சம்பாரப் புளி சமையல் குறிப்பு - படங்களுடன் - 30057 | அறுசுவை


சம்பாரப் புளி

வழங்கியவர் : swarna vijayakumaar
தேதி : வியாழன், 11/12/2014 - 09:52
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
0
No votes yet
Your rating: None

 

  • கொத்தமல்லித் தழை - ஒரு பெரிய கட்டு
  • புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
  • மிளகாய் வற்றல் - 6
  • உளுத்தம் பருப்பு - 3 தேக்கரண்டி
  • பெருங்காயம் - ஒரு துண்டு
  • எண்ணெய் - தேவைக்கேற்ப
  • உப்பு - ஒரு தேக்கரண்டி

 

கொத்தமல்லித் தழையை ஆய்ந்து தண்ணீரில் கழுவி நீரை சுத்தமாக வடித்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு உளுத்தம் பருப்பு மற்றும் பெருங்காயம் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வறுத்தவற்றுடன் கொத்தமல்லித் தழை, புளி, உப்பு சேர்த்து அம்மியில் அல்லது மிக்ஸியில் அரைத்து எடுத்து துவையல் போல் உபயோகப்படுத்தவும்.

இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..சுவா

இன்றைக்கு அனைத்து குறிப்புகளும் வித்தியாசமா இருக்கு சுவா.நிறைய‌ ஈஸியா இருக்கு.வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

மீனா

மீனா வாழ்த்திற்கு மிக்க நன்றிப்பா :) ஈசி அண்ட் டேஸ்டி மீனா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சம்பாரப் புளி

சம்பாரப் புளி பேரே வித்யாசமா இருக்கேன்னு தான் எடுத்தேன் ஆனா மல்லி வாசனையோடு சுவை அட்டகாசம் இட்லி,தோசை,தயிர் சாதத்துக்கு சூப்பரா இருந்தது :) என்னவரிடம் இந்த ரெசிப்பிக்கும் நல்ல மார்க் கிடைச்சுது ;)

இந்த குறிப்பு உரலில் இடிக்கனும் சொல்லியிருந்தாங்க நமக்கு எங்க இடிக்கலாம் தெரியும் அதனால அம்மியில அரைச்சுட்டேன் ஆனா இடிச்சு வச்சா இன்னும் நல்லாருக்கும் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுவா

சூப்பரா இருக்கு இதுவும்.

Be simple be sample

ரேவா

நன்றி ரேவ்ஸ் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துக்கள்

இன்று கிச்சன் குயினாக‌ மகுடம்சூடிய‌ சுவர்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இதே மாதிரி கொத்தமல்லியை நான் வதக்கி செய்வேன்! ஆனா கொத்தமல்லி சட்னின்னுதான் சொல்லுவோம்!"சம்பாரப்புளி" பெயரே ரொம்ப‌ வித்தியாசமா இருக்குங்க‌!

எல்லா குறிப்புகளுமே அருமை!!

சம்பாரப் புளி

சுவர்ணா சிஸ்,
பேரைக் கேட்டதும் ஏதேதோ போட்டு சமைக்க‌ வேண்டும் போல‌ என‌ நினைத்தேன். நான்கு பொருட்களை வைத்து நச்சுனு அரைத்து கொடுத்து விட்டீர்கள். வாழ்த்துக்கள். நாங்களும் மல்லி துவையல்னு தான் சொல்லுவோம்.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

சம்பாரப் புளி

சுவா, சம்பாரப் புளி ஏதோ குழம்பு அயிட்டம்னு நினைத்தேன்..:) சூப்பரா இருக்கு, இதையும் ட்ரை பண்ணிடுவோம்..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அனு

அனு உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி :) அரைச்சுட்டும் வதக்கலாம் நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்கும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மெர்சி

மெர்சி மிக்க நன்றிங்க :)

//பேரைக் கேட்டதும் ஏதேதோ போட்டு சமைக்க‌ வேண்டும் போல‌ என‌ நினைத்தேன்.// நானும் அப்படித்தான் பேரை பார்த்ததும் வித்யாசமா இருக்கேன்னு நினைச்சேன் ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.