அறுசுவையில் புதிய‌ சமையல் குறிப்புகள் கோலங்கள்

புதிய‌ சமையல் குறிப்புகள் கோலங்கள் எப்படி சேர்க்க வேண்டும்? என்ன‌ வழி முறை?

சில காரணங்களால் கோலங்கள் பகுதியில் உறுப்பினர்களது கோலங்களை வெளியிடுவதில்லை. அவற்றை எங்கள் பக்கமிருந்து மட்டுமே வெளியிடுகின்றோம். ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன் கூடிய சமையல் குறிப்புகளை மட்டுமே தற்போது உறுப்பினர்களிடம் இருந்து ஏற்றுக்கொண்டு வெளியிடுகின்றோம். அப்படி படங்களுடன் கூடிய சமையல் குறிப்புகள் உங்களிடம் இருக்குமென்றால் அவற்றை arusuvaiadmin அட் ஜிமெயில் டாட் காம் என்ற முகவரிக்கு குறிப்பையும் படங்களையும் இணைத்து அனுப்பி வைக்கலாம். முக்கியமாக, அந்த சமையல் குறிப்பு ஏற்கனவே அறுசுவையில் இடம்பெற்றிராத குறிப்பாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஒரே மாதிரியான குறிப்பு மீண்டும் மீண்டும் இடம்பெறுவதில் அர்த்தமில்லை. பெயர் ஒன்றாக இருந்தாலும், செய்முறை மற்றும் சேர்க்கும் பொருட்களில் நிறைய வித்தியாசங்கள் இருப்பின் அந்தக் குறிப்பை அனுப்பலாம்.

குறிப்புகள் அனுப்புவது மற்றும் படங்கள் எடுப்பது குறித்த விளக்கங்கள் அறிய இந்தப் பக்கத்தின் கீழே கேள்வி-பதில் என்று உள்ள லிங்க்கை கிளிக் செய்து பார்வையிடுங்கள். அல்லது இந்த இணைப்பிற்குச் செல்லுங்கள்.

http://www.arusuvai.com/tamil/faq

பதிலுக்கு மிக்க நன்றி அட்மின்.

பாபு அண்ணா

எனக்கு ஒரு சந்ேதகம், எப்படி தனிப்பட்ட ஒருவரின் மொத்த‌ குறிப்பையும் பார்ப்பது.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கூட்டாஞ்சோறு பக்கத்தில் குறிப்புகள் கொடுப்போரின் பட்டியல் இருக்கின்றது. அதை கிளிக் செய்து ஒருவரது மொத்தக் குறிப்புகளையும் பார்வையிடலாம்.

http://www.arusuvai.com/tamil/expertslist

இந்தப் பக்கத்தில் 25 குறிப்புகள் எண்ணிக்கையை தொட்டவர்களின் பெயர்கள் மட்டும்தான் இருக்கும். 25 என்ற எண்ணிக்கையை எட்டாதவர்களின் குறிப்புகளை மொத்தமாக பார்வையிட விரும்பினால்

http://www.arusuvai.com/tamil/expert/

என்ற முகவரியின் கடைசியில் அவரது உறுப்பினர் எண்ணைக் கொடுத்தால் எல்லாக் குறிப்புகளும் கிடைக்கும்.

உதாரணமாக உங்களது மொத்தக் குறிப்பையும் பார்க்க விரும்பினால் இப்படி கொடுக்க வேண்டும்.

http://www.arusuvai.com/tamil/expert/23437

நன்றி அண்ணா,,

கவி, வனியின் குறிப்பை தனியாக‌ தேடிப் பார்க்கவே வெகு நேரம் பிடித்துவிட்டது.
:)

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்