நூல்கோல் பட்டாணி குருமா

தேதி: December 13, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

நூல்கோல் - கால் கிலோ
பச்சை பட்டாணி - 150 கிராம்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சாம்பார் பொடி - கால் தேக்கரண்டி
சோம்புத் தூள் - கால் தேக்கரண்டி
கடுகு, கறிவேப்பிலை
உப்பு
எண்ணெய்


 

நூல்கோல், வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். குக்கரில் பச்சை பட்டாணியைப் போட்டு, தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேகவிடவும்.
பிறகு வேக வைத்த பட்டாணியுடன் நூல்கோல், பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
வெந்ததும் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், சோம்புத் தூள் சேர்த்து தாளித்து குருமாவில் ஊற்றிக் கிளறவும்.
சுவையான நூல்கோல் பட்டாணி குருமா தயார்.

நான் உலர்ந்த பச்சை பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைத்து பயன்படுத்தியுள்ளேன். ஃப்ரெஷ் பட்டாணியையும் பயன்படுத்தலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கலர்ஃபுல் குருமா சூப்பர் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

குறிப்பினை வெளியிட்ட‌ அட்மின் மற்றும் டீமிர்க்கு மிக்க‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முதல் பதிவிர்க்கும்,வாழ்த்திர்க்கும் மிக்க‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.