பருப்பு உசிலி

தேதி: January 24, 2007

பரிமாறும் அளவு: 8நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

துவரம் பருப்பு - ஒரு கோப்பை
கடலைப்பருப்பு - கால் கோப்பை
புடலங்காய் - அரைக்கிலோ
சாம்பார் வெங்காயம் - ஆறு
பச்சைமிளகாய் - நான்கு
காய்ந்தமிளகாய் - ஆறு
மஞ்சள்தூள் - அரைதேக்கரண்டி
உப்புத்தூள் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - கால் கோப்பை
பெருங்காயத்தூள் - இரண்டு சிட்டிகை
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

பருப்புகளை கழுவி அதில் காய்ந்த மிளகாயைச் சேர்த்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
புடலங்காயை மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
வெங்காயம், பச்சைமிளகாயை சேர்த்து தட்டி அல்லது ஒன்றும்பாதியுமாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஊறிய பருப்புகளை காய்ந்த மிளகாயுடன் ஒரு தேக்கரண்டி உப்புத்தூளையும் சேர்த்து வடைக்கு அரைப்பது போன்று கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு அதை ஆவியில் வேகவைத்து உதிர்த்து வைக்கவும்.
ஒரு வாயகன்ற சட்டியில் எண்ணெயை ஊற்றி கடுகைப் போட்டு பொரியவிடவும். தொடர்ந்து உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலையைப் போடவும்.
பின்பு தட்டிய வெங்காயம், பச்சைமிளகாயைப் போட்டு சிவக்க வதக்கி நறுக்கிய காய்களைக் கொட்டி கிளறவும்.
பிறகு அதில் மீதியுள்ள உப்புத்தூள், மஞ்சள்தூளை போட்டு கலக்கிவிட்டு வேகவைக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
காய்கள் நன்கு வெந்தவுடன் உதிர்த்து வைத்துள்ள பருப்புக் கலவையைக் கொட்டி நன்கு கிளறி விடவும்.
ஐந்து நிமிடத்திற்கு அடிக்கடி கிளறி விட்டு இறக்கி விடவும்.
பருப்பு சேர்க்காத குழம்பு வகைகளுக்கு பக்க உணவாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்