கிச்சன் குயின் - 2

அன்பான அறுசுவை மக்களே, கிச்சன் குயின் பாகம் 1 வெற்றிபெற்றதை கொண்டாட வேண்டிய நேரம் வந்து விட்டது :) இந்த வாரம் முழுக்க முகப்பில் வரப்போகும் குறிப்புகளையும் தோழிகளின் பெயரையும் காண மிகுந்த ஆவலோடு நானும் காத்திருக்கிறேன். அந்த சந்தோஷத்தை இரண்டு மடங்காக்க இதோ அடுத்த பகுதி உங்களுக்காக வந்துவிட்டது. இம்முறையும் அறுசுவையில் புதைந்து கிடக்கும் விளக்கப்படம் இல்லாத குறிப்புகள் உங்களுக்காகவே இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது. நிச்சயம் இவற்றையும் செய்து சுவைத்து “நல்ல நல்ல குறிப்புகள், இத்தனை நாள் கண்ணில் படவில்லையே” என்று நிச்சயம் எண்ண வைக்கும். :) இதோ பட்டியல்:

1. ஹைதராபாத் கோழி வறுவல் (செண்பகா)
2. 554 - கட்டா மீடா நிம்பு
3. மாங்காய் சொதி (செண்பகா)
4. குவாக்கமொலே (சுமி)
5. 3366 - மெக்ஸிகன் சிக்கன் கேசரோல்

6. 13125 - செந்தோல் (Chendhol)
7. 4083 - தாய்லன்ட் கார்லிக் சிக்கன்
8. தாய்லாந்து சிக்கன் கறி ( Gang Gai ) (தர்ஷா)
9. 1981 - தாய்லாந்து சைவ தேங்காய்ப்பால் சூப் (Hed Tom Kha)
10. 3569 - மஷ்ரூம் பார்லி சூப்

11. கொத்தவரங்காய் மோர் குழம்பு (பாலநாயகி)
12. சில்லி மட்டன் வறுவல் (ரேவஸ்)
13. 1168 - மோர் வில்லை
14. 268 - பச்சைமிளகாய் சிக்கன் டிக்கா
15. 338 - ஸ்டஃப்டு நண்டு

16. 1962 - சாம்பார் வெங்காயம் கறி
17. தயிர் குருமா (மெர்சி)
18. முருங்கைக்கீரை சுண்டைக்காய் வறுவல் - 2590
19. 3374 - வனிலா ஐஸ் கிரீம்
20.ஊந்தியா (செண்பகா)

21. 4800 - அடைத்த பெல் பெப்பர் (Stuffed Bell Peppers)
22. 5156 - லசான்யா (Lasagna)
23. தாய்லாந்து சிக்கன் வெஜிடபிள் ஸ்டிர் ஃபிரை (பாக்கியா)
24. 4087 - மெக்ஸிக்கன் சில்லி
25. 4232 - மெக்ஸிகன் சாட்டேட் ஷிரிம்ப்

26. 1707 - தஞ்சாவூர் ஃப்ரைடு நண்டு
27. கஸ்டர்ட் அப்பிள் புடிங் (ஹேமா)
28. ஜெல்லி ஐஸ்க்ரீம் - 3151
29. கஸ்டர்டு ஐஸ்க்ரீம் - 3153
30. எலுமிச்சை மார்மலேட் - 6203

31. கவ்வர் மசாலா - 22820
32. கேரள நண்டு மசாலா (செண்பகா)
33. சில்லி நண்டு (சைனீஸ் முறை) (பாலநாயகி)
34. நண்டு மசாலா குழம்பு (பாலநாயகி)
35. தேங்காய் மிளகு வறுத்து அரைத்த நண்டு (செண்பகா)

36. சிறுகிழங்கு பொரியல் (மெர்சி)
37. சுண்டைக்காய் பச்சடி (ரேவ்ஸ்)
38. மேங்கோ டேங்கோ ஸ்மூதி - 19004
39. கடப்பா (ரேவஸ்)
40. கோழிச்சாறு (வாணி)

41. இத்தாலியன் பாஸ்தா (கவிதா உதயகுமார்)
42.பீன்ஸ் - தக்காளி கூட்டு (சுமி)
43. ப்ரெஷ் வெஜிடபிள் ஊறுகாய் (கவிதா உதயகுமார்)
44. 3415 - தாய்லன்ட் பீன்ஸ் ஃபிரை
45. 3641 - ஃபிரெஞ்ச் சிக்கன் ஃப்ரை

46. 3189 - மெக்ஸிகன் மேங்கோ சால்சா
47. காராமணி பகோடா (பிரபா)
48. கருணைக்கிழங்கு பக்கோடா (ஹேமா)
49.மல்லித் துவையல் (ஹேமா)
50. சிறுபயறு புட்டு (பிரியா ஜெயராம்)

51. பத்திய குழம்பு (பாலநாயகி)
52. கீரை தயிர் கறி (ஹேமா)
53.கம்பங்கூழ் (ஹேமா)
54. புல்லு கொழுக்கட்டை (ஹேமா)
55. 4225 - பார்லி & ரைஸ் புலாவ்

56. தட்டப்பயறு மசாலா (பாலநாயகி)
57. காராம8888 - காராமணிக்கடைசல் (பிரியா ஜெயராம்)
59. 7463 - காராமணி பிரட்டல்
60. கொள்ளு பொடி (பிரபா)

61. சோயா சோலே (பாலநாயகி)
62. சோயா வெஜ் மிக்ஸ் சுண்டல் (மெர்சி)
63. 12687 - சோயாபீன் மில்க்
64.சோயா வெஜ் குருமா (ஹேமா)
65. சோயாபீன்ஸ் தோசை (மெர்சி)

66. பொட்டுக்கடலை மாவுருண்டை (பிரியா ஜெயராம்)
67. பொட்டுக்கடலை துவையல் (பிரியா ஜெயராம்)
68. பொட்டுக்கடலை துவையல் (சுமி)
69. குழந்தைகளின் டானிக் (ஹேமா)
70. பொட்டுக்கடலை பாயசம் (பாலநாயகி)

71. பொட்டுக்கடலை இட்லி பொடி (ரேவ்ஸ்)
72.மசாலா மொச்சை (சுமி)
73. முட்டை குருமா (பிரபா)
74. பாகற்காய் சிப்ஸ் (பிரியா ஜெயராம்)
75. டோ நட் (தர்ஷா)

76.பால் ரவா உருண்டை (ஹேமா)
77.கேழ்வரகு தோசை (ஹேமா)
78. வெஜ் சாகு (பிரபா)
79. 11862 - உருளை பர்ப்பி
80.பஞ்சாபி சிக்கன் (சுமி)

81. 1158 - போப்ரா ரைஸ்
82.மிர்ச்சி பூரி (சுமி)
83. ஆலு பாலக் தால் (கவிதா உதயகுமார்)
84.சாஹி சிக்கன் குருமா (சுமி)
85. 364 - பாம்பே லஸ்ஸி

86. 515 - மார்வாரி மிர்சி
87. ஆலூ புர்தா (சுமி)
88. உருளை டிக்கி (சுமி)
89. தஹி பிந்தி (ஹேமா)
90. உருளைக்கிழங்கு பாஜி (தர்ஷா)

91. பேகன் பர்த்தா (கவிதா உதயகுமார்)
92. ராஜ்மா ரொட்டி (ரேவதி)
93. 10440 - காஷ்மீரி லாம்ப் க்ரேவி
94.காப்சிகம் பச்சடி (சுமி)
95.வெண்ணைய் சிக்கன் மசாலா (சுமி)

96. கச்சோடி (ரேவ்ஸ்)
97. பெங்காலி தம் ஆலு (ரேவ்ஸ்)
98. ஆலூ டிக்கியா (ரேவதி)
99. தூத் பேடா (ரேவதி)
100. சேனைக்கிழங்கு கட்லட் (கறி) – 16792

101. மட்டன் போப்ளா - 411
102. சேனைக்கிழங்கு 65 (மெர்சி)
103. சேனைகிழங்கு சாப்ஸ் (மெர்சி)
104. சேனைக்கிழங்கு கட்லெட் (ரேவதி)
105. சேனை சிப்ஸ் (பிரியா ஜெயராம்)

106. எரிச்சேரி – 4787
107. வத்த குழம்பு பேஸ்ட் (தர்ஷா)
108. சன்னாதால் ஸ்டப்டு சப்பாத்தி (ரேவதி)
109. பிரண்டை கடைசல் – 16683
110. பேச்சுலர்ஸ் ப்ரெட் டோஸ்ட் (சுமி)

111. மைதா தோசை (சுமி)
112. தயிர் குழம்பு (சுமி)
113. கொத்து புரோட்டா (சுமி)
114. சப்பாத்தி புட்டு (சுமி)
115. ஈசி ப்ரெட் உப்புமா (பிரபா)

116. எக் ரைஸ் (வாணி)
117. வெங்காய உதிரிபக்கோடா (பேச்சுலர்ஸ்க்கு) (ரேவதி)
118. கொத்துக்கறி மசாலா(பேச்சுலர்ஸ்) (கவிதா)
119. பேச்சுலர்ஸ் மெது வடை (ரேவதி)
120. புழுங்கல் அரிசிக் கஞ்சி (ஹேமா)

121. ஜிஞ்சர் மிண்ட் ப்ளாக் டீ (சுமி)
122. வெஜிடபிள் சூப் (கவிதா உதயகுமார்)
123. பருத்திப்பால் – 17457
124. ஸ்ட்ராபெர்ரி பனானா லஸ்ஸி (பாக்கியா)
125. அவகோடா டிப் (தர்ஷா)

126. டயட் சூப் (ஹேமா)
127. டயட் மோர் (வாணி)
128. பத்தியக் கஞ்சி (கவிதா உதயகுமார்)
129. உளுத்தம்மா புட்டு – 26035
130. மீன் உப்பாணம் (செண்பகா)

131. பாசிப்பருப்பு பொரித்த முட்டை (வாணி)
132. சுறா பூண்டு குழம்பு – 13883
133. சீரகம் உளுந்து மாவுருண்டை (கவிதா)
134. மசாலா இட்லி (வாணி)
135. கருப்பட்டி இட்லி (பாலநாயகி)

136. தேங்காப்பூ-இனிப்பு இட்லி (பிரியா ஜெயராம்)
137. தோப்பம் (சுமி)
138.ஜவ்வரிசி புலாவ் (பாலநாயகி)
139. 1138 - தக்காளி மஹாசா
140. 1147 - பஞ்ச கல்யாணி

141. மீ (வாணி)
142. வெஜிடபிள் பிரியாணி குருமா (கவிதா)
143. பிரட் பகோலா (தர்ஷா)
144. ஸர்வாரி (சுமி)
145. நெல்லூர் புலவு (பிரபா)

146. ஆமை வடை (பாலநாயகி)
147. கம்பு வடை (ஹேமா)
148. 1157 - கருப்பட்டி வடை
149. இஞ்சி ரசம் (கவிதா உதயகுமார்)
150. 885 - திப்பிலி ரசப் பொடியும் திப்பிலி ரசமும்

151. 273 - சிக்கன் ஷெரின்
152. சிக்கன் அக்பரா (கவிதா உதயகுமார்)
153. 276 - சிக்கன் நவாபி
154. மொஹல் சிக்கன் கறி (பாக்கியா)
155. சிக்கன் தர்பாரி (ரேவதி)

விடுபட்ட பழைய குறிப்புகளும் சேர்த்திருப்பதால் 155 குறிப்புகள் கொடுத்திருக்கிறேன். இம்முறை அவற்றுக்கான பொருட்களும் நேரமும் கிடைத்தால் முயற்சிக்க உதவும் என்றெண்ணினேன். இவற்றில் தேர்வு செய்தபின் செய்யாமல் விட்ட குறிப்புகள் இருக்காது. அதை செய்ய விரும்பினாலும் தாராளமாக செய்து அனுப்பலாம், ஆனால் அதை எனக்கு இங்கே தயவு செய்து தெரியப்படுத்தவும். இதோ ரூல்ஸ்:

1. ஆளுக்கு குறைந்தது 3 குறிப்பு செய்ய வேண்டும்.
2. மூன்றுக்கு மேல் எவ்வளவு அதிகமா வேண்டுமானாலும் செய்யலாம்.
3. இந்த ஒரு வாரம் தான் டைம். இந்த வாரம் சனிக்கிழமைக்குள் செய்து முடிக்க வேண்டும்.
4. செய்தேன்னு சொன்னா ஒத்துக்க மாட்டோம். செய்த குறிப்புகளை ஸ்டெப் ஸ்டெப்பா படமெடுத்து அறுசுவைக்கு அனுப்ப வேண்டியது கட்டாயமாக்கும். எந்த குறிப்பு என்று லின்க், ஸ்டெப் ஸ்டெப்பா படங்கள் போதுமானது.
5. கண்டிப்பா மேலே இருக்கும் குறிப்புகளில் இருந்து மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
6. எந்த குறிப்புகள் நீங்க இந்த வாரம் செய்ய இயலும் என்பதை முடிவு பண்ணி இங்க பட்டியலை முதல்ல சொல்லிடுங்க. அப்படி தேர்வு செய்யும் குறிப்பு உங்களுக்கு முன் இங்கே வந்த மற்றவர்கள் தேர்வு செய்தவைகளாக இருக்க கூடாது. குறிப்பின் அருகே அடைபுக்குள் மற்றவர்களின் பெயர் இருந்தால் அவை அவர்களால் தேர்வு செய்யப்பட்டவை என அர்த்தம். அவற்றை நீங்கள் தேர்வு செய்ய வேண்டாம்.
7. ஒருவர் 6 குறிப்புகள் செய்து அனுப்பினால் அடுத்த வாரத்தில் ஒரு நாள் முகப்பில் 6ம் புது குறிப்புகள் உங்களுடையாதாகவே ஒரே நாளில் வெளியிடப்படும்.

நீங்க தேர்வு செய்த குறிப்பை ஃபைனலைஸ் பண்ணிட்டு அந்த லின்கை உங்க பதிவில் நோட் பண்ணிகிட்டா, நான் அந்த லின்கை மேலே உள்ள பட்டியலில் இருந்து நீக்கிடுறேன். அதனால் அடுத்து பார்ப்பவர்கள் அவை தேர்வு செய்யப்பட்டவைன்னு தெரிஞ்சுக்குவாங்க.

குறிப்பு அனுப்புவது:

குறிப்பு ஏற்கனவே இருக்கு. அதனால் நீங்க தட்ட வேண்டியது இல்லை. ஆனாலும் ஏதேனும் குறிப்புகள் தேவைக்கும் கம்மியாவே (4க்கும் குறைவான) ஸ்டெப்ஸ் என்றால், அதை பிரிச்சு குறைந்தது 4 ஸ்டெப்பா தர முடியுதா பாருங்க, இல்லன்னா அதுக்கு ஜோடி சேரும், அல்லது அதே வகையான இன்னொரு சின்ன குறிப்பையும் சேர்த்து அனுப்ப முடியுதா பாருங்க. இரண்டையும் சேர்த்து ஒரே குறிப்பா வெளியிட வசதியா இருக்கும். என்ன மாற்றம் செய்திருந்தாலும் அந்த மாற்றத்தையும் சொல்லி குறிப்பை அனுப்புங்க. குறிப்பில் மாற்றம் செய்கிறவர்கள், குறிப்பை அதுக்கு ஏற்றபடி மாற்றி தட்டியோ, அல்லது அந்த மாற்றத்துக்கு ஏற்றபடி உங்கள் படங்களை விளக்கியோ டீமுக்கு அனுப்பி வையுங்கள், இல்லை எனில் ஒவ்வொன்றையும் பார்த்து குழப்பி, உங்களிடம் தெளிவு படுத்தி சேர்க்க அதிக நேரமெடுக்கும். :)

குறைந்தபட்ச 3 குறிப்பு அனுப்புறவங்க, செய்ய செய்ய அனுப்பலாம். 6 குறிப்பு அனுப்புறவங்க மெயில் “subject”ல “கிச்சன் குயின் போட்டிக்கான குறிப்பு - குறிப்பு 1” குறிப்பு 2, என்று எல்லா மெயிலிலும் சொல்லிடுங்க. அப்படி சொன்னா, அவங்க சேர்த்து வெச்சு 6ம் கிடைச்சதும் ஒன்னா வெளியிடுவாங்க. :) 6க்கும் மேல் எத்தனை குறிப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஒருமுறை லிஸ்ட் போட்டீங்கன்னா அதை என்னிடம் சொல்லாமல் எடிட் பண்ணாதீங்க ப்ளீஸ்... சில நேரம் அது என் கண்ணில் படலன்னா நான் மேலே எடிட் பண்ண மிஸ் பண்ணிடுவேன், வேறு யாரும் அதையே தேர்வு செய்துவிட்டால் குழப்பமாகிப்போகும். ;)

இனி என்ன... வழக்கம் போல பிசி விக் தான் நம்ம எல்லாருக்கும். வாங்க... என்ன என்ன ரெடி, என்ன என்ன பொருள் கிடைக்கும், என்ன செய்தா வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம், என்ன குறிப்புகள் செய்தால் அறுசுவையை அசத்தலாம் என முடிவு செய்து பட்டியலை இங்கே சொல்லிடுங்க. ;) வனி வெயிட்டிங்.

5
Average: 4.8 (5 votes)

Comments

மீ ஃபஸ்ர்ட், இது என்னோட இந்த வார லிஸ்ட் வனி. இந்த வார ஷாப்பிங்க் எல்லாம் சனிக் கிழமையோட முடிந்துடுத்து. சன்டே இங்கு மதியத்திற்க்குப் பின் கடையெல்லாம் அடைச்சிடுவாங்க. அதினால் என்கிட்ட இருக்கிற பொருட்களை வைத்து செய்ய முடியுறதை போட்டுள்ளேன்.
நீங்க சொன்னது போலத்த்டான் நிறைய நல்ல சுவையான குறிப்புகள் படம் இல்லாததினால் தேடுவாரின்றி விடப் பட்டிருக்கு. போன வாரம் செய்தவை எல்லாம் சுவையான உணவுகள்.
நன்றி

1141 – மீ
பாசிப்பருப்பு பொரித்த முட்டை – 10471
629 - மசாலா இட்லி
டயட் மோர் – 2031
எக் ரைஸ் – 16164
7438 - கோழிச்சாறு

வனி போன‌ வாரம் செய்த‌ குறிப்புகள் அனைத்தும் அருமை, எல்லோரும் மிகுந்த‌ ஆர்வமுடன் செய்தோம், இது எங்களுக்கும் ஒரு ஊக்கமாக‌ அமைந்தது, மேலும் இன்னும் சமையல் மெருகேறிய‌ வண்ணம் உள்ளது.
எங்கள் வீட்டில் எல்லோரும் இன்னும் ஒரு மாதம் இப்படியே போட்டி இருந்தா பரவாயில்லை நல்லா ருசியா வித‌ விதமாக‌ கிடைக்குதுன்னு சொன்னாங்க‌, இதை முன்னெடுத்து செய்த‌ வனிக்கு மிக்க‌ நன்றி சொல்ல‌ சொன்னாங்க‌..மேலும் எங்களூடைய‌ நன்றியும்..போட்டியாக‌ யாரும் நினைக்காமல் அனைவரும் நான் இதை இன்று செய்தேன் என‌ ஒரு குழந்தை போல‌ ஆர்வமுடன் போட்டோ ஃபேஸ்புக்கில் போஸ்ட்செய்வது மிகவும் நன்றாக‌ உள்ளது, மேலும் போன‌ வாரம் கலந்து கொண்ட‌ எந்தோழிகளூக்கும் என் பாராட்டுக்கள், எனக்கு ஊக்கம் கொடுத்த‌வர்களூக்கு நன்றிகள்...இந்த‌ வாரம் கலந்து கொள்பவர்களூக்கு என் வாழ்த்துக்கள்..

1. http://www.arusuvai.com/tamil/node/1153‍‍‍ ‍கம்புவடை
2. http://www.arusuvai.com/tamil/node/717 மல்லி துவையல்
3. http://www.arusuvai.com/tamil/node/579 - கீரை தயிர் கறி
4. http://www.arusuvai.com/tamil/node/15361 கம்பங்கூழ்
5. http://www.arusuvai.com/tamil/node/2276 கேழ்வரகு தோசை
6. http://www.arusuvai.com/tamil/node/16866 சோயாபீன்ஸ் வெஜ் குருமா
7. http://www.arusuvai.com/tamil/node/22610 டயட் சூப்
8. http://www.arusuvai.com/tamil/node/9511 புழுங்கல் அரிசி கஞ்சி
9.http://www.arusuvai.com/tamil/node/854 ‍ தஹி பிந்தி
10. http://www.arusuvai.com/tamil/node/10496 பால் ரவா உருண்டை

இது என்னோட‌ லிஸ்ட், சேர்த்துக்கோங்க‌...

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

சந்தேகம்,

(369 - சத்துமாவு பலகாரம்)
சத்து மாவு பலகாரம் என்கிற இந்த குறிப்பில் சத்து மாவை தயார் செய்வது பற்றி விளக்கி விட்டு அதை உபயோகித்து சில பலகாரங்கள் செய்யலாம் என பெயர்களை மட்டும் குறிப்பிட்டுள்ளார்கள். அப்படியிருக்க அந்த குறிப்பை எடுப்பவர்கல் சத்து மாவை மட்டும் தயாரித்து படம் பிடித்தனுப்பினால் போதுமா?
அப்புறம் நிறைய குறிப்புகளில் சின்ன வெங்காயம், பூவன் பழம் போன்றவை குறிப்பிட்டுள்ளார்கள். இங்கு சி.வெங்காயம் எப்போதாவதுதான் கிடைக்கும். பூவன் பழம் கிடைப்பதேயில்லை. பெல்லாரி வெங்காயம், சாதாரண வாழைப் பழமும் உபயோகிக்கலாமா?
மேலும் இந்தப் போட்டியில் எதின் அடிப்படையில் கிச்சன் குயினை தேர்ந்தெடுப்பீர்கள் என்பதையும் தெரிந்து கொள்ளலாமா?

வனி என்னோட‌ லிஸ்ட்...

19851 - குவாக்கமொலே
9713 - காப்சிகம் பச்சடி
4942 - வெண்ணைய் சிக்கன் மசாலா
838 - உருளை டிக்கி
மைதா தோசை – 19098
வெங்காய உதிரிபக்கோடா (பேச்சுலர்ஸ்க்கு) – 16007
946 – ஸர்வாரி
7529 - மசாலா மொச்சை
308 - பஞ்சாபி சிக்கன்
6554 - பொட்டுக்கடலை துவையல்
200 - சாஹி சிக்கன் குருமா
4744 - மிர்ச்சி பூரி
836 - ஆலூ புர்தா
பேச்சுலர்ஸ் ப்ரெட் டோஸ்ட் – 4665
5 – தோப்பம்
தயிர் குழம்பு - 19876
ஜிஞ்சர் மிண்ட் ப்ளாக் டீ – 10367
4799‍‍‍‍_பீன்ஸ் தக்காளி கூட்டு
கொத்து புரோட்டா – 16580
சப்பாத்தி புட்டு – 24993
பேச்சுலர்ஸ் மெது வடை – 8233

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

இம்முறை சொதப்பமாட்டேன்.. லிஸ்ட் தேங்காய் இனிப்பு இட்லி, காராமணி கடைசல், பாகற்காய் சிப்ஸ், பொட்டுகடலை மாவுருண்டை

..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

Ennoda list
1176 karamani pakoda
922 nellur pulau
23643 easy bread upma
10174 veg sagu
4479 egg kurma
6570 kollu podi

வாழ்ந்து மறையாதே,
மறைந்தும் வாழ்ந்திரு.
பிரியமுடன்
பிரபா.

Indha potiyil 6 kurippugal alladhu adharku mel samaikkum anaivarume queen enre arivikkapaduvargal. Oru velai 2 6 set kurippugal anuppinaal, adhaavadhu 12 kurippugal koduththaal veru peyar suutti arivikka viruppam. Adhai parri innum mudivu seyyavillai. Idhan nokkam pala kurippugalai veliye kondu varuvadhu, pudhidhaga kurippu kodukka onrumillaiye ena ennugiravargalukku avargalum kurippugal padangalodu kodukka oru vaaypu koduppadhu.

Ninga sonna kurippugalai naan innum paarkala, avarrai vittu vaiyungal, naalai team kitta pesittu kattayam solren. Chinna vengayathukku badhil periya vengayam payanpaduthikanga vani. Pazamum indha vagai pirechanai illai. Malai pazam or nendhiram enraal dhaan adhaiye payanpaduththa vendi irukkum.

Mikka nanri Vani :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

5817 பொட்டுகடலை துவையல் 7461 காராமணி பொரியல் 8746 சேனை சிப்ஸ்

ஹாய் தோழிகளே ஒரு சின்ன அறிவிப்பு

// 48. 3546 - சல்ஷா (மெக்சிக்கன் உணவு)// இந்த ரெசிப்பி போன முறையே செய்துட்டாங்க அதனால இதை யாரும் எடுக்காதீங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

\\pudhidhaga kurippu kodukka onrumillaiye ena ennugiravargalukku avargalum kurippugal padangalodu kodukka oru vaaypu koduppadhu.//

நன்றி வனி. அப்படின்னா எப்போதும் போல் நான் என்னுடைய குறிப்புகளை மட்டும் தொடரவா? இந்த குறிப்புகளை செய்யும் ஆர்வம் உள்ள மற்ற தோழிகளுக்கு விட்டு விடவா?

தகவலுக்கு நன்றி ஸ்வர்ணா, ரொம்பத்தான் அப்டேட்ட இருக்கீங்கப்பா :))

Indha kuripugalil irundhu seydhaal dhanae ore naalil 6m kitchen queen enra peyarodu veliyaagum??!! Idhil varuvadhu sirappu dhanae? Palarum paarkaadha kurippugalai paarkka idhu udhavume. Inge seykinra marra thozigal palarum sondhamagave egapatta kurippu koduthirukkavanga dhaan vani... aanaalum idhil kalandhu kondu pazaiya kurippugalai veliye kondu vara udhavugiraargal, avvalavu dhaan :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

/47. 3247 - சில்லி மெக்ஸிகன் ரைஸ்/ இதுவும் செய்துட்டாங்க இதையும் எடுக்காதீங்க :)

வாணி அப்டேட் என இல்லைங்க மெனக்கெட்டு செய்து ஏற்கனவே செய்ததுன்னா மனசுக்கு கஷ்ட்டமா இருக்குமே அதான் முன்னெச்செறிக்கை ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றாக‌ ப்ர்சன்ட் பண்றேனோ என்னவோ தெரியல‌ போனதடவை 3 ரெசிபி முயற்சி செய்தேன். அறுசுவையில் அவுட்புட் எப்படி வந்துருக்குனு பார்த்துட்டு அடுத்த‌ லிஸ்ட்ல‌ கலந்துக்கலாம்னு இருந்தேன். இப்போதைக்கு இந்த‌ லிஸ்ட் இருக்கட்டும். ஒருவேளை சரியாக‌ வரவில்லையென்றால் வாபஸ் வாங்கிக்கிறென். நன்கு பயிற்சி எடுத்து பின்னர் எதிலாவது கலந்து கொள்கிறேன். சரியா சிஸ்,
சிறுகிழங்கு பொரியல் 7507
சேனைக்கிழங்கு 65 – 15114
சேனைகிழங்கு சாப்ஸ் – 11514
சோயாபீன்ஸ் தோசை 19268
4799 - பீன்ஸ் - தக்காளி கூட்டு
11570 - சோயா வெஜ் மிக்ஸ் சுண்டல்

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

Unga presentation or photos sariyaa illanna nichayam team ungaluku theriyappaduthuvanga. Adhai kuraiyaa ennama avanga tipsa use panni aduthadhai nallaa edukka muyarchi pannunga :) adhukaaga varaadhunu odhungidaadhinga.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பீன்ஸ் தக்காளி கூட்டு ஏற்கனவே செலக்ட் பண்ணிட்டாங்க

என்ன‌ சிஸ் லாப் இல்லயா? ஒரே இங்கிலிபிஸ் . எப்போ நமக்கு தெரியபடுத்துவாங்க‌? அதுக்கப்பறம் செய்றதுக்கு ஆரம்பிக்கட்டுமா? ஏனென்றால் கலந்துகிட்ட‌ எல்லோருமே முன்னாடி நிறைய‌ குறிப்புகள் கொடுத்துருக்காங்க‌(experienced). பண்ணனும்னு ஆசைதான் ஆனால் ஒழுங்கா பண்ணனும்ல‌ அதான் கேட்டேன் சிஸ்?
இந்த‌ ரெசிபீஸ சுலபமா தேட‌ வழி சொல்லுங்க‌ சிஸ்.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

எடிட் பண்றேன் சிஸ். பார்த்துட்டேன். நன்றி.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

எடிட் செய்யும் போது நெட் ப்ராப்ளம் பண்ணிடுச்சு. இத்தனை முறை இருப்பதை எப்படி கேன்சல் செய்வது?

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

நன்றாக‌ ப்ர்சன்ட் பண்றேனோ என்னவோ தெரியல‌ போனதடவை 3 ரெசிபி முயற்சி செய்தேன். அறுசுவையில் அவுட்புட் எப்படி வந்துருக்குனு பார்த்துட்டு அடுத்த‌ லிஸ்ட்ல‌ கலந்துக்கலாம்னு இருந்தேன். இப்போதைக்கு இந்த‌ லிஸ்ட் இருக்கட்டும். ஒருவேளை சரியாக‌ வரவில்லையென்றால் வாபஸ் வாங்கிக்கிறென். நன்கு பயிற்சி எடுத்து பின்னர் எதிலாவது கலந்து கொள்கிறேன். சரியா சிஸ்,
சிறுகிழங்கு பொரியல் 7507
சேனைக்கிழங்கு 65 – 15114
சேனைகிழங்கு சாப்ஸ் – 11514
சோயாபீன்ஸ் தோசை 19268
1280‍‍‍_ பத்திய‌ குழம்பு
11570 - சோயா வெஜ் மிக்ஸ் சுண்டல்

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

என் லிஸ்ட்....

1133 - உருளைக்கிழங்கு பாஜி
வத்த குழம்பு பேஸ்ட் – 3775.
398 - பிரட் பகோலா
அவகோடா டிப் – 11732
தாய்லாந்து சிக்கன் கறி ( Gang Gai )

10122 - டோ நட்

போன வார குறிப்புகள் அனைத்தும் சுவையாக இருந்தது நன்றிகள்.
போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

கிச்சன் குயின் பகுதிக்கு அனுப்பும் குறிப்புகள் தவிர மற்ற குறிப்ப்புகளை இப்போது அனுப்ப வேண்டாமா? இது நிறைய பேரது கேள்வியாக இருக்கின்றது.

கண்டிப்பாக அனுப்பலாம். அவற்றையும் இடையிடையே வெளியிடுவோம். கிச்சன் குயின் பகுதிக்காக செய்து அனுப்பும் குறிப்புகளை "கிச்சன் குயின் ஆஃப் த டே" என்ற டைட்டிலுடன் முகப்பில் வெளியிட இருக்கின்றோம். முகப்பில் ஒரு நேரத்தில் ஆறு விளக்கப்பட குறிப்புகள்தான் தெரியுமாறு தற்போதைய அமைப்பு உள்ளது. அந்த ஆறு குறிப்புகளும் ஒருவரது குறிப்பாகவே இருக்கும். அதனால்தான் 6 என்ற எண்ணிக்கையை கொடுத்தோம். ஒரு தினம் முழுவதும் அவர்களது குறிப்புகள் மட்டுமே முகப்பை அலங்கரிக்கும்.

6 க்கும் அதிகமாக குறிப்புகள் அனுப்புபவர்களுக்கு என்ன டைட்டில்?

"குயின் ஆஃப் த டே" டைட்டில் உங்களை உற்சாகப்படுத்துவதற்காகக் கொடுப்பது. எண்ணிக்கையின் அடிப்படையில் புதுப்புது டைட்டில் வேண்டாம் என்பது எனது அபிப்ராயம். உங்களது அடுத்த 6 குறிப்புகள் இன்னொரு நாள் உங்கள் பெயரிட்டு இதே டைட்டிலுடன் முகப்பில் வெளியாகும். நீங்கள் எத்தனை குறிப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆறு ஆறாக ஒவ்வொரு தினம் அவைகள் வெளியாகும். அடுத்தடுத்த தினங்களில் வெளியிடுவது நன்றாக இருக்காது என்பதால் அடுத்த சைக்கிளில் வெளியிடுவோம். ஒருவேளை அடுத்து வெளியிட ஆறு குறிப்புகள் இல்லையென்றால் உங்களது குறிப்புகளே அடுத்த நாளும் இடம்பெறும்.

வரிசையாக கிச்சன் குயின் பகுதியில் இடம்பெறும் குறிப்புகளே இடம்பெற்றால், சாதாரணமாக அனுப்பும் குறிப்புகள் எப்போது வெளியாகும்?

இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும். ஒருவேளை தொடர்ந்து வெளியிட கிச்சன் குயின் குறிப்புகள் இருந்தாலும் சாதாரணமாக உறுப்பினர்கள் அனுப்பும் குறிப்புகளையும் அவ்வபோது வெளியிட்டே ஆக வேண்டும். அப்படி வெளியிடும்போது அன்றைய தினமும் 6 புதிய குறிப்புகள் சேர்க்க வேண்டும். எனவே, கிச்சன் குயின் பகுதிக்கு அல்லாது, சாதாரணமாக அனுப்பப்படும் குறிப்புகள் 6 சேர்ந்ததும் அவை இதற்கு நடுவில் ஒரு நாள் சேர்க்கப்படும். ஒருவரே 6 புதிய குறிப்புகள் கொடுத்தாலும் அவையும் சேர்க்கப்படும். ஆனால், கிச்சன் குயின் டைட்டில் இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிஸ்ட்டில் இருந்து செய்தால் மட்டுமே கிடைக்கும்.

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளில் சில இடங்களில் மாற்றம் தேவைப்படுகின்றது. சில ஸ்டெப்ஸ் விடுபட்டு உள்ளன. என்ன செய்யலாம்?

நீங்கள் விரும்பும் மாற்றங்களை தாராளமாகச் செய்து கொள்ளலாம். கொடுக்கப்பட்டுள்ள அளவுகளில் உள்ளபடிதான் செய்ய வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. உங்கள் தேவைக்கேற்ப அளவுகளில் மாற்றம் செய்து கொள்ளலாம். செய்முறையின் போது சில இடங்களில் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டிய விசயங்கள் அந்த குறிப்புகளில் கொடுக்கப்படாமல் இருக்கலாம். அதை அனுபவத்தில் நீங்கள் அறிந்தவராக இருப்பீர்கள். அப்படி எதுவும் இருப்பின் அவற்றையும் தெரியப்படுத்துங்கள். குறிப்புகளில் பிழைகள் இருந்தாலும் சுட்டிக்காட்டலாம். நீங்கள் செய்யும் மாற்றங்கள், சேர்க்கைகள், திருத்தங்கள் இவை அனைத்தையும் மறவாமல் எங்களுக்கு மின்னஞ்சலில் தெரிவியுங்கள். படங்கள் அனுப்பும்போதே அந்த திருத்தங்களையும் டைப் செய்து அனுப்பிவிடுங்கள்.

அடுத்து ஒரு முக்கியமான விசயம். இதை ஒரு காம்பெடிசனாக செய்யவில்லை. ஆகவே கிச்சன் குயின் யார் என்பதை எப்படி யார் செலக்ட் செய்வார்கள் என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். அறுசுவையில் இருக்கும் படங்கள் அற்ற நல்ல குறிப்புகள் பலரது கவனத்திற்குச் செல்லாமல் இருந்தது. இதற்கு செய்முறை படங்கள் இல்லை என்பதுதான் முக்கிய காரணம். ஏராளமான நல்ல குறிப்புகள் படங்கள் இல்லாமல் இருக்கையில், படங்களுடன் கூடிய குறிப்புகளில் ஒரே மாதிரியான குறிப்புகள் நிறைய இடம்பெற்று இருக்கின்றது. அதுபோல் சில உறுப்பினர்களுக்கு குறிப்புகள் அனுப்ப வேண்டும் என்ற ஆர்வம் இருக்கின்றது. ஆனால் அவர்கள் அனுப்ப நினைக்கும் குறிப்புகள் ஏற்கனவே இங்கே இடம்பெற்று இருப்பதால் புதிதாக என்ன செய்வது என்று தெரியாமல் குறிப்புகள் அனுப்பாமல் இருந்தார்கள். இதற்கு என்ன செய்யலாம் என்று மூத்த உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து, சகோதரி வனிதா அவர்களின் ஆலோசனையின் பேரில் இந்த கிச்சன் குயின் டைட்டில் பற்றி முடிவெடுத்தோம்.

இதன்மூலம் படங்கள் இல்லாத குறிப்புகளுக்கு படங்கள் கிடைப்பதுடன், குறிப்புகள் வழங்குவதற்கு புதிய உறுப்பினர்கள் நிறையப் பேர் வருவார்கள் என்பதும் எங்களது எதிர்பார்ப்பு. இதற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது. நிறைய பேரது இல்லங்களில் புதிது புதிதாக தினசரி உணவுகள் இடம்பெறுவதாக சகோதரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கின்றார்கள். இதில் பங்கேற்கும் அனைத்து சகோதரிகளுக்கும், இதற்கு காரணமாய் இருக்கும் சகோதரி வனிதா அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நானும் கலந்து கொள்கிறேன்.. இது என்னுடைய‌ மெனு... ரேவதி மிக்க‌ நன்றி.. வனி சீக்கிரமே செய்து படத்துடன் வருகிறென்...

124. ஸ்ட்ராபெர்ரி பனானா லஸ்ஸி – 10093
115. ஈசி ப்ரெட் உப்புமா – 23643
3247 - சில்லி மெக்ஸிகன் ரைஸ்

"எல்லாம் நன்மைக்கே"

அட்மின் அண்ணா,
தெளிவான விளக்கங்கள். நன்றி :))

ஹைதராபாத் கோழி வறுவல் - 213
மாங்காய் சொதி - 5813
ஊந்தியா - 6887
கேரள நண்டு மசாலா - 319
மீன் உப்பாணம் – 9668
தேங்காய் மிளகு வறுத்து அரைத்த நண்டு - 1701

சில்லி மெக்ஸிகன் ரைஸ் ஏற்கனவே நான் செய்துட்டேன்.. அதை செய்யாதீங்க..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

1.தோப்பம்
2.சுண்டைக்காய் பச்சடி.
3.பொட்டுக்கடலை பொடி.

Be simple be sample

Easy bread upma firste ennoda listla erukku, neenga Vera kurippu edungappa

வாழ்ந்து மறையாதே,
மறைந்தும் வாழ்ந்திரு.
பிரியமுடன்
பிரபா.

வெகு நாட்களுக்கு பின் வந்திருக்கீங்க :) வருக வருக. மகிழ்ச்சியா இருக்கு.

ப்ரெட் உப்புமா & மெக்சிகன் ரைஸ் லிஸ்ட்ல இல்ல பாக்கியா, வேறு எதாவது இரண்டு சூஸ் பண்றீங்களா ப்ளீஸ்?? ஒன்னு பிரபா சூஸ் பண்ணிட்டாங்க, இன்னொன்னு மை மிஸ்டேக், போன முறையே செய்துட்ட குறிப்பு, அதனால் நீக்கிட்டேன். :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா