முட்டை

முட்டையை வேகவைக்கும் பொழுது சில நேரங்களில் விரிசல் ஏற்ப்பட்டு முட்டை வெளியில் வந்து விடும். காரணம் குளிந்த நீரை ஊற்றுவதாலோ அல்லது சூடான நீரை ஊற்றுவதாலோ அல்லது போதியளவு தண்ணீரில்லாமலோ இருக்கலாம்.இவற்றை தவிர்க்க பாத்திரத்தில் சாதாரண தண்ணீரை முதலில் ஊற்றிய பிறகு முட்டையை மெதுவாக அதில் வைக்கவேண்டும். முட்டையின் மேல் தண்ணீர் இரண்டு மடங்கு இருக்கவேண்டும்.
குளிர் சாதனப் பெட்டியில் இருந்து எடுத்த முட்டையானால் ஒரு சில நிமிடங்கள் முட்டை தண்ணில் அப்படியே இருக்க வேண்டும். அதாவது தண்ணீர் room temperature நிலைக்கு வந்த பிறகு அடுப்பை ஏற்ற வேண்டும்.
வெந்த முட்டையை எளிதில் உரிக்க அதை குளிர்ந்த நீரில் போட்டு எடுத்து இலேசாக தட்டி விரிசல் ஏற்ப்படுத்தி மீண்டும் அதே தண்ணீரில் போட்டு ஐந்து நிமிடம் கழித்து உரித்தால் ஓடு சுலபமாக கழன்று வரும்.
குளிர் சாதனப் பெட்டியில் வைத்திருந்த வேகவைத்த முட்டையை சுடு தண்ணீரில் இலேசாக தட்டி அதில் போட்டு ஐந்து நிமிடம் கழித்து உரித்தால் அதன் ஓடு சுலபமாக கழன்று வரும்.
முட்டையில் கொழுப்பு அதிகம் உள்ளது என்று அதை ஒரேயடியாக ஒதுக்கி விடாமல் வேகவைத்த முட்டையின் மஞ்சட் கருவை மட்டும் நீக்கி விட்டு அதன் வெள்ளைகருவை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
வளரும் சிறுவர்களுக்கு சூடான பாலில் முட்டையை கலக்கி ஊற்றி நன்கு அடித்து சிறிது சர்க்கரை சேர்த்து வெது வெதுப்பாக அருந்தச் செய்யலாம்.உடம்பிற்க்கு மிகவும் நல்லது.

டியர் மனோஹரி மேடம்,

வேகவைத்த முட்டையை குளிர்சாதனபெட்டியில் எத்தனை நாட்கள் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம்.

நன்றி.

நன்றி...

டியர் திருமதி வாணி அவர்களுக்கு, குளிர் சாதனப் பெட்டியில் வேகவைத்து தோலுரித்த முட்டையை ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம். தோலுரித்தவுடன் நன்கு ஆறவைத்து காகித நாப்கினால் நன்கு துடைத்து விட்டு டப்பாவில் போட்டு வைக்க வேண்டும்.
வேக வைத்து தோலுரிக்காத முட்டையை இரண்டு வாரம் வரை வைத்திருக்கலாம் கெடாது.நன்றி.

டியர் மனோஹரி,
நன்றி

நன்றி...

மேலும் சில பதிவுகள்