இஞ்சி தொக்கு

தேதி: December 10, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சித்ரா அவர்களின் இஞ்சி தொக்கு குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சித்ரா அவர்களுக்கு நன்றிகள்.

 

இஞ்சி (இளசாக) - 100 கிராம்
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய் வற்றல் - 25 அல்லது 30
கல் உப்பு - கால் கப் (குவித்து எடுக்கவும்)
வெல்லம் - 100 கிராம்
கடுகு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 50 மில்லி


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். வெல்லத்தைப் பொடி செய்து கொள்ளவும்.
இஞ்சியுடன் உப்பு, புளி மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்தவற்றுடன் பொடித்த வெல்லத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காயவிட்டு, கடுகு, பெருங்காயத் தூள் போட்டுத் தாளிக்கவும்.
அத்துடன் அரைத்து வைத்துள்ள இஞ்சி விழுதைச் சேர்த்து, குறைந்த தீயில் வைத்து நன்கு சுருள வரும் வரை கிளறி இறக்கவும்.
சுவையான இஞ்சி தொக்கு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இஞ்சி தொக்கு பார்க்கும் போதே நாக்குல‌ ஜொள்ளு ஊற‌ வைக்குது. சூப்பர் அம்மிணி.. வாழ்த்துக்கள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

இஞ்சி தொக்கு பார்த்ததும் செய்யத் தூண்டும் குறிப்பாயிருக்கு. அவசியம் 25 மிளகாய் சேர்க்கணுமா? வெல்லம் சேர்த்ததினால் காரம் தெரியவில்லையோ ? இதை எந்த உணவோடு தொட்டுக் கொள்ளலாம் ?
எல்லா குறிப்புகளும் நீங்கள் செய்து காட்டியிருக்கும் விதம் அருமையா இருக்கு. வாழ்த்துக்கள். :))

இஞ்சி தொக்கு சூப்பரா இருக்கு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தான்க்ஸ் சுமி

Be simple be sample

மிளகாய் காரத்துக்கும் வெல்லம்க்கு சரியா இருக்கு. ஆனா நான் குறிப்பிட்ட அளவை விட்டு குறைவாகவே போட்டன். இட்லி,தோசை சாப்பாடு எல்லாத்துக்குமே நல்லாருக்குப்பா.

Be simple be sample

தான்க்யூ சுவா

Be simple be sample

தயிர் சாததிற்கு ஒரு அருமையான‌ சைட் டிஷ். உடம்புக்கு நல்லது.வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment