கொத்தவரங்காய் பருப்பு உசிலி

தேதி: December 10, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ராதா பாலு அவர்களின் கொத்தவரைக்காய் பருப்பு உசிலி குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே விளக்கப்படங்களுடன் செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ராதா பாலு அவர்களுக்கு நன்றிகள்.

 

நறுக்கிய கொத்தவரங்காய் - ஒரு கப்
துவரம் பருப்பு - அரை கப்
கடலைப்பருப்பு - கால் கப்
மிளகாய் வற்றல் - 6
பெருங்காயம் - சிறு துண்டு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு - 2 தேக்கரண்டி


 

கொத்தவரங்காயில் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிட்டு வடிகட்டி வைக்கவும்.
துவரம் பருப்புடன் கடலைப்பருப்பைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறியதும் அத்துடன் தேவையான அளவு உப்பு, மிளகாய் வற்றல் மற்றும் பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த பருப்புக் கலவையை இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்தெடுத்து ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, உதிர்த்து வைத்துள்ள பருப்புக் கலவையைப் போட்டு குறைந்த தீயில் வதக்கவும்.
வதங்கியதும் அத்துடன் வெந்த கொத்தவரங்காயை நன்றாகப் பிழிந்து போட்டுக் கிளறவும்.
மேலும் 10 நிமிடங்கள் நன்றாக கிளறி இறக்கவும்.
சுவையான கொத்தவரங்காய் பருப்பு உசிலி தயார். சாம்பார், வற்றல் குழம்புடன் தொட்டுக் கொண்டு சாப்பிட சூப்பரான மேட்ச் இது. பொடி சாதம் போன்ற சாதத்துடன் பிசைந்து, மோர்க்குழம்பு தொட்டும் சாப்பிடலாம்.

இதே முறையில் அவரைக்காய், புடலங்காய், கோஸ், காலிஃப்ளவர், வாழைப்பூ ஆகியவற்றிலும் பருப்பு உசிலி செய்யலாம்.

கோஸ், கேரட், பீன்ஸ், பட்டாணி இவற்றையெல்லாம் சேர்த்து மிக்ஸ்டு வெஜிடபுள் பருப்பு உசிலியும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இந்த பேரை கேட்டாலே எனக்கு சீதா நினைவு தான் வரும் ;) ஏன்னு கேட்காதீங்க, நியாபகம் இல்லை. செய்து பார்க்குறேன். பிடிச்சிருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சரி நியாபகம் வரும்போது சொல்லிடுங்க. தான்க்ஸ் வனி

Be simple be sample

கிச்சன் குயின் பருப்பு உசிலி சும்மா படங்காட்டுது.. எனக்கு இங்க‌ கொத்தவரங்காய் கிடைக்காது..:( ஊருக்கு வந்தா தான் செய்ய‌ முடியும்.மிக்ஸ்டு வெஜ்ல‌ ட்ரை செய்துட்டு சொல்றேன்..வாழ்த்துக்கள் ரேவ்ஸ்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ரேவ்ஸ் உசிலி அட்டகாசமா இருக்கு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எனக்கு மிகவும் பிடித்தமான‌ டிஷ் இது. சில‌ நேரம் எனக்கு சொதப்பி விடும்.சூப்பரா இரண்டு டிப்ஸ் ம் கொடுத்து இருக்கீங்க‌.

Expectation lead to Disappointment