பனினி ப்ரெட் சாண்ட்விச்

தேதி: December 16, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. விஜி அவர்களின் பனினி ப்ரெட் சாண்ட்விச் என்ற இத்தாலியன் ப்ரெட் சாண்ட்விச் குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய விஜி அவர்களுக்கு நன்றிகள்.

 

பனினி ப்ரெட் - 2
ஸ்பினாச் - சிறிது
துருவிய மொசரல்லா சீஸ் - தேவைக்கேற்ப
ரோஸ்ட் செய்த சிவப்பு காப்ஸிகம்
ஆலிவ்ஸ் கறுப்பு (இரண்டாக நறுக்கியது)
லெட்டுஸ் - சிறிது
நீளமாக நறுக்கிய சிகப்பு வெங்காயம் - ஒன்று
ஆலப்பினோ - ஒன்று (விருப்பப்பட்டால்)
ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி
பார்ஸ்லி - சிறிது
மிளகுத் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி


 

தேவையான அனைத்தையும் தயாராக வைத்துக் கொள்ளவும்.
இரண்டு ப்ரெட் ஸ்லைஸ்களிலும் சிறிது ஆலிவ் எண்ணெயைத் தடவவும்
ப்ரெட்டின் ஒரு பாகத்தில் ஸ்பினாச், ஆலிவ்ஸ், ரோஸ்டட் சிகப்பு காப்ஸிகம், லெட்டுஸ், வெங்காயம், ஆலப்பினோ, சீஸ் ஆகிய அனைத்தையும் வைக்கவும்.
அதை மற்றொரு பாதி ப்ரெட்டால் மூடி 5 நிமிடங்கள் டோஸ்ட் செய்து எடுக்கவும்.
டேஸ்டி பனினி ப்ரெட் சாண்ட்விச் ரெடி.

இந்த இத்தாலியன் ப்ரெட் சாண்ட்விச்சை, சாண்ட்விச் மேக்கரில் செய்தால் நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

superb vani. kalakkala iruku. பாருங்க‌ எல்லாத்துக்கும் நான் தா ஃப்ஸ்ட் கமென்ட் குடுத்து இருக்கேன். தனியா ஸ்வீட் அனுப்புங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

வாணி,
வாழ்த்துக்கள் குயின்..
பளிச்பளிச் படங்கள்,அதனையும் அழகு

என்றும் அன்புடன்,
கவிதா

இன்றைய‌ கிச்சன் குயின் வாணிக்கு என் பாராட்டுக்கள். எல்லா குறிப்பும் அருமை. மேலும் குறிப்புகள் கொடுக்க‌ என் வாழ்த்துக்கள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

கிச்ச்ன் குயின் வாணீக்கு வாழ்த்துக்கள் . எல்லா ரெசிபியும் கலக்க்ல்.

Be simple be sample

பனினி ப்ரெட் சாண்ட்விச் சுப்பரா இருக்கு.வாழ்த்துக்கள்.

இன்றைய‌ கிச்சன் குயின் வாணிக்கு என் வாழ்த்துக்கள் :) வித விதமான குறிப்புகள் சூப்பர்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தோழிகளே, உங்கள் அனைவரின் வருகைக்கும், பதிவிற்க்கும் மிக்க நன்றி.
முக புத்தகத்தில் வாழ்த்திய அன்புள்ளங்களுக்கும் , லைக் தெரிவித்தவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். உங்கள் அனைவரின் அன்பும், ஆதரவும், நீங்கள் அளிக்கும் உற்ச்சாகமும் தான் மேலும் குறிப்புகளை அனுப்ப தூண்டுகோலாயிருக்கிறது.
தோழிகளின் முகப் புத்தக வாழ்த்துக்களை இமெயில் மூலம் அனுப்பிய தோழி இமாவுக்கு மிக்க நன்றி.