பேரீச்சம் பழ ஜாம்

தேதி: December 17, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ச.பிரியா அவர்களின் பேரீச்சம் பழ ஜாம் குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய பிரியா அவர்களுக்கு நன்றிகள்.

 

பேரீச்சம் பழம் - கால் கிலோ
தக்காளி பழம் - கால் கிலோ
சர்க்கரை - 2 கப்
ஏலக்காய் - 10
முந்திரி - 10 கிராம்
கேசரி பவுடர் - சிறிது


 

பேரீச்சம் பழம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மற்ற தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் தண்ணீர் ஊற்றி, கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும்.
அத்துடன் நறுக்கிய பேரீச்சம் பழம் மற்றும் தக்காளியைப் போட்டு 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.
பிறகு கேசரி பவுடர், ஏலக்காய் போட்டு 10 நிமிடங்கள் வேகவிட்டு, வறுத்த முந்திரியைச் சேர்த்து இறக்கவும்.
சுவையான பேரீச்சம் பழ ஜாம் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

vaazththukkal. congrats kitchen queen. எல்லாமே superஅ இருக்கு. பேரிச்சை ஸ்வீட் எடு கொண்டடு. கலக்கல்.

எல்லாம் சில‌ காலம்.....

எனது குறிப்புகளை தேர்வு செய்து வெளிவிட்டமைக்கு எனது மனமார்ந்த‌ நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன், மேலும் என்னை ஊக்கப்படுத்திய‌ அறுசுவை தோழிகளுக்கும் என் மனமார்ந்த‌ நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

பேரிச்சை ஜாம் எளிமையாக‌ உள்ளது. வாழ்த்துக்கள்!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

இன்றைய‌ கிச்சன் குயின் ஹேமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அனைத்து குறிப்புகளுமே வித்தியசமா, நல்லா இருக்குங்க!
மேலும் நிறைய‌ குறிப்புகள் வழங்க‌ வாழ்த்துக்கள்.

ஆகா!!! எல்லா படங்களையும் முகபுத்தகத்தில் பார்த்ததை விட இங்கே முகப்பில் பார்க்க தான் மகிழ்ச்சியா இருக்கு :) மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஹேமா... தொடர்ந்து எல்லா பகுதிகளிலும் கலக்கணும்னு அன்போடு கேட்டுக்கறேன். எல்லா குறிப்பும் ஒவ்வொரு வகையா இருக்கு... நிச்சயம் எதாவது ஒரு குறிப்பை முயற்சி பண்ணி முகபுத்தகத்தில் படம் போடுவேன். நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா