பேல் பூரி

தேதி: December 17, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திரு. சந்தீப் அவர்களின் பேல் பூரி என்ற குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சந்தீப் அவர்களுக்கு நன்றிகள்.

 

கோதுமை மாவு - ஒரு டம்ளர்
பேரீச்சம் பழம் - 150 கிராம்
புளி - 25 கிராம்
வெல்லம் - 100 கிராம்
கடலைப்பருப்பு - 25 கிராம்
அரிசிப் பொரி - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 4
உருளைக்கிழங்கு - 4
பச்சை மிளகாய் - 15
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி + கால் தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கோதுமை மாவுடன் ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டுப் பூரி மாவு பதத்திற்கு பிசைந்து 5 நிமிடங்கள் ஊறவிடவும்.
5 நிமிடங்களுக்குப் பிறகு மாவை எடுத்து மிகச் சிறிய பூரிகளாக இட்டு, எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
விதை நீக்கிய பேரீச்சம் பழத்தையும், புளியையும் மூன்று கப் தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்து, அதை நன்றாகக் கடைந்துவிட்டு வெல்லத்தைச் சேர்த்துக் கலந்து சட்னியைத் தயாராக வைக்கவும்.
கடலைப்பருப்புடன் பச்சை மிளகாயைச் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
அத்துடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்துக் கலந்து சட்னியைத் தயாராக வைத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசிப் பொரியைப் போட்டு, அதில் பொரித்தெடுத்த பூரியை நொறுக்கிப் போட்டுக் கொள்ளவும். அத்துடன் உப்பு, கால் தேக்கரண்டி மிளகாய்த் தூள், வேக வைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
கலந்து வைத்துள்ள பூரிக் கலவையில் தேவையான அளவிற்கு இரண்டு சட்னிகளையும் சேர்த்துப் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாழ்த்துக்கள் ஹேமா. எல்லாக்குறிப்பும் சூப்பரா இருக்கு. இனி நிறைய குறிப்புகள் வரணும்.

Be simple be sample

வாழ்த்துக்கள் ஹேமா
எல்லா குறிப்பும் தெளிவா கொடுத்து இருக்கீங்க
பாராட்டுகள்

என்றும் அன்புடன்,
கவிதா

ரொம்ப‌ நன்றிப்பா, இனிமே என்னோட ஆத்துக்காரர்ட்ட‌ சொல்லி ஒரு கேமரா வாங்கணும் எல்லாமே சேம்சங்க் டேஃப்ல‌ தான் எடுத்தேன்ப்பா, அதுவும் நம்ம‌ ஊர்ல‌ எல்லா கலர்ஃபுல் ப்ளேட்ஸ்லாம் இருக்குப்பா, இங்க‌ சிங்கப்பூர்ல‌ இருக்கேன்ப்பா அதான் வீட்ல‌ இருக்கறத‌ வெச்சி டெக்கரேஷன்ப்பா. அதுவும் என்னோட‌ கிச்சன் குயின்ல‌ கலந்துகிட்டவங்க‌ எல்லாமே பிச்சி உதறிங்க‌..

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா