புலஹன்னம்

தேதி: December 3, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

பாஸ்மதி / பச்சரிசி - ஒரு கப்
பாசிப்பருப்பு - கால் கப்
தேங்காய் விழுது - 3 தேக்கரண்டி
வெங்காயம் - பாதி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - தேவைக்கேற்ப
எண்ணெய் + நெய் - ஒரு தேக்கரண்டி
முந்திரி - தேவைக்கேற்ப
மிளகு -அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு - தேவைக்கேற்ப


 

இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். அரிசியைக் களைந்து 15 நிமிடங்கள் ஊறவிடவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் நெய், எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அத்துடன் ஊற வைத்த அரிசி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு தேங்காய் விழுது சேர்த்து, தண்ணீர் ஊற்றி பெருங்காயம் சேர்த்து வேக வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
சுவையான புலஹன்னம் தயார். ஆறியவுடன் மேலே நெய் விட்டு பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எளிமையான குறிப்பு நல்லாருக்கு கவிதா. பாசிப்பருப்பை வறுக்க (அ) ஊறவைக்க தேவையில்லையா?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பு கவிதா,

நாளைக்கே இந்தக் குறிப்பை செய்து பார்க்கிறேன். ரொம்பப் பிடிச்சிருக்கு.

நன்றி கவிதா.

அன்புடன்

சீதாலஷ்மி

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

உமா,
கழுவி சேர்த்தாலே போதும்,crunchy ஆக சாப்பிடுவதுதான் இந்த குறிப்பின் ஸ்பெஷல்..
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

சீதாம்மா,
ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி..

என்றும் அன்புடன்,
கவிதா

உங்க‌ புலஹன்னம் ரொம்ப‌ நல்லா இருந்தது! என் பையன் சாப்பிட்டுட்டு ""பொங்கல் பிரியாணின்னு"" சொல்றான்!

அனு,
ரொம்ப ரசித்தேன்..
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

புலஹன்னம், சூப்பர். வெறும் சட்னிதான் தொட்டுக் கொள்ள, அதுவே ரொம்ப நல்லா இருந்தது.
சுவையான குறிப்பிற்க்கு நன்றி

வாணி,
வருகைக்கும்,செய்து பார்த்து பதிவிட்டமைக்கு நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா