க்ரில் வெஜ் ஸ்டஃபிங்

தேதி: November 29, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

பீன்ஸ் - ஒரு கப்
கேரட் - ஒரு கப்
கோஸ் - ஒரு கப்
குடைமிளகாய் - ஒரு கப்
வெங்காயம் - ஒரு கப்
எண்ணெய் - தேவையான அளவு
தனி மிளகாய்த் தூள் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கரம் மசாலா தூள் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைகேற்ப
ஸ்ப்ரிங் ரோல் பாஸ்ட்ரி (Spring Roll Pastry) - ஒரு பாக்கெட்


 

வெங்காயம், கோஸ், பீன்ஸ், கேரட், குடைமிளகாய் அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
நன்கு வதக்கிய பிறகு கேரட், பீன்ஸ் போட்டு பச்சை வாசனை போக நன்றாக வதக்கிவிட்டு, குடைமிளகாயைச் சேர்த்து வதக்கவும். குடைமிளகாய் வதங்கியவுடன் சிறிது தண்ணீரைத் தெளிக்கவும்.
பிறகு கோஸ் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.
நன்றாக பச்சை வாசனை போக வதங்கியதும் தூள் வகைகளைச் சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வதக்கி இறக்கவும்.
வதக்கிய கலவையைத் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். இப்பொழுது ஸ்டஃபிங் செய்ய மசாலா கலவை ரெடி.
பிறகு ஒரு ஸ்ப்ரிங் ரோல் பாஸ்ட்ரியை (Spring Roll Pastry) எடுத்து, அதில் தயார் செய்த மசாலா கலவையை வைத்து மடித்து இருபுறமும் எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
200 டிகிரி முற்சூடு செய்த அவனில் வைத்து, க்ரில் மோடில் 300 டிகிரியில் 10 நிமிடங்கள் வைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து மறுபுறம் திருப்பிவிட்டு மேலும் 5 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
ஸ்பைசி & டேஸ்டி க்ரில் வெஜ் ஸ்டஃபிங் (Grill Veg Stuffing) ரெடி. முதன் முதலாகச் செய்தது. டேஸ்ட் சூப்பராக இருந்தது.

ரோல் செய்வதற்கு ஸ்ப்ரிங் ரோல் பாஸ்ட்ரிக்கு பதிலாக மைதா மாவையும் பயன்படுத்தலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரேவ் கலக்கல் அன்ட் ஈசி குறிப்பு.ஸ்டஃபிங் செய்த‌ மசாலா போட்டோ பர்க்கவே டெம்ப்டிங்கா இருக்கு, முதல் பதிவு நான் தான், ஆனாலும் ஒன்னு மட்டும் எடுத்துக்கிறேன்.. வாழ்த்துக்கள் ரேவ்:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

பார்க்கவே ரொம்ப‌ அழகாக‌ இருக்குங்க‌. எனக்கும்!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

ரேவ் கிரில் வெஜ் ஸ்டஃபிங் சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அருமையான குறிப்பு.செய்து பார்த்து சொல்கிரேன்..

க்ரில் வெஜ் ஸ்டஃபிங்.. சூப்பர் அன்ட் டெம்ப்டிங் ரெசிபி.... :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

டீப் ஃபிரை பண்ணாமல் அவனிலே சுலபமா செய்திடலாம் போல, சூப்பர்

ரேவதி,
எளிமையான குறிப்பு
ட்ரை பண்ணிட்டு சொல்றேன்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு மிக்க நன்றி..

வாழ்த்துகள் கூறிய அனைத்து தோழிகளுக்கு மிக்க நன்றி..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

அன்பு ரேவதி,

ரொம்ப‌ நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி