வெஜிடபுள் ஜாம்

தேதி: December 15, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. பா. தமிழ்செல்வி அவர்களின் வெஜிடபிள் ஜாம் குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய தமிழ்செல்வி அவர்களுக்கு நன்றிகள்.

 

உருளைக்கிழங்கு - 4
தக்காளி - 4
கேரட் - 4
பீட்ரூட் - 4
சர்க்கரை - 3 கப்
சிட்ரிக் அமிலம் - ஒரு தேக்கரண்டி


 

உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் பீட்ரூடைத் தோல் சீவி, துருவிக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாக அரிந்து கொள்ளவும். அனைத்து காய்கறிகளையும் ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வேக வைத்தவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கலவையுடன் சர்க்கரை மற்றும் சிட்ரிக் அமிலம் சேர்த்து அடுப்பில் வைத்து அல்வா பதம் வரும் வரை நன்றாகக் கிளறி இறக்கவும்.
சுலபமாகச் செய்யக் கூடிய சுவையான வெஜிடபுள் ஜாம் ரெடி. காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வரைக் கெடாமல் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வெஜிடபுள் ஜாம் பார்க்கவே கலர்ஃபுல்லா சூப்பரா இருக்கு. செய்முறை ஈசியாதான் இருக்கு. நிச்சயம் ட்ரை பண்றேன். வாழ்த்துகள்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ட்ரை பண்ணிட்டு இன்னும் இரண்டு நாளில் படங்காட்டுறேன் இருங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி ரெவதி. செய்து பாருங்க பிடிக்கும்.

காலையில் சாப்பிட மாட்டேன் ஜாம் செய்தலிருந்து காலையில் சாப்பிடுறேன்.டேஸ்டா எப்பிடி இருக்குமோ என்று யோசிச்சிட்டு தான் செய்தேன். நல்லா இருந்திச்சு.

wow! yummy! ரொம்ப‌ கலர்ஃபுலா சூப்பரா இருக்கு. படத்த‌ பாத்தே தொட்டு நக்கனும் போல‌ இருக்கு. கலக்கிட்டீங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

ஜாம் இம்புட்டு ஈசியா செய்ய முடியுமா :) அழகான செய்முறை விளக்கம் & படங்களும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி. சாப்பிடுங்க..

ம் நன்றி சுவர்னா..