நான் கிங் ஸ்டைல் நூடுல்ஸ்

தேதி: December 16, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. நித்யா கோபால் அவர்களின் சீன உணவு வகைகளில் ஒன்றான நான் கிங் ஸ்டைல் நூடுல்ஸ் என்கின்ற குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய நித்யா கோபால் அவர்களுக்கு நன்றிகள்.

 

சாதாரண நூடுல்ஸ் - ஒரு சிறிய பாக்கெட்
நறுக்கிய வெங்காயத் துண்டுகள் - ஒரு கப்
முளைக்கட்டிய பச்சைப்பயறு - ஒரு கப்
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
அஜினோமோட்டோ - அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
நூடுல்ஸ் பாக்கெட்டில் குறிப்பிட்டுள்ளபடி நூடுல்ஸைத் தயார் செய்து ஆறவைத்துக் கொள்ளவும்.
கடாயில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, நூடுல்ஸைப் போட்டு 2 அல்லது 3 நிமிடங்களுக்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அதே கடாயில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயத்தைப் போட்டு லேசாக வதக்கவும். அத்துடன் முளைக்கட்டியப் பயிறைச் சேர்த்து வதக்கி, ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
அத்துடன் உப்பு, மிளகுத் தூள், சோயா சாஸ் மற்றும் அஜினோமோட்டோ சேர்த்து 3 நிமிடங்கள் வேகவிடவும்.
கடைசியாக நூடுல்ஸைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
டேஸ்டி நான் கிங் ஸ்டைல் நூடுல்ஸ் ரெடி. பரிமாறும் போது சிவப்பு, பச்சை மிளகாய் சாஸ் சேர்த்துப் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

vazhthukkal. congrats kitchen queen. supera irukku unga noodles

எல்லாம் சில‌ காலம்.....

தோழிகளே, உங்கள் அனைவரின் வருகைக்கும், பதிவிற்க்கும் மிக்க நன்றி.

முக புத்தகத்தில் வாழ்த்திய அன்புள்ளங்களுக்கும், லைக் தெரிவித்தவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். உங்கள் அனைவரின் அன்பும், ஆதரவும், நீங்கள் அளிக்கும் உற்ச்சாகமும் தான் மேலும் குறிப்புகளை அனுப்ப தூண்டுகோலாயிருக்கிறது.

தோழிகளின் முகப் புத்தக வாழ்த்துக்களை இமெயில் மூலம் அனுப்பிய தோழி இமாவுக்கு மிக்க நன்றி.