மோர் குழம்பு

தேதி: December 17, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

திருமதி. கீதா ஆச்சல் அவர்கள் வழங்கியுள்ள மோர் குழம்பு குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு இங்கே விளக்கப்படங்களுடன் செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய கீதா ஆச்சல் அவர்களுக்கு நன்றிகள்.

 

தயிர் - 2 கப்
கடலை மாவு - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பிலை - 5 இலைகள்
கொத்தமல்லித் தழை - கால் கட்டு
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி


 

தேவையான அனைத்தையும் தயாராக வைக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கொத்தமல்லித் தழையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலை மாவில் சிறிது தயிர் சேர்த்து கட்டிகளில்லாமல் நன்றாகக் கலந்து கொள்ளவும்.
அத்துடன் மீதமிருக்கும் தயிரையும் சேர்த்து நன்றாகக் கலந்து, மஞ்சள் தூள், உப்பு மற்றும் 2 அல்லது 3 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளிக்கவும். பிறகு சீரகம் சேர்த்து, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றுடன் கரைத்து வைத்துள்ள கடலை மாவு தயிர் கலவையை ஊற்றி நன்றாகக் கொதிக்கவிடவும். மிதமான தீயில் சுமார் 20 நிமிடங்கள் வைத்திருக்கவும். கடைசியாக பொடியாக நறுக்கிய இஞ்சி, பெருங்காயத் தூள் மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.
மிகவும் சுவையான மோர் குழம்பு ரெடி. விரும்பினால் கடைசியில் எலுமிச்சைச் சாறு பிழிந்து கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்