தாம்பாள் பணியாரம்

தேதி: December 16, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. J. வளர்மதி அவர்களின் தாம்பாள் பணியாரம் என்ற குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய வளர்மதி அவர்களுக்கு நன்றிகள்.

 

புழுங்கல் அரிசி - 2 கப்
பாசிப்பருப்பு - 100 கிராம்
வெல்லம் - 500 கிராம்
முந்திரி - 50 கிராம்
ஏலக்காய் - 50 கிராம்
தேங்காய் - அரை மூடி
நெய் - 50 கிராம்


 

அரிசியை ஊற வைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி வைக்கவும்.
ஊற வைத்த அரிசியை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தினை கெட்டியான பாகாக காய்ச்சிக் கொள்ளவும்.
பிறகு அரிசி மாவுடன் வேக வைத்த பாசிப்பருப்பு மற்றும் வெல்லப் பாகு சேர்த்து ஒன்றாகக் கலந்து, முந்திரி, ஏலக்காய், தேங்காய்த் துருவல் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
ஒரு தட்டில் நெய் தடவி வைக்கவும். கரைத்த மாவினை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
மாவை நெய் தடவிய தட்டில் பரவலாக ஊற்றி, இட்லிப் பானையில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான தாம்பாள் பணியாரம் தயார். விருப்பமான வடிவில் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

vazhthukkal. congrats kitchen queen. sweet edu kondadu.

எல்லாம் சில‌ காலம்.....

இன்று முகப்பில் மகுடம் சூடி இருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் :)

எல்லா குறிப்பும் படங்களும் வெகு அழகு.... முக்கியமா இந்த பணியாரம் நான் ட்ரை பண்ண போறேன்... பார்க்கவே சூப்பரா இருக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Congrats kitchen queen

தாம்பாள் பணியாரம் அருமை. செய்யவும் ஈசி போல‌. வாழ்த்துக்கள் வாணி..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

இன்று கிச்சன் குயினாக‌ மகுடம் சூடியிருக்கும் வாணிக்கு என் மன‌மார்ந்த‌ வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

எப்பவும்போலவே நீங்கள் செய்து காட்டியிருக்கும் குறிப்புகள் அனைத்துமே அருமை வாணி! சூப்பர்! படங்கள் அருமையாக‌ வந்திருக்கு! வாழ்த்துக்கள்!

தோழிகளே, உங்கள் அனைவரின் வருகைக்கும், பதிவிற்க்கும் மிக்க நன்றி.

முக புத்தகத்தில் வாழ்த்திய அன்புள்ளங்களுக்கும் , லைக் தெரிவித்தவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். உங்கள் அனைவரின் அன்பும், ஆதரவும், நீங்கள் அளிக்கும் உற்ச்சாகமும் தான் மேலும் குறிப்புகளை அனுப்ப தூண்டுகோலாயிருக்கிறது.

தோழிகளின் முகப் புத்தக வாழ்த்துக்களை இமெயில் மூலம் அனுப்பிய தோழி இமாவுக்கு மிக்க நன்றி.

கிச்சன் குயின் வாணி பாராட்டுக்கள். கொங்கு, தாய்லாந்து, சீனா ன்னு ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையா செய்து அசத்தி இருக்கீங்க வாழ்த்துக்கள். படங்கள் தெளிவாக பளிச்சுன்னு இருக்கு. இன்னும் குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள் வாணி

எல்லா குறிப்புகளுமே தெளிவாகவும் , படங்கள் யாவும் அழகாகவும் உள்ளது.
தங்கள் பணி தொடர‌ வாழ்த்துக்கள்.
நன்றி.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!