முள்ளங்கி - பார்லி சூப்

தேதி: December 9, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. அஸ்மா அவர்களின் முள்ளங்கி - பார்லி சூப் குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய அஸ்மா அவர்களுக்கு நன்றிகள்.

 

ரோஸ் முள்ளங்கி - 100 கிராம்
வெங்காயம் - பாதி
தக்காளி - ஒன்று
பூண்டு - 4 பற்கள்
கேரட் - ஒன்று
பார்லி - 50 கிராம்
பால் - கால் கப்
ரசப் பொடி - ஒரு தேக்கரண்டி
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
கொத்தமல்லித் தழை - தேவைக்கேற்ப


 

முள்ளங்கி மற்றும் கேரட்டைத் துருவி வைக்கவும். வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியை அரிந்து வைத்துக் கொள்ளவும். பூண்டுப் பற்களை நசுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயம், முள்ளங்கி, கேரட் மற்றும் தக்காளி போட்டு வதக்கவும்.
வதங்கியதும் பார்லி, ரசப் பொடி மற்றும் மிளகுத் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
அனைத்தும் வெந்து சுண்டி வந்ததும் பால் மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதிவரவிட்டு, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.
சூடாகப் பரிமாற சுவையான முள்ளங்கி - பார்லி சூப் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இன்றைய கிச்சன் குயின் கவிதாவிற்கு வாழ்த்துக்கள். எல்லா குறிப்புகளும் நல்லா இருக்கு, படங்கள் எல்லாமே அருமை. இதைப் போல அடுத்தடுத்து வர இருக்கும் கிச்சன் குயின் பகுதிகளிலும் கலந்துக் கொண்டு செய்து அசத்த என் வாழ்த்துக்கள்

நல்ல‌ சத்துள்ள‌ சூப். சூப் சூப்பர்.

Expectation lead to Disappointment

கவி கலர்ஃபுல் & சத்தான ரெசிபி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எனது செய்முறை குறிப்பினை வெளியிட்ட அட்மின்,மற்றும் குழுவினருக்கு நன்றி
குறிப்பினை தந்த அஸ்மா அவர்களுக்கு நன்றிகள்.

செண்பகா ,
:) :) முயற்சி செய்கிறேன்
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி.

மீனாள் ,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி.

ஸ்வர்ணா,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி.

என்றும் அன்புடன்,
கவிதா