அத்திப்பழம் ஹல்வா

தேதி: January 24, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பால் - 1 லிட்டர்
அத்திப்பழம் - 100 கிராம்
முந்திரி- 100 கிராம்
பாதம்- 25 கிராம்
பிஸ்தா- 25 கிராம்
நெய் - 100 கிராம்
சீனி- 300 கிராம்


 

முதலில் பாதம்,பிஸ்தவை தோல் எடுத்து நறுக்கிக்கொள்ளவும்.

முந்திரியையும் நறுக்கிக்கொள்ளவும்

அத்திப்பழத்தை சிறிது சிறிதாக நறுக்கி வைக்கவும்
பாலை நன்றாக காய்ச்சவும். பின் பாலில் அத்திப்பழத்தை சேர்த்து நன்கு காய்ச்சவும் .சீனியயும் சேர்க்கவும் பாகு நிலை வரும்வரை நன்கு காய்ச்சவும்.அதன் பின்பு நறுக்கிய பருப்புகளை சேர்த்து கிளறவும்.பின் நெய்யை ஊற்றி கிளறி பதம் வந்ததும் இறக்கவும்.

பின் நெய் தடவிய தட்டில் ஊற்றி துண்டுகள் போடவும்
ஆறிய பின்பு சாப்பிட சுவையாக இருக்கும்


மேலும் சில குறிப்புகள்