் அளவோடு சுட்டித்ட்தனம் செய்து அதனை நீங்கள் இரசிக்கும் காலம் விரைவில் வர இறைவனை வேண்டுகிறேன்
விவரம் தெரிந்தவுடன் தானாகவே சரியாகிவிடுவான் என்பது உணவு மாற்றதின் காரணமே. குழந்தைக்கு சற்று வயதாகும்போது உணவு பழக்கமும் மாறுகிறது.

சிறந்த occupational therapist டாக்டர்கள் இத்தகு குழந்தைகளுக்கு உதவுகிறார்கள்

Information is wealth

குழந்தை அமைதியாக இருப்பதை விட இது பரவாயில்லை. சொல்லப் போனால்... நல்லது என்பேன்.

வீட்டை குழந்தைக்கு ஏற்றபடி மாற்றிப் பாருங்கள். நீங்கள் சொல்வதெல்லாம் என் பையனும் செய்திருப்பது இப்போது நினைவுக்கு வருகிறது. அவர் பெரியவர்கள் செய்யும் காரியங்களை எல்லாம் தானும் செய்ய நினைத்திருப்பார். ரசிக்க முடிந்தாலும் சில சமயங்களில் பகீரென்றும் இருந்திருக்கிறது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அடிப்படையில் தப்பு பெரியவர்கள் மேல்தான் இருந்தது. :-) இப்போது பிள்ளை எப்படி இருக்கிறார் என்பதையும் சொல்ல வேண்டும். என் கணவர், அப்பா, அம்மா, நான் என்று அனைவர் திறமைகளும், அவற்றை விடக் கூடுதலாகச் சிலவற்றையும் ஒருங்கே கொண்டவராக இருக்கிறார். சின்ன வயதில் அடக்கி உட்கார வைத்திருந்தால் ஏதோ ஒன்றிரண்டு விடயங்களோடு நின்றிருப்பார் இல்லையா!

//உக்காற வைத்தல் உக்காற மட்டஙறான்.// அது குழந்தை. அப்படி இருந்தால்தான் குழந்தை. சும்மா உட்காரவைக்காமல் அவருக்குப் பிடித்த ஒரு வேலையைக் கொடுங்கள், உட்காருவார். உங்களைச் சும்மா ஒரு இடத்தில் உட்கார வைத்தார் உங்களால் உட்கார்ந்து இருக்க முடியுமா! நிச்சயம் இருப்புக் கொள்ளாது. குழந்தை சும்மா உட்கார்ந்தால் அதுவும் பிரச்சினைக்குரிய விடயமாகத் தான் தெரியும். :-)

நீங்கள் மீதி வேலைகளைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு குழந்தைக்காக இன்னும் அதிக நேரம் செலவளிக்கப் பாருங்கள். இன்னும் அதிகமாக வெளியே அழைத்துப் போங்கள். வேறு குழந்தைகளோடு விளையாடச் சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுங்கள். உணவு எவ்வளவு அவசியமோ அது போல, அவரது உடலுக்கும் மூளைக்கும் வேலை அதிகமாக அவசியமாக இருக்கிறது. அதைக் கொடுப்பதை விட்டுவிட்டு பெரியவர்களுக்குப் பிரச்சினை என்பதற்காக அடக்கி வைக்கப் பார்க்க வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

உங்கள் எல்லா இடுகைகளையும் காப்பி பண்ணி வந்தேன். :-)

//மிகவும் துரு துரு நு இருக்கான்// என்பது உங்கள் பிரச்சினை இல்லை. //என்னால் சமலிக்கா முடியல.// என்பதுதான் பிரச்சினை. :-) //அவன் செய்யும் வேலை பர்த்தல் மயக்கம் தான் வருகிறது// இன்னும் அதிக நேரம் நீங்கள் அவரோடு செலவளிக்க வேண்டும்.

//ஆயில் கீழ்லே கொட்டி வீட்டான் நானும் அவனுடன் சேந்து கிழ்லே வில்லுந்துட்டான்.// எண்ணெய் - குழந்தைக்கு எட்டும்படி வைக்க வேண்டாம். ஆராய்ச்சிக் குணத்தில் எடுத்திருப்பார். எண்ணெய் இருக்கும் பாத்திரம் பெரியவர்களுக்குக் கூட வழுக்கும்.

//பாத் ரும் தல் போட்டு விட்டான்.// இது நடப்பது தான். இதைப் பிரச்சினையாக நினைக்க வேண்டாம். தாளை இடம் மாற்றுங்கள். உள்ளே ஆட்கள் இருக்கும் சமயம் குழந்தைக்கு வேறு வேலை கொடுத்து வைக்கலாம். உள்ளே செல்பவர் இன்னொருவரிடம் சொல்லி விட்டுப் போகலாம். குழந்தை தாள் போட்டால் போய்த் திறக்க வேண்டியதுதான். குழந்தை உள்ளே போய்த் தாளிட்டு விடாதபடி இருப்பதுதான் மிகவும் முக்கியம்.

//..புவுடர் வாயில் போட்டு கொண்டான்.// இதையெல்லாம் கைக்கெட்டாத உயரத்தில் வைக்கலாம். பௌடரைத் தரையில் கொட்டினால் எண்ணெயைப் போலவே வழுக்கி வைக்கும்.

//அடுப்பு பத்த வைக்கறான்.// இது உங்கள் தப்பு. வீட்டைக் குழந்தைக்குப் பாதுகாப்பான விதத்தில் வைத்திருக்க வெண்டியது உங்கள் கடமை. //விளையாடுவதற்க்கு பத்திரத்தில் விளையாடுகிறான்.// பத்திரமா பாத்திரமா! எதுவானாலும் பத்திரம். :-) பத்திரங்களைக் குழந்தை பார்வை பட வைக்க வேண்டாம். பாத்திரம்... விளையாட்டுச் சமையலறைப் பொருட்கள் வாங்கிக் கொடுங்கள்.

//கொஞ்சம் கூட ஏமாத்த முடியா// ஏமாற்ற நினைக்க வேண்டாம். கவனமாக இருங்கள். //தலை சுற்றி கண் வைத்து உள்ளான்.// :-) அவதானிப்பு அதிகமாக இருக்கிறது. நல்ல விடயம். எத்தனை பேரால் இது இயலும்! குழந்தை தனித்து இருக்கும் நேரம் அதிகம் என்று தெரிகிறது.

//அவன தான் கைல எடுத்து சாப்பாடுனும் அடம் பிடிபான்.// இரண்டு வயது. இதிலென்ன தப்பு இருக்கிறது. ஊட்டி விடவேண்டுமென்று நினைக்கிறீர்களா? சாப்பிட மாட்டேனென்று அடம் பிடிக்கும் குழந்தைக்கு வேண்டுமானால் ஊட்டி விடலாம். சாப்பிடும் குழந்தையிடம் அவர் உணவைக் கொடுப்பதில் என்ன தப்பு இருக்கிறது! அவர் கேட்காமலே நீங்கள் அவரிடம் கொடுத்து விடுங்கள்.

நீங்கள் சமைக்கும் போது பாதுகாப்பான சின்னச் சின்ன வேலைகளில் உதவச் சொல்லுங்கள். உங்கள் பார்வையிலிருப்பார்.

//.அவன் எதவாது கேட்டு தரலனா // இல்லை, வேண்டாம், மாட்டேன் எல்லாம் இவர்களிடம் எடுபடாது. மாற்று ஒன்று கொடுக்கப்பட வேண்டும்.

//சார் போட்டு ச்லப் இல் ஏறி எடுத்து கொள்கிறான்// குழந்தைக்கு ஆபத்தான பொருட்களைப் பூட்டிய அலமாரியில் வைத்துக் கொள்ளுங்கள்.

சின்னதாக ஒரு அவதானம்... நீங்கள் தட்டச்சு செய்த விதத்திலிருந்து நீங்கள் மிகவும் டென்ஷனாக இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதிக வேலைகளைக் கையில் வைத்துக் கொண்டு பாலன்ஸ் செய்யச் சிரமப்படுகிறீர்கள் என்று தோன்றுகிறது. உங்களுக்கு ஓய்வு போதவில்லை என்றும் தோன்றுகிறது.

ஆறுதலாகச் சிந்தித்துப் பார்த்து, அமைதியாகச் செயல்பட ஆரம்பியுங்கள். பிரச்சினையான விடயங்களுக்குத் தீர்வு புரியும். குழந்தை பிரச்சினையாகத் தெரிய மாட்டார். ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகள் இருந்தால் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை யோசித்து முடிவு செய்யுங்கள். முடிந்த வரை குழந்தைக்கு முன்னுரிமை கொடுக்கப் பாருங்கள். தவிர்க்கக் கூடிய வேலைகளைத் தவிருங்கள்.

அடிக்கடி குழந்தையை பீச், பார்க் என்று அழைத்துப் போங்கள். அவருக்குத் தேவையான விளையாட்டு கிடைக்கும் அதே சமயம் உங்கள் மனதுக்கும் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும்.

‍- இமா க்றிஸ்

ஹாய் திவ்யா, 2 வயதிற்கான சேட்டையை சரியாதானே செய்றா௫, நீங்க கவலை பட ஒண்ணுமில்ல. என் மகன் இதே வயதில் நிறைய சேட்டை பண்ணுவான், அவனுக்கு எதை எடுத்தாலும் தண்ணீரில் போடும் பழக்கம் இ௫ந்தது, என்னோட போன் ௬ட இதிலி௫ந்து தப்பல. ஒ௫ முறை என்னோட மொபைல காணோம் காணோம் தேடினா அது தண்ணீர் கேன் ல கிடந்தது, இன்னொ௫ முறை அவ௫க்கு விளையாட டப்பா தேவைபட்டது போல அதுக்காக கிச்சன் ல கடுகு, சீரகம், சோம்பு னு 6,7 டப்பா ல இ௫ந்தத எடுத்து பாத்௫ும் பக்கெட் ல கொட்டிட்டா௫. பவுடர் டப்பா வ எடுத்து மொத்த பவுடரையும் தண்ணில போட்டு கலக்கி வச்சிடுவா௫. பாத்௫ும் ல கப்பு ல தண்ணிய எடுத்து வீட்ல ஒ௫ இடம் பாக்கி இல்லாம ஊத்தி வச்சு௫வா௫, வீட்ட துடைச்சு எடுக்க போதும் போதும் னு ஆகி௫ம், பல நாள் அதுல வழுக்கி விழுந்து௫க்கேன். எல்லா௫ம் அவன ஸ்௬ல் ல சேர்க்க சொன்னாங்க 2 வயதில். என் கணவ௫க்கும் எனக்கும் ஒ௫ துளி ௬ட வி௫ப்பமும் இல்ல அப்படி சொல்றவங்க மேல கோபமும் வந்தது, அமைதியா ஒ௫ இடத்துல உட்கார குழந்தைகள் ஒண்ணும் பொம்மை கிடையாது. என் மகனை நான் பிரி.கே.ஜி ௯ட அனுப்பல, எல்.கே.ஜி ல சேர்த்தேன்.
என் அம்மா சொன்னாங்க இந்த வயசுல ஆடுவாங்க போக போக பக்கத்துல ௬ட வரமாட்டாங்க, நாம தான் ௬ப்பிட்டு பேசணும். இப்ப யு.கே.ஜி படிக்கிறான், சேட்டை ரெம்ப குறைவு தான். அப்ப பாத்திரத்தை இழுத்து போட்டு என்னை டென்ஷன் பண்ணினவ௫ இப்ப பாத்திரத்தை எடுத்து வைக்க உதவி செய்யவா மா னு கேட்குறா௫.
இது ஒ௫ வயசு போக போக சரியா போகும். எங்க அம்மா சொல்வாங்க நீ பண்ணாத சேட்டையவா உன் பிள்ளை பண்ணுது னு, நாமளும் இப்படி தானே நம்ம அம்மாவ டென்ஷன் பண்ணி௫ப்போம். விடுங்கப்பா இது நார்மல் தான்.
ஆபத்தான பொ௫ட்களை அவர் கண்ணுக்கு தெரியாம வைங்க. சிலிண்டரை எப்போதும் லாக் பண்ணி வைங்க. ஒ௫ கண் எப்போதும் அவர் மேல இ௫க்கட்டும்.

ரம்யா ஜெயராமன்

இமா அக்கா மன்னிக்கவும் லேட்டாக பதிவு போடுவதற்க்கு,நான் என் பையனுடன் அதிக நேரம் செலவுயிடுகிறேன்...என் கணவர் இருக்கும் போத என் வேலை முடித்து விடுவேன்...நானும் குறும்பு பண்ணுகிற குழந்தை பாத்து இருக்கிறேன்..இவன் அளவுக்கு இல்லை...நான் பார்க் கூட்டி செல்வேன்..என் உறவினர்கள் எல்லோரும் இவனை எப்படி சமளிக்கறானு கேக்கறாங்க...என்னால் முன் போல் இவனிடம் பேசு குடுக்க முடியல...மன அழுத்தம் வேறு...இத்ற்கு இடையில் பல வித பிரச்சனை....அதனால் இவன் இன்னும் சரியாக பேச ஆரம்பிக்கவில்லை...இதையும் கூறை சொல்றாங்க...

ரம்யா அக்கா,நிங்க சொல்லறது சரி தான்...என் கணவர் என் பையனை ஸ்கூல் சேர்த்த ச்டெப் எடுத்து வைத்து விடடார்..நான் எவ்ளோ சொல்லியும் கேக்கவில்லை...என்னால் எதையும் தடுக்க முடியவில்லை..எனக்கு இது தான் மிகவும் கவலையாக உள்ளது...

hai vani akka ennaku marrage agi 2 years achu
innum kulandhai illai
romba payama irruku
innum test ethum parkala
give ur advise

மேலும் சில பதிவுகள்