அவரைக்காய் சைனீஸ் கூட்டு

தேதி: December 15, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

திருமதி. ஜுலைஹா அவர்கள் வழங்கியுள்ள சீன வகை உணவுகளில் ஒன்றான அவரைக்காய் சைனீஸ் கூட்டு இங்கே விளக்கப்படங்களுடன் செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய திருமதி. ஜுலைஹா அவர்களுக்கு நன்றிகள்.

 

அவரைக்காய் - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
வறுத்த காய்ந்த மிளகாய்த் தூள் - ஒரு மேசைக்கரண்டி
மேகி க்யூப் - பாதி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - தாளிக்க
உப்பு - ஒரு தேக்கரண்டி
மல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு


 

அவரைக்காயை ஒரு இன்ச் அளவுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி பாதி அளவு வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.
அத்துடன் கறிவேப்பிலை மற்றும் மிளகாய்த் தூளைப் போட்டுக் கிளறவும்.
பிறகு மேகி க்யூப் மற்றும் அவரைக்காயைப் போட்டு வதக்கி, மூடி வைத்து வேகவிடவும். இடையிடையே மூடியைத் திறந்து கிளறவும். அவரைக்காய் வெந்ததும் மீதமுள்ள வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடங்கள் கிளறிவிட்டு, மல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான அவரைக்காய் சைனீஸ் கூட்டு தயார்.

மேகி க்யூபை சேர்க்கும் போது தூளாக்கிச் சேர்க்கவும். இல்லையென்றால் கட்டியாகவே இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Avaraikai cut panni irukum vithamae nalla iruku

நன்றி .