சாம்பார் ரைஸ்

தேதி: January 24, 2007

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி - இரண்டு கோப்பை
துவரம் பருப்பு - ஒரு கோப்பை
காய்கறிகளின் கலவை - கால்கிலோ
சாம்பார் வெங்காயம் - பத்து
தக்காளி - ஒன்று
புளி - எலுமிச்சையளவு
சாம்பார் பொடி - நான்கு தேக்கரண்டி
தேங்காய் - இரண்டு பத்தை
மஞ்சள்தூள் - அரைதேக்கரண்டி
பெருங்காயத்தூள் - கால்தேக்கரண்டி
உப்புத்தூள் - ஒரு மேசைக்கரண்டி
நெய் - இரண்டு மேசைக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
தாளிக்க:
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
காய்ந்தமிளகாய் - இரண்டு


 

அரிசியை உதிரியாக வேகவைத்து ஆறவைக்கவும்.
பருப்பை கழுவி அரைமணி நேரம் சுடுதண்ணீரில் ஊறவைக்கவும்.
காய்கள் அனைத்தையும் கழுவி வேண்டிய அளவிற்கு நறுக்கி கொள்ளவும்.
பிறகு ஊறிய பருப்பில் காய்கறிகள், பெருங்காயம், மற்றும் மஞ்சள்தூளைச் சேர்த்து நான்கு கோப்பை தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி எண்ணெயையும் ஊற்றி வேகவைக்கவும்.
புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். பின்பு அதில் சாம்பார் பொடி, நறுக்கிய தக்காளி, வெங்காயம், அரைத்த தேங்காய் மற்றும் உப்புத்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கி வைக்கவும்.
பருப்பும் காய்களும் நன்கு வெந்தவுடன் கலக்கிய புளிகரைசலை அதில் ஊற்றி புளியின் பச்சை வாசனை நீங்கும்வரை கொதிக்க வைக்கவும். குழம்பு நல்ல கெட்டியாக இருக்க வேண்டும்.
ஒரு சிறிய சட்டியில் எண்ணெயைக் காயவைத்து தாளிப்பு பொருட்களைப் போட்டு தாளித்து சாம்பாரில் கொட்டவும்.
பிறகு ஆறவைத்துள்ள சோற்றில் சாம்பாரை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும். பின்பு சூடாக்கிய நெய்யை மேலாக ஊற்றி கிளறி விட்டு, சிறிது ஆற வைத்த பிறகு கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.


காய்கறிகள் தேர்வு செய்யும் பொழுது, கத்திரிக்காய், வெண்டைக்காய், பூசணிக்காய் போன்ற எளிதில் குழைய கூடிய காய்களைத் தவிர்த்து விட்டு நன்கு நின்று வேகக் கூடிய முருங்கை, கேரட், பீன்ஸ், நூக்குல், முள்ளங்கி, அவரை போன்ற காய்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்