சிக்கன் 65

தேதி: December 2, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

சிக்கன் - அரை கிலோ
சிக்கன் 65 மசாலா - ஒரு பாக்கெட்
இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தனி மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
எலுமிச்சை பழம் - ஒன்று
தயிர் - ஒரு கப்
கார்ன் ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி (மொறுமொறுப்பாக வேண்டுமானால்)
முட்டை - ஒன்று
உப்பு - தேவையான அளவு


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சிக்கனை ஃபோர்க்கால் நன்றாக குற்றிவிட்டு, கத்தியைக் கொண்டு கீறிக் கொள்ளவும். (இப்படிச் செய்வதால் மசாலாவில் ஊறவைக்கும் போது சிக்கனின் உள்ளே நன்கு ஊறும்).
பிறகு சிக்கனுடன் தூள் வகைகள் மற்றும் கார்ன் ஃப்ளாரைச் சேர்த்து நன்கு கலந்து, தயிரை ஊற்றி நன்றாகக் கலக்கவும். பிறகு எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்துப் பிரட்டி, கடைசியாக முட்டையை உடைத்து ஊற்றி நன்றாகக் கலக்கவும். (சிக்கன் முழுவதும் அந்த மசாலாவில் மூழ்கும்படி இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மசாலாவில் சிக்கன் நன்கு ஊறும்). சிக்கன் கலவையை ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரீஸரில் (Freezer) 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
2 மணி நேரம் கழித்து எடுத்து சிறிது நேரம் வெளியில் வைத்திருக்கவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, ஊறிய சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
சூடான, சுவையான சிக்கன் 65 ரெடி..


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நாந்தான் பர்ஸ்ட் ரேவ். யம்மி சண்டே லிஸ்ட்ல இதுவும் சேர்த்துக்கோங்க.

Be simple be sample

Vandhuduchaa 2 kaalum inga ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சிக்கன் 65 சூப்பரா படங்காட்டுது, நல்ல‌ ஈசியான‌ குறிப்பு, வாழ்த்துக்கள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சூப்பரு இத நான் பாக்கலயே :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.