துவரம்

தேதி: December 16, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழைக்காய் - 4
தேங்காய் - ஒரு மூடி
பச்சை மிளகாய் - 3
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 3
மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணெய் - சிறிது


 

தேங்காயைத் துருவி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாழைக்காய்களை தோல் நீக்கி, சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். தேங்காயுடன் பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் மற்றும் சீரகம் சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய வாழைக்காய்த் துண்டுகளைப் போட்டு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.
காய் நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும், அரைத்த தேங்காய், மிளகாய் கலவையைப் போட்டு நன்றாகக் கிளறவும்.
மற்றொரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
தாளித்தவற்றை வாழைக்காயுடன் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

vazhthukkal. congrats kitchen queen. supera iruku. kalakkureenga. கொஞ்சம் பெருங்காயம் சேர்த்து இருக்கலாம். வாழைக்காய் கொஞ்சம் வாயு ஜாஸ்தி. சரி நான் ட்ரை பண்றேன்.

எல்லாம் சில‌ காலம்.....

துவரம் சூப்பர். வாழைக்காயும் கைவசம் இருக்கு. செய்து பார்த்திட‌ வேண்டியது தான்.நல்ல‌ குறிப்புக்கு என் வாழ்த்துக்கள் வாணி..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வாழ்த்துக்கள் சிஸ்டர், ஒரு சின்ன டவுட் சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும் போது பாராசூட் பயன்படுத்தலாமா? அதில கெமிக்கல் ஏதும் சேர்த்திருக்க மாட்டாங்களா?

நானும் இதே போன்று வாழைக்காயில் துவரன் செய்வேன். ஆனால் பெருங்காயம் சேர்த்ததில்லை, ஆனால் இரண்டு பல் பூண்டு தட்டிப் போடுவேன். இந்த குறிப்பில் அவர்கள் கொடுத்திருந்ததை அப்படியே செய்தேன். அதினால் பூண்டு சேர்க்கவில்லை.
வருகைக்கும், வாழ்த்திற்க்கும் நன்றி. :))

பாராசூட் தேங்காய் எண்ணெயில் கெமிக்கல் சேர்த்திருப்பார்களா என எனக்கு தெரியவில்லை ;(( சமையலுக்கென்று தனியே தேங்காய் எண்ணெய் கிடைத்தால் அதையே நீங்கள் உபயோகிக்கலாம். வாழ்த்திற்க்கும், வருகைக்கும் மிக்க நன்றிங்க. :))

தோழிகளே, உங்கள் அனைவரின் வருகைக்கும், பதிவிற்க்கும் மிக்க நன்றி.

முக புத்தகத்தில் வாழ்த்திய அன்புள்ளங்களுக்கும், லைக் தெரிவித்தவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். உங்கள் அனைவரின் அன்பும், ஆதரவும், நீங்கள் அளிக்கும் உற்ச்சாகமும் தான் மேலும் குறிப்புகளை அனுப்ப தூண்டுகோலாயிருக்கிறது.

தோழிகளின் முகப் புத்தக வாழ்த்துக்களை இமெயில் மூலம் அனுப்பிய தோழி இமாவுக்கு மிக்க நன்றி.