சேனைக்கிழங்கு போண்டா

தேதி: December 13, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சேனைக்கிழங்கு - பாதி கிழங்கு
பெரிய வெங்காயம் - ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
கடலை மாவு - 4 தேக்கரண்டி
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - கால் லிட்டர்


 

சேனைக்கிழங்கைத் தோல் சீவிவிட்டு, சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும். நறுக்கிய சேனைக்கிழங்கைத் தண்ணீரில் கழுவி விட்டு, குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து மூடி போட்டு 2 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கிவிடவும்.
கடலை மாவுடன் அரிசி மாவு, சிறிது உப்பு, மிளகாய்த் தூள், ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
வேக வைத்த சேனைக்கிழங்கிலுள்ள நீரை வடித்துவிட்டு, அதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்,
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை கடலை மாவுக் கரைசலில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுடச்சுட, சுவையான சேனைக்கிழங்கு போண்டா ரெடி. தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சேனைக்கிழங்கு போண்டா சுமா ஜம்முன்னு அசத்தலா இருக்கு. நல்லா செய்து காமிச்சு இருக்கீங்க‌. வாழ்த்துக்கள் ஹேமா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ரொம்ப தாங்க்ஸ்பா. இன்னிக்கி தான் லேப்டாப் என் கைக்கு வந்தது, ஜம்முனு இருக்கா அது என்ன சேனைகிழங்காச்சே, சேனைன்னா யானை தான அதான் அப்படி ஜம்முனு இருக்கு.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

என்னுடைய‌ குறிப்பை வெளியிட்டமைக்கு என் மனமார்ந்த‌ நன்றிகள், மேலும் இது தான் என்னுடைய‌ முதல் குறிப்பு, இது மேலும் என்னை ஊக்கப்படுத்துகிறது, இன்னும் பல‌ குறிப்புகள் கொடுப்பதற்கு முயற்சிக்கிறேன், அறுசுவைக்கு என்னால் ஆன‌ உதவிகளை செய்கிறேன்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

சேனைக்கிழங்கு போண்டா அமர்க்களமா இருக்கு வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹேமா,
சூப்பர் ,கிடைத்தால் ட்ரை பண்றேன்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா